மூன்று பாகங்கள் முதல் பாகம்-பக்கங்கள் 446. விலை: ரூ.160, இரண் டாம் பாகம் - பக்கங்கள் 454, மூன்றாம் பாகம் - பக்கங்கள் 401. விலை: ரூ.150. பதிப்பகம்: அவென்யூ பிரஸ், 9-டி, சில்வா ரோடு, மயிலாப்பூர், சென்னை-600 004. போன்: 044-24990153. பேராசிரியர் கல்கி எழுதிய மகத்தான சரித்திர நாவல், பொன்னியின் செல்வன். கல்கியின் படைப்புக்கு மெருகூட்டும் வகையில், ஓவியர் மணியம் வரைந்த அதி அற்புதமான சித்திரங்கள். லட்சோபலட்சம் வாசகர்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றுள்ள இந்த நாவலின் தொடர்ச்சியாக, அனுஷா வெங்கடேஷ் காவிரி மைந்தனை எழுதியிருக்கிறார். இதற்கு முன்னர், "அமுதசுரபி' மாத இதழில் எழுத்தாளர் விக்ரமன், "நந்திபுரத்து நாயகி' என்ற தலைப்பில் எழுதிய நாவல் பரபரப்பாக பேசப்பட்டது. கல்கியின் எழுத்துக்களைப் படிக்கும் எழுத்தாள வாசகர்களுக்கு அவரைப் போல எழுதிப் பார்க்க ஆசை எழுவது இயல்பு. "காவிரி மைந்தனை' எழுதியுள்ள ஆசிரியர், தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு, ஈடுபாட்டுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதை நாவலை வாசிக்கும் போது உணர்கிறோம். ஆனால், வார இதழில் ஓவியங்களுடன் "கல்கி'யின் எழுத்தைப் படித்த அதே உணர்வை பெற்றதாக சொல்வது சற்று சிரமம், ஏறத்தாழ இரண்டரை ஆண்டுக் காலம் கல்கி இதழில், வாசகர்களுடன் உறவாடி அளவளாவிய வந்தியத் தேவனும், குந்தவையும், வானதியும், நந்தினியும், பழுவேட்டரையரும், ரவிதாஸனும், ஆழ்வார்க்கடியானும் இன்னும் பல பாத்திரங்களும் மனத்திரையிலிருந்து அகல மறுக்கும் வார்ப்புக்கள்.அனுஷா வெங்கடேஷின் நாவலில், கல்கி படைத்த பாத்திரங்கள் வருகின்றன. கல்கியின் பாணியில் கதை விறுவிறுப்புடன் நகர்கிறது. ஆழ்வார்க்கடியானின் உரையாடலில் நகைச்சுவை வெளி ப்படுகிறது. அத்தியாயம் முடியும்போது சஸ்பென்சும், பின்னர் சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையில் சஸ்பென்சின் தொடர்ச்சியை இரண்டு, மூன்று அத்தியாயங்களுக்குப் பின்பு வாசகனின் நினைவுத்தடத்திற்கு கொண்டு வரும் உத்தியை, கல்கி போல் இவரும் கையாண்டிருக்கிறார். ஒரிஜினல் கதைக்கு பங்கம் ஏற்படாத வகையில், ஆங்காங்கு சில மாற்றங்களை, கதையின் போக்குக்கு ஏற்ப அமைத்துக் கொண்டிருக்கிறார். "லோகா' என்ற கதாபாத்திரம் அ.வெங்கடேஷின் சேர்க்கை. கந்தமாறன், இதில் கதாநாயக அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.ஏழைப்பெண் பூங்குழலி மதுராந்தகனை மணப்பதும், ஊமைநாச்சியாருக்கு பொன்னியின் செல்வர் ஆலயம் கட்டுவதும், சோழப்பேரரசு தனது எல்லைகளை விரிவுபடுத்துவதுமாக கதை, அந்தக்கால காவிரி போல குதியாட்டம் போட்டுக் கொண்டு பயணிக்கிறது.பாண்டிய நாட்டின் பிரதிநிதியான ரவிதாசனின் சதிகள் முறியடிக்கப்படுவதும், கந்தமாறன், லோகாவை மணக்க முடியாமல் போவதும், ராஜேந்திரனை வளர்க்கும் பொறுப்பை லோகா ஏற்பதுமாக கதை முழுவதும் விறு விறுப்பான சம்பவங்கள். புத்தகத்திலிருந்து கவனத்தை வேறு பக்கம் திருப்புவது மிகவும் சிரமம்.காவிரி மைந்தனை மிக நேர்த்தியாக, அநேக கதாபாத்திரங்கள் இருந்த போதிலும் வாசகனுக்கு குழப்பம் ஏற்படாமல் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் ஆசிரியர். பொன்னியின் செல்வனைப் படித்தவர்களால் மட்டுமே இந்த நாவலைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும். முன்னுரையில் ஆசிரியர் பொன்னியின் செல்வனில் கல்கி எழுதியிருந்த முடிவுரையை எடுத்துப் போட்டிருக்கலாம்.கதையை முடிக்கும் போது, ரவிதாசனை உயிருடன் விட்டு வைத்திருப்பதைப் பார்க்கும் போது, வேறு ஒரு எழுத்தாளருக்கு, காவிரி மைந்தனைத் தொடர்ந்து ஒரு நாவல் படைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் எண்ணம் இருக்கும் போல் தெரிகிறது.ஆற்றொழுக்குப் ப
-
ஜெய் சக்தியின் நாவல்களில் ஒரு மென்மையும், இதமும் உண்டு!காதலிக்கும், பெண்ணின் சகோதரருக்கும் பல சலுகைகளை வழங்கிவிட்டு, அதனால் பல சங்கடங்களுக்கு ஆளாகும் ஒரு தொழில் அதிபரின் கதையை நன்றாகச் சொல்லி இருக்கிறார்.பழைய பீம் சிங் திரைப்படத்தைப் பார்ப்பது போல், இதமளிக்கும் குடும்பச் சித்திரம்!ஸ்ரீ செல்வ நிலையம், 32/1, கவுடியா மடம் சாலை, ராயப் பேட்டை, சென்னை-14.
-
துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பறியும் கதைகள் படிக்கும் ஆர்வம் மிக்கத் தமிழ் ரசிகர்களுக்கு இந்த நூல்கள் மிகத் திருப்தியை அளிக்கும். தெளிவான மொழிபெயர்ப்பு.கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: (1)328. விலை: ரூ.100. பக்கம்(2): 288.
-
கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 248)பிரபல நாடக எழுத்தாளரான விக்டர் தனது மனைவி, குழந்தை, வேலைக்காரன் மற்றும் நாயுடன் பண்ணை வீட்டில் தங்கி தனது அடுத்த படைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.ஒரு நாள் காலை விக்டர் எழுந்து பார்த்தபோது வேலைக்காரனையும், நாயையும், துப்பாக்கிகளையும் காணவில்லை. தொலைபேசி வேலை செய்யவில்லை. காரின் ஸ்பார்க் பிளக்குகளும் காணவில்லை. ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் மர்ம நாவலின் ஆரம்பமே இப்படி நெஞ்சை உறைய வைக்கிறது. நூலைப் படித்து முடித்து விட்டுத்தான் கீழே வைக்கத் தோன்றும்.மர்ம நாவல் பிரியர்களுக்கு தமிழில் ஜேம்ஸ் ஹார்ட் சேஸின் நாவல்களைப் படிக்கும் வாய்ப்பை கண்ணதாசன் பதிப்பகம் ஏற்படுத்தித் தந்துள்ளது பாராட்டத்தக்கது.
-
கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: (1)328. பக்கம்; (2) 288) துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பறியும் கதைகள் படிக்கும் ஆர்வம் மிக்கத் தமிழ் ரசிகர்களுக்கு இந்த நூல்கள் மிகத் திருப்தியை அளிக்கும். தெளிவான மொழிபெயர்ப்பு.
-
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.பணக்காரரான லியோனைட் எனும் எண்பது வயதைக் கடந்த தாத்தா இல்லாமல் இருக்கவே முடியாது என்ற பாசப் பிணைப்பான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு மிகப் பெரிய கூட்டுக் குடும்பம். எதிர்பாராது லியோனைட் மரணிக்கிறார். இயற்கையாய் அல்ல, விஷம் வைத்து. யார், எதற்காக அத்தனை முதியவரைப் போய் ஈவிரக்கமின்றி கொன்றது? இக் கேள்வியைத் துரத்திக் கொண்டு துப்பறிதல் சூடு பறக்கத் துவங்குகிறது. எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காத ஓர் அற்புத த்ரில்லர்தான் குரூர வீடு.
-
காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 177). "நவீன ஓவியம்' படைப்பு, படைப்பாளர், பார்வையாளர், நிலைப்பாடுகளை முன்னிறுத்தி நவீன ஓவியர்களிடமும் படைப்பு - படைப்பாளர் குறித்து கலை இலக்கிய விமர்சகர்களாக அறியபட்டவர்களிடமும் நேரில் சந்தித்தும் விடைபெற்றதும் நூல் வடிவம் பெற்றுள்ளது. முனைவர் பட்ட ஆய்வாளரின் இந்த கலை விமர்சனக் கட்டுரைகள் தமிழுக்குப் புதிது; தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இதற்கு நிதி வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. இந்தப் புத்தகம் ஓவியக் கலைஞர்களைப் பற்றியது. சிறப்பான தகவல்களின் பெட்டகம். படித்துப் பாருங்கள். பாராட்ட வார்த்தைகளைத் தேடுவீர்கள்
-
ஸ்ரீ செண்பாக பதிப்பகம், 34 பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை- 17நாமக்கல் கவிஞர் சிறந்த தேசியக் கவிஞர் என்பது எல்லாரும் அறிந்த செய்தி. கவிஞரவர்கள் சிறந்த கதையாசிரியரும் ஆவார். "மலைக் கள்ளன்' என்ற இவரது கதை சிறந்த திரைப்படமாக வெளிவந்து பெரு வெற்றி பெற்றது.இந்நூலுள் கவிஞர், தம் தந்தையார் சொல்வது போலவும், தாயார் சொல்வது போலவும் கதைகள் படைத்துள்ளார். சங்கிலிக்குறவன், கோவில் திருட்டு, இலுப்ப மர பிசாசு எனும் கதைகள் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள், கேட்டறிந்த சுவையான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். உணர்வும், உற்சாகமும் தரும் தமிழ் நடை. யாவரும் படித்துச் சுவைக்க வேண்டிய நூல் இது.
-
பழனியப்பா பிரதர்ஸ். கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 104). சிறுவர்களுக்கான இலக்கியமே ஒரு நாட்டின் உயர்வு என்பர். சிறு வயதிலேயே அவர்கள் மனதில் நல்லதை விதைத்து விட்டால், அது செடியாக, மரமாகி அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்ல பலன் கிடைக்கச் செய்யும் என்பது கண்கூடு. இந்நூலில் மொத்தம் 20 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு சிறுகதைகளும் ஒவ்வொரு நீதியை சொல்கின்றன. சிறுவர்களை நல்வழிப்படுத்த இத்தகைய நூல்கள் பயன்படும் என்பது நிதர்சன உண்மை. உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு வாங்கி, படிக்க கொடுங்கள்.
-
ஸ்ரீசெல்வ நிலையம், 32/1, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 225)இரண்டு குறு நாவல்கள் அடங்கிய தொகுதி. பாப்புலர் மாத நாவல் இலக்கணத்திற்கு ஏற்ப எழுதப்பட்ட நாவல்கள்."பூ ஒன்று பூத்தது' - நாவலின் கதாநாயகன் தான் விரும்பிய பெண்ணை மணக்க முடியாமல் போனதற்குக் காரணம், மூட நம்பிக்கையே என்று நிறுவுகிறார். "திசை மாறிய பறவை' - என்ற நாவலில் கல்யாணம் ஆகும் முன்னரே கன்னிப் பெண்கள் உடல் உறவில் ஈடுபடுவதால் நிகழும் கேடுகளைச் சொல்கிறார்.சில இடங்களில் கவிதா பூர்வமான வர்ணனைகள் நாவல்களுக்குத் தனி அழகைத் தருகின்றன.
-
மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்.1447. 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 284)புதினம் பத்தாவது ஆண்டு விழாவை ஒட்டி உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகளும், ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதைகளுமாக இத்தொகுதியில் 23 கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுதியவர்கள், கனடா, சுவிஸ், இலங்கை, தமிழகம் என பல நாட்டவர். எனவே கதைக் களங்களும், உலகளவில் உள்ளது. பல கதைகள் இலங்கைத் தமிழில் இருப்பினும் புரிந்து கொண்டு படித்து ரசிக்க முடிகிறது. பன்னாட்டு சிறுகதை விருந்து.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
மணிமேகலை பிரசுரம், சென்னை-17. (பக்கம்: 332) படைப்பாளியாக தான் உருவாகக் காரணமான சிங்கப்பூர் நகருக்கும், அதன் அனைத்து குடிமக்களுக்கும் இந்நூலை சமர்ப்பணம் செய்திருப்பது வித்தியாசமானது. புதுமையானது வாசகராக இருந்து நிறைய நூல்களை படித்து 1995ல் எழுத ஆரம்பித்து, பல பிரபல பத்திரிகைகளிலும் எழுதி பரிசும் பெற்றுள்ள இவரது ஆர்வம் வியக்க வைக்கிறது.சிங்கப்பூர் கதைக்களத்தில் சீனக்கிழவி வருகிறாள். மலாயக்காரர்கள் வருகின்றனர். கலாசாரம் சங்கமம். நமக்கோ வித்தியாசமான கதைகள் கிடைத்துவிட்டன.ஆசிரியையின் எழுத்துப்பணி சிறக்க படிக்கும் வாசகர்கள் நிச்சயம் வாழ்த்துவர்.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. (குறிஞ்சி மலர்-பக்கம்: 387)நா.பார்த்தசாரதி, நல்ல லட்சியம் சார்ந்த அருமையான பல நவீனங்களை எழுதி, தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர். உயரிய ரசனைக்கு உரமிட்டு வளம் தந்தவை அவருடைய படைப்புகள். அமரர் நா.பா.வின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், தற்போது பரவலாக வெளிவரத் துவங்கியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனலாம். குறிஞ்சிமலர் நவீனம் வாசித்து, அதன் கதாநாயகன் அரவிந்தன், கதாநாயகி பூரணி பெயரை ஏராளம் பேர் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததுண்டு. இவ்வாறு நா.பா.வின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மிச்சிறந்த பதிப்பாக வெளிவந்துள்ளன. நா.பா.வின் இதர படைப்புகளும் தொடர்ந்து வெளிவரவேண்டும். படித்து மகிழ்வதற்கு மட்டுமல்லாது, பண்பாட்டை வளர்க்கத் தூண்டுதலாகவும் துணை புரிவனவாகவும் உள்ள ஒப்பற்ற இலக்கியப் பேழைகள் இவை.
-
சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.(பொன்விலங்கு - பக்கம்: 615)நா.பார்த்தசாரதி, நல்ல லட்சியம் சார்ந்த அருமையான பல நவீனங்களை எழுதி, தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர். உயரிய ரசனைக்கு உரமிட்டு வளம் தந்தவை அவருடைய படைப்புகள். அமரர் நா.பா.வின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், தற்போது பரவலாக வெளிவரத் துவங்கியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனலாம். குறிஞ்சிமலர் நவீனம் வாசித்து, அதன் கதாநாயகன் அரவிந்தன், கதாநாயகி பூரணி பெயரை ஏராளம் பேர் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததுண்டு. இவ்வாறு நா.பா.வின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மிச்சிறந்த பதிப்பாக வெளிவந்துள்ளன. நா.பா.வின் இதர படைப்புகளும் தொடர்ந்து வெளிவரவேண்டும். படித்து மகிழ்வதற்கு மட்டுமல்லாது, பண்பாட்டை வளர்க்கத் தூண்டுதலாகவும் துணை புரிவனவாகவும் உள்ள ஒப்பற்ற இலக்கியப் பேழைகள் இவை.
-
சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. ( பாண்டிமா தேவி - பக்கம்:640)நா.பார்த்தசாரதி, நல்ல லட்சியம் சார்ந்த அருமையான பல நவீனங்களை எழுதி, தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர். உயரிய ரசனைக்கு உரமிட்டு வளம் தந்தவை அவருடைய படைப்புகள். அமரர் நா.பா.வின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், தற்போது பரவலாக வெளிவரத் துவங்கியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனலாம். குறிஞ்சிமலர் நவீனம் வாசித்து, அதன் கதாநாயகன் அரவிந்தன், கதாநாயகி பூரணி பெயரை ஏராளம் பேர் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததுண்டு. இவ்வாறு நா.பா.வின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மிச்சிறந்த பதிப்பாக வெளிவந்துள்ளன. நா.பா.வின் இதர படைப்புகளும் தொடர்ந்து வெளிவரவேண்டும். படித்து மகிழ்வதற்கு மட்டுமல்லாது, பண்பாட்டை வளர்க்கத் தூண்டுதலாகவும் துணை புரிவனவாகவும் உள்ள ஒப்பற்ற இலக்கியப் பேழைகள் இவை.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
-
உஷா முத்துராமன். வெளியீடு: மணிமேகலை பிரசுரம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 186.). 25 குடும்பப்பாங்கான சிறுகதைகள். ராஜேஷ்குமார், தேவிபாலா இச்சிறுகதைகளை பாராட்டி அணிந்துரை வழங்கியுள்ளதன் மூலம் சிறுகதைகளின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
-
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 128).திருக்குறளின் அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் காதல் பாலைக் கலந்து தரப்பட்ட கதைகளின் தொகுப்பு இந்த நூல். 26 குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் பொருத்தமாகக் காதல் கதைகளை உருவாக்கியுள்ளார் கவுதம். சாதாரணமாக வரும் குறள் நெறிக் கதைகளைப் போல் அல்லாமல் இயல்பான தன்மையுடன் இவை எழுதப்பட்டுள்ளதால் எல்லாத் தரப்பினரையும் கவரும் எனலாம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்