மணிவாசகர் பதிப்பகம், 31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600108;
- முத்தமிழ்
- முத்தமிழுக்கு மேல் ஒரு தமிழா?
முத்தமிழுக்கு மேல் ஒரு தமிழா?
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் முத்தமிழ்
ஸ்ரீ தீக்ஷித கீர்த்தன மாலா (11வது பாகம்):
மியூசிக் புக்ஸ் பப்ளிஷர்ஸ்
முத்தமிழ்
நூலாசிரியர்: கல்லிடைக்குறிச்சி வைணீக வித்வான்கள் ஏ.சுந்தரமய்யர், எஸ்.வேங்கடேசன். தமிழாக்கம்: டாக்டர் ஆர்.தியாகராஜன். வெளியீடு: மியூசிக் புக்ஸ் பப்ளிஷர்ஸ், பு.எண்.4 (ப.எண்.51), மேல் மாடி, அலர்மேலுமங்காபுரம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்:௧௪௦).* கர்நாடக சங்கீதம் பயின்று வருபவர்களுக்கும், சொல்லித் தருபவர்களுக்கும் நன்கு அறிமுகமான இந்நூலாசிரியர்கள். ஸ்ரீதீட்சித கீர்த்தனமாலா எனும் வரிசையில், வெளியிட்டுள்ள பதினொன்றாவது பாகம் இந்நூல். ஒன்பதாவது `ப்ரஹ்ம சக்ரத்தின்' ஆறு மேளகர்த்தா ராகங்களுக்கு, கீர்த்தனைகளுடன் பல புதிய, அபூர்வ ராகங்களில் அமைந்ததுமான மொத்தம் 33 கீர்த்தனைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. `ஷட்ராக மாலிகா' ஒன்றும், நோட்டு - ஸ்வரசாகித்யமாக அமைந்த ஐந்து சிறிய கீர்த்தனைகளும், ஷ்ரீ சுப்பராம தீட்சிதரின் மூன்று அருமையான கிருதிகளும் உள்ளன. கீர்த்தனைகளின் ராக லட்சணங்கள், வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம், கருத்துரைகள் யாவும் இசை பயிலுவோருக்கு பாவத்துடன் பாடப் பெரிதும் உதவிடும்.பிழையற்ற அச்சுப் பதிப்பு, தரமான தாள், கண் கவர் அட்டை இந்நூலின் பிற அணிகலன்கள்.சங்கீத வித்வான்களுக்கும், மாணாக்கர்களுக்கும் இனியதோர் பொக்கிஷம் இந்நூல்.
திரைக்கதை பயில்வோம்
கவிதா பப்ளிகேஷன்
முத்தமிழ்
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
பாரதிதாசன் கதைப் பாடல்கள்
கவிதா பப்ளிகேஷன்
முத்தமிழ்
தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017
வேமனாவின் பாடல்கள்
ஆசிரியர்
முத்தமிழ்
298, பகுதி-5, த.நா.வ.வா., திருப்பத்தூர் வே.மா., - 635 601. (பக்கம்: 52).* தெலுங்கு இலக்கியத்தில் புகழ் பெற்றவர் வேமனா. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவரின் பாடல்களில் 200 துளிகள் மொழி பெயர்ப்பாக இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன.
மருதநிலத்து மள்ளர் இசை (பள்ளிசை)
மாமன்னர் அச்சகம்
முத்தமிழ்
மாமன்னர் அச்சகம், 10/2, நால்வர் நகர், மருதமலை ரோடு, கோயமுத்தூர் -641046. (பக்கம் 316) * மருதநில உழவர்களாக தேவேந் திர வம்சத்து மள்ளர், குடும்பர், பண்ணாடி ஆகியோரை பள்ளு நூல்கள் காட்டும் கருத்து செம்மையாக இதில் இடம் பெற்றிருக் கிறது. இவருக்கு பள்ளு இலக்கியம் வெகுவாகக் கைகொடுத்திருக்கிறது. மள்ளர் வாழ்வியல் பெருமைகளை அதில் படம் பிடிக்கிறார். விஜயநகர ஆட்சிக்காலம் மள்ளர் மரபினரை ஒடுக்கியது என்றும், அதற்கும் மேல் ஒருபடியாக தெலுங்கர்கள் கட்டுப்பாடற்ற முரட்டுக் கூட்டம் என்று கால்டுவெல் கூறிய தகவல் (பக்கம் 105) படிப்போரைச் சிந்திக்க வைப்பவை. தேவேந்திர குல வேளாளர் உட்பிரிவுகள் அத்தனையும் பட்டியலாக (பக்கம் 289) தரப்பட்டிருக்கிறது. சங்க காலப் பாடல்களுக்கும் பள்ளுப்பாடல்களில் உள்ள முரண்பாடுகள் உட்பட பல புதிய கருத்துக்களும் இந்தநூலில் உண்டு
அக்கினிக்குஞ்சு
காந்திய இலக்கிய சங்கம்
முத்தமிழ்
காந்திய இலக்கிய சங்கம், காந்தி மியூசிய வளாகம், மதுரை- 625020.( பக்கம் 122; )* அக்கினிக்குஞ்சு நூலில் லட்சியங்களைக் கொண்ட எட்டுப் பேரின் வாழ்க்கையை கவிதை நாடகமாக்கியிருக்கிறார்
ராமாநுஜர்
தமிழ் புத்தகாலயம்
முத்தமிழ்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
பசி
தமிழ் புத்தகாலயம்
முத்தமிழ்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
வாழ்வில் இன்பம்
தமிழ் புத்தகாலயம்
முத்தமிழ்
தமிழ்ப் புத்தகாலயம்- தாகம், பு.எண்:34, ப.எண்: 35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை- 600017
இராஜராஜ சோழன் (நாடகம்)
பிரேமா பிரசுரம்
முத்தமிழ்
பிரேமா பிரசுரம், சென்னை- 24 * அரசியல் ராஜதந்திரத்திற்கு ஒரு உதாரணமாக ராஜராஜசோழன் எவ்வாறு திகழ்கின்றார் என்பதை வெகு அழகாக சித்தரித்திருக்கின்றார் ஆசிரியர்.
சுந்தரரின் பக்தியும் காதலும்
பிரேமா பிரசுரம்
முத்தமிழ்
பிரேமா பிரசுரம், சென்னை- ௨௪ * பக்தியின் ஹிருதயம் காதல் என்பதைச் சித்தரிக்கும் ஒரு பெரிய புராண நாடகம். அடியார் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றின் மீது எழும்பி நிற்கும் ஒரு கலைக் கோபுரம்.
மூன்று நீதி நூல்கள்
ஆசிரியர்
முத்தமிழ்
எம்.வெற்றியரசி. மனை எண். 9, கதவு எண். 26, குறுக்குத் தெரு, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை-88 . (பக்கம்: 176). * நல்லவர்கள் போற்றும் வகையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவும் நீதி நூல்கள் தமிழில் நிறைய உண்டு. அவற்றில் ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, நீதிவெண்பா என்ற மூன்று நீதி நூல்களுக்கு முறையே மகாவித்துவான் கோமாபுரம் இராசகோபாலனார், திருமணம் செல்வக்கேசவராயர், பெரும்புலவர் பொன்னம்பலனார் ஆகியோர் பதவுரையுடன் விசேஷ உரையும் எழுதியிருப்பது இந்த நூல்களைக் கசடறக் கற்க உதவும். சிறுவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகப் பெரியவர் படிக்க வேண்டிய நூல் இது.
நாட்டுப்புறவியல்
கலைஞன் பதிப்பகம்
முத்தமிழ்
தொகுப்பாசிரியர்கள்: முனைவர்கள் ராம.குருநாதன், தே.ஞானசேகரன். வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 256) * நாட்டுப்புற இயலின் பல்வேறு கூறுகளைப் பற்றிய ஆய்வாகத் திகழ்கிறது இந்நூல்.கள ஆய்வு நெறிமுறைகள், நாட்டுப்புறக் கதைப் பாடல் பதிவுகள் என 14 தலைப்பில் சிறப்பான ஆய்வுக் கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன.கடலில் சென்று மீன் பிடித்துத் திரும்பும் மீனவர்கள் கரையை அடைந்ததும் கட்டுமரத்தில் இருக்கும் வலை அல்லது மீன் பெட்டியிலிருந்து முதன் முதலாக ஒரு மீனை எடுத்து தரையில் போடுவர். இம்முதல் மீனுக்கு `சாமி மீன்' என்று பெயர் - போன்ற பல சுவையான தகவல்கள் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. நாட்டுப்புற ஆய்வாளருக்கு ஒரு அரிய பொக்கிஷம் இந்த நூல்.
மனோன்மணீயம்
செண்பகா பதிப்பகம்
முத்தமிழ்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 208). * `நீராருங் கடலுடுத்த' எனத் தொடங்கும் தமிழ்த் தாய் வாழ்த்தைக் கொண்டிலங்கும் மனோன்மணீயம் நாடகக் காவியத்தின் மூலம், பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை கதைச் சுருக்கத்துடன் தந்த முகவுரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. அருஞ்சொற்பொருளுடன் கூடிய இந்நூல் மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய எளிய பதிப்பு.
இசையின் எதிர்காலம்
கைலாஷ்
முத்தமிழ்
ஆசிரியர்: அலேன் தனியேலு. தமிழில்: முனைவர் எஸ்.ஏ.கே.துர்க்கா. வெளியீடு: கைலாஷ், புதுச்சேரி. (பக்கம்: ௰௨) * பாரம்பரிய சாஸ்திரிய இசை வடிவங்களில் சிறப்பு வாய்ந்த ஒரு ரத்தினமாக இருக்கும் கர்நாடக இசையையும் உள்ளடக்கி அலேன் தனியேலு எழுதியுள்ள இந்த முக்கியமான கட்டுரைத் தொகுப்பு, திராவிட மொழியான தமிழில் வெளிவரும் இந்த மொழியாக்கமும், பலதரப்பட்ட இசை மொழிகளைப் பாதுகாத்து, ஊக்குவித்து, எல்லோரும் அவற்றை ரசிப்பதற்கான பணியை மேற்கொண்ட இந்தப் பிரெஞ்சுகாரருக்கு செய்யப்படும் அஞ்சலியாகும்' எனப் புகழாரம் சூட்டியவர் ழான் லூயிகபென் என்ற பிரெஞ்சு மொழிக் கலை இலக்கிய ஆய்வாளர். அலேன் தனியேலு 1907ல் பாரிஸ் நகரில் பிறந்த பிரெஞ்சுக்காரர். உயர் குடியில் பிறந்த உத்தமர். சிறு வயதிலேயே இசை, சாஸ்திரிய நடனம், வாய்ப்பாட்டு, பியோனா போன்ற இசைக் கருவிகளில் வாசிப்பது போன்ற இசையைச் சார்ந்த பன்முகப் பார்வையில் வெற்றி பெற்றவர். இவர் முதன்மைத் தகுதி பெற்ற இசைக் கலைஞர். பன்மொழி வித்தகர். பூமிப் பந்தையே வலம் வந்தவர். இசைத் துறையில் பல விருதுகளை வாங்கிக் குவித்தவர். இருபதாண்டுகள் வாரணாசியில் தங்கிப் புராதனமான பாரத கலாசாரத்தின் மாண்பை அறிந்து கொணடார். இந்திய, கர்நாடக சங்கீதத்தைக் கற்று தேர்ச்சி பெற்றார். இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்று எழுதவும், பேசவும் வல்லவராவார். ரவீந்திரநாத் தாகூர், விஜயானந்தர், பிரும்மானந்தா, சிவேந்திரநாத் பாசு போன்றோர்களுடன் நெருக்கமாயிருந்து நுண்கலைகளில் பற்பல ஆய்வுகள் செய்தவர். சைவ சமயத்தின் மேல் ஆழப்பற்று கொண்டு கர்பாத்திரி சுவாமிகளிடம் சிவதீட்சை பெற்று தனது பெயரை சிவசரண் என்னும் நாமத்தைப் பெற்றுக் கொண்டவர். வாரணாசி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், இந்திய இசைக் கல்லூரியில் முதல்வராகவும் இருந்து இந்திய நாட்டு புராதன இசைக்கலைக்கு அருந் தொண்டாற்றிய தவசீலர்.இந்நூல் 1961 முதல் 1981 முடிய சர்வதேச மாநாடுகளில் இவரால் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு, இசை ஓர் உலக மொழியா? கிழக்கிந்திய நாடுகளின் கண்ணோட்டத்தில் இசையின் உலகளாவிய தன்மையும் தேசியத் தன்மையும் கீழ்த்திசை நாடுகளில் இசை இயலில் காணப்பெறும் உருவங்கள். இசையின் உட்பொருள் வடிவம், பல்வேறு இசை கலாசாரங்களின் மரபும், புதிய கண்டுபிடிப்பும், ராக இசையும் ஹார்மோனிய இசையும், இந்திய இசையின் எதிர்காலம் என எட்டுத் தலைப்புகளில் ஓர் ஆய்வு நூலாக உள்ளது இந்நூல். இந்திய சாஸ்திரி கர்நாடக இசையின் மேல் இவர் வைத்துள்ள பக்தி, நேசம், ஆழம் இவரது ஆய்வுக் கட்டுரைகளில் ஜொலிக்கின்றன. ஒரு அயல்நாட்டவர் நம் நாட்டின் பண்பாட்டுக் கலாசார நுண்கலைகளை உயிருக்குயிராய் நேசிக்கின்ற இவரது பாங்கு நம்மை வியக்க வைக்கிறது. இவரது ஆய்வுக் கட்டுரைகளில் ரவிசங்கர், அலி அக்பர்கான், டி.கே.பட்டம்மாள், பாலசரஸ்வதி, கே.எஸ்.பிச்சையப்பா (நாதஸ்வரம்) ஜெயம்மாள், விஸ்வநாதன், நாராயண அய்யர் (கோட்டு வாத்தியம்), திருமதி வித்யா சங்கர் (வீணை) போன்றோர்களது இசை நுணுக்கத்தினையும் திறமைகளையும் ஆழமாய் நுண்மான் நுழைபுலனாய்வோடு பதிவு செய்திருப்பது இசைத் துறை ஆய்வாளர்களுக்கு ஒரு மூலபாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.இந்திய இசையில் மோட் அல்லது சிராகம் என்பது ஒலி இடைவெளிகளைக் கொண்ட அமைப்புகளை மட்டுமல்லாமல் மனநிலையின் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதாகும். இந்தக் காரணத்தினால் தான் இசை ராகம் என அழைக்கப்படுகின்றன. ராகம் என்னும் சொல்லுக்கு மனநிலை என்பதாகும் (state of Mind பக்கம் : 27).தவறான முறைகளை கைவி
அகஸ்தியர் சங்கீத ரத்ன மாலா (பால பாடங்கள்)
அகஸ்தியர் பதிப்பகம்
முத்தமிழ்
அகஸ்தியர் பதிப்பகம், 9ஏ- கிளைவ்ஸ் பில்டிங், 33, நந்தி கோயில் தெரு, தெப்பக்குளம், திருச்சி-620 002. பக்கம்: 92
நாடகமல்ல, வாழ்க்கை
கிழக்கு பதிப்பகம்
முத்தமிழ்
கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், சென்னை-4. பக்கங்கள்: 140, * உலகப் புகழ்பெற்ற நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் புத்தகம். ஷேக்ஸ்பியரின் முதல் 28 வருடங்களைப் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கப் பெறாத நிலையில் (ஊகத்தின் அடிப்படையில்) இந்த நூலை எழுத முற்பட்டிருக்கிறார் ஆசிரியர். சுவாரஸ்யமான பல நாடகங்களை எழுதியவரின் வாழ்க்கையிலிருந்து, ஏதேனும் சுவாரஸ்யமான தகவல்களை திரட்ட முடியுமா என்ற முயற்சி அவ்வளவு அவசியமாகத் தெரியவில்லை. ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளாக உலக அளவில் பேசப்படும் நாடக ஆசிரியரின் எழுத்துக்களிலேயே எல்லா சுவாரஸ்யங்களும் அடங்கியிருக்கிறதே? நாடகச் சுருக்கங்களுக்கு இன்னும் சற்று கூடுதலான பக்கங்களை ஒதுக்கியிருக்கலாம்.
இராமாயண ஒயில் நாடகம்
ராகாஸ்
முத்தமிழ்
ராகாஸ், 12/293 ராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை-14. (பக்கம்: 200, விலை: ரூ.75.) * தமிழகத்தின் தொன்மையான `கூத்து' வகைகள் ஆய்ந்து காணத் தக்கவை; அறிந்து போற்றத்தக்கவை.ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில், கம்பளத்து நாயக்கர்கள் பாடிக் கொண்டே ஆடும் ராமாயண ஒயில் நாடகம் இங்கே கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கையில் பல வண்ணத் துணிகளை ஆட்டிக் கொண்டே, விசில் எழுப்பி, கால் கைகளை ஒரே மாதிரி அசைத்து சலங்கை கட்டி ஆடும் ஒயிலாட்டம் ஆண்கள் மட்டுமே ஆடும் அருமை ஆட்டமாகும். ராமன், சீதை, சுக்ரீவன் போன்ற பாத்திரங்கள் வந்து பாடிக் கொண்டு ஆடுகின்றனர். அனுமன் வேடமிட்டவர் அருள் வந்து உண்மையிலேயே ஆடுகிறார். அவரிடம் மக்கள் திருமண் பிரசாதம் பெறுகின்றனர். பிறகு, அவர் ஆவேசம் அடங்க முகக்கண்ணாடியை அவர் முன் காட்டுகின்றனர். `நாடு செழிக்கணும், நல்ல மழை பெய்யணும், ஊரு செழிக்கணும், ஊராரெல்லாம் வாழணும்' என்ற சூடதீப ஆராதனையுடன் ஒயிலாட்டம் முடிவடைகிறது. இதைப் படிக்கும் போது, நமது மக்களின் பக்தியும், பொதுநோக்கும் நம்மை நெகிழ வைக்கின்றன.திரைப்படம், தொலைக்காட்சிகளின் ஆதிக்கத்தால் ஒயில் நாடகக் குழுக்கள் பாதிக்கப்பட்டு சிதைந்து போய் விட் டன. இக்குழுத் தலைவர் 78 வயது கண்ணுசாமித் தேவர் குரல் போன நிலையிலும், நம்பிக்கை குறையாமல் இக்கலைக்கு உயிர் தந்து வருகிறார்.`நடிப்பவர்க்கும் பார்ப்பவர்க்கும் நட்பு இருக்கணும் நல்ல தமிழ்ச் சொல்லாலே அன்பை வளர்க்கணும்' என்று கோமாளியின் ஒயிலாட்டப் பாடல் சொல்வது போல் இந்த ஒயிலாட்டக் கலையை மரணத்துயிலில் இருந்து மீட்கும் போராட்ட முயற்சியே இந்த நூல்.
மகாகவிபாரதி (நாடகம்)
சங்கீதா பதிப்பகம்
முத்தமிழ்
சங்கீதா பதிப்பகம், 7, வி.எம்., தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 139. ) சிறந்த கவிஞர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பிறக்கின்றனர். அப்படிப் பிறந்தவர் பாரதி. அந்த மகாகவியின் வாழ்க்கை வரலாற்றை நாடக வடிவில் அளித்திருக்கிறார் நூலாசிரியர் பாரதி அப்பாசாமி. படிப்பதற்கு எளிமையாக எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் காட்சிகள் பின்னப்பட்டுள்ளன. இதை நாடகமாக அரங்கேற்ற விரும்புவர்களுக்கென தனியாக நாடக உத்திகள், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கி இருக்கிறார். ஆசிரியரின் முதன் அனுமதியின்றி யார் வேண்டுமானாலும் இதை மேடை நாடகமாக நடத்தலாம் என்று அறிவித்திருப்பது பாரதி மீது நூலாசிரியர் வைத்திருக்கும் அன்புக்குச் சான்று.
முத்தமிழில் நல் முத்துக்கள்
மணிமேகலை பிரசுரம்
முத்தமிழ்
மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை- 600 017;