செல்லப்பிள்ளைகளாய் வளர்த்தும், செல்லும் இடங்களிலெல்லாம் ரசித்தும் மக்கள் பரவசப்படும் பறவைகளின் பரிணாம வளர்ச்சிகளையும், கோட்பாடுகளையும் அவற்றின் உடலியக்கத்தில் உள்ள அற்புதமான அறிவியல் அருமைகளையும் உள்ளடக்கிய நூல் இது. பண்டைய காலம்தொட்டு தூதாக, அமைதியின் அடையாளமாக, இலக்கிய அங்கமாக, விளையாட்டுப் பொருளாக, பந்தயம் நடத்த, ஆரூடம் பார்க்க, புராணப்புனைவுகளில் இறை வாகனங்களாக, மூதாதையரின் நினைவூட்டிகளாக வாழ்ந்து, இன்றும் நாகரிக அடையாளமாகவும், தேசிய சின்னமாகவும் விளங்கும் பறவையினத்தின் வரலாறு பயில பயில வியப்பைத்தரும். பறவையினத்தின் தோற்றத்தை விரித்துரைக்கும் முன், ‘பிக்பாங்க்’ கோட்பாடு, பால்வெளி மண்டலங்கள், நட்சத்திரத் தொகுப்புகள், சூரியக்குடும்பத்தின் தோற்றம், ஒளி, வெப்பம், அணுக்கதிர் வீச்சு ஆகியவற்றால் பால்வெளியில் தகிப்பு போன்ற பல்வேறு புவியியல் தகவல்களும் நூலில் இடம்பெற்று உள்ளன. இடையிடையே ஏற்பட்ட மாபெரும் இன அழிவுகளும், அவற்றுக்கான முக்கிய காரணங்களும், அவற்றிற்குப் பிந்தைய மீட்சிகளும் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. பாலூட்டிகளின் ஆரம்ப காலமாகக் கருதப்படும், 18 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய லியோசின் காலத்தில், இரு கால்களில் நடக்கும் மனித இனம் பரிணமித்ததாகவும், பிந்தைய ஜுராசிக் காலத்தில் பறவையினம் மரம் சார்ந்த டைனோசர்களிடம் இருந்தே பரிணமித்திருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.முன்னொரு காலத்தில் எழுதுபொருளாகவும், ஓவியத் தூரிகையாகவும்கூட பயன்படுத்தப்பட்ட இலகுவான இறகுகளுக்குப் பின்னால் உள்ள வலிமையான அறிவியல் உண்மைகள், படிப்போரை வியக்க வைக்கும். நிலம் விட்டு உயிரெழும்ப, வானத்தில் பறக்க, உயர்வெளியில் மிதக்க, திசைகள் மாற்ற, காற்றழுத்தம் எதிர்கொள்ள, குஞ்சுகளுக்காக நீர் சேமித்துக்கொணர, உடல் வெப்பம் சீராகக் காக்க, தன்னைத்தானே பாதுகாக்க, தோலின் தூய்மை காக்க, இனப்பெருக்க கருவியாக உதவும் இறகுகளின் பல நுட்பமான விபரங்களை நூதனமாகப் பகர்கிறது இந்நூல். பறவைக்கு பறவை வேறுபடும் சுவாச மற்றும் ரத்த ஓட்ட மண்டலங்களின் செயல்பாடுகள், அலகுகளின் அளவுகள், குரல் வளங்கள், கண்கள், இனவிருத்திக்கு ஆயத்தமாக்க வைக்கும் பருவகால வாசனைகள் போன்ற அரிய செய்திகளும் நூலில் உள்ளன. பறவைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வு முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. அறிவியல் அறிஞர் அரிஸ்டாட்டில் தான் முதன் முதலில் பறவைகள் பற்றியும் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோட்டோவியங்களை இன்னும் தெளிவாகக் காட்டியிருக்கலாம். இந்நூலை, புரிந்துணரக்கூடிய சீரான தமிழ் நடையில் உருவாக்கியிருக்கும் நூலாசிரியர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. –மெய்ஞானி பிரபாகரபாபு
- அறிவியல்
- பறவையியல்
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் அறிவியல்
விண்வெளியின் கதை
கே.என். சரஸ்வதி, பப்ளிகேஷன்ஸ்
அறிவியல்
ஆசிரியர் : மெ.மெய்யப்பன், வெளியீடு : தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை : 10.50)
அறிவியல் என்றால் என்ன?
சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
அறிவியல்
வானவியல், பூமியைப் பற்றிய அறிவியல்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சமூக அறிவியல்கள், இன்றைய அறிவியல், 10 பிரிவுகளில் பயனுள்ள முறையில் எழுதப்பட்டுள்ளன. மாணவர்கள் படித்து பயன் பெறலாம்.
கணினி ஓர் அறிமுகம்
தமிழ் புத்தகாலயம்
அறிவியல்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17
ஐ.டி தகவல் தொழில் நுட்பம்
தமிழ் புத்தகாலயம்
அறிவியல்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
உலகத்தை வளமாக்கும் உலோகங்கள்
தமிழ் புத்தகாலயம்
அறிவியல்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17 .
மைக்ரோசாப்ட் விண்டோஸ்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
டிரீம் வீவர்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
வேர்டு2002 ஆபிஸ்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
வேர்டு 2000 டிப்ஸ் 2002
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
மைக்ரோசாப்ட் பிரண்ட்பேஜ் 2000
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
கணிப்பொறியின் அடிப்படை
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
கோரல்டிரா 9
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
விஷூவல் பாக்ஸ்புரோ
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை தியாகராய நகர் சென்னை -600 017 .
இண்டர்நெட்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
10 நாட்களில் ஹெச்டிஎம்எல் மற்றும் டிஹெச்டிஎம்எல்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
எளிய தமிழில் எம்எஸ்டாஸ்6.0 ,6.2
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
பாக்ஸ்புரோ
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 5
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
அவுட் லுக் எக்ஸ்பிரஸ்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
எம் எஸ் வேர்ட் 2000
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .