கிழக்குப் பதிப்பகம்,33/15,எல்டாம்ஸ் ரோடு, ஆழவார்பேட்டை, சென்னை-600 018. தொலைப்பேசி: 0444-4200 9601, 4200 9603, 4200 9604.
- வர்த்தகம்
- All in All ஆயுள் காப்பீடு
All in All ஆயுள் காப்பீடு
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் வர்த்தகம்
பங்குச் சந்தை ரகசியம்
சிந்து பதிப்பகம்
வர்த்தகம்
குதிரைப் பந்தயங்களைப் போன்று, பங்குச் சந்தைகளிலும் லட்சங்களைப் பார்த்தவர்களும் உண்டு. அனைத்தையும் "கோட்டை விட்டு ஓட்டாண்டியாக நடுத் தெருவில் நிற்பவர்களையும் நாம் காண இயலும். பங்குச் சந்தை என்பது சூதாட்டம் இல்லை. மாறாக, பங்கு வணிகத்தின் நெளிவு சுளிவுகளைக் கண்டறிந்து, நம் முதலீட்டினை முறையாகத் திட்டமிட்டு, நமக்கு நாமே ஒரு சில கட்டுப்பாடுகள், வரம்புகள், வரைமுறைகளை வகுத்துக் கொண்ட பின்னர் செயலில் இறங்கும்போது, நிச்சயமாக வெற்றியாளராகத் திகழ முடியும்! மேலும், "டைமிங் எனப்படும் "கால நிர்ணயம் என்பதே மிக முக்கியமான ரகசியம், அதாவது ஒரு பங்கை எப்போது, எந்த விலையில் வாங்குவது என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைப் போலவே எத்தருணத்தில், எந்த விலைக்கு அதை விற்று லாபம் ஈட்டுவது என்பது பன்மடங்கு முக்கியம்.இத்தகைய தகவல்கள், 11 கட்டுரைகள் வாயிலாக நேரிடையாக அறிவுரைகள் வழங்கும் பாணியில் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ஆயினும், பங்குச் சந்தைத் தில்லு முல்லுகளை ஒழித்துக் கட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள "செபி எனும் அமைப்பு, பேப்பரில்லாத எலெக்ட்ரானிக் "டிமேட் அக்கவுன்ட் வசதிகள், நேசக்கரம் வழங்கிடும் பங்குத் தரகர்கள், அவர் தம் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் இடம் பெறாதது இந்நூலின் பெரியதோர் குறைபாடாகும்"பங்குச் சந்தையில் வெற்றி வாய்ப்புகள் என்றதோர் தலைப்பே இந்நூலுக்கும் பொருத்தமாக இருக்கும்.
வெற்றி தரும் வியாபாரத்திட்டம்
கண்ணதாசன் பதிப்பகம்
வர்த்தகம்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
சந்தைப்படுத்துவோம்; சாதனை குவிப்போம்!:
விஜயா பதிப்பகம்
வர்த்தகம்
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர்-640 001. (பக்கம்: 184). சந்தைப்படுத்துதலின் அடிப்படை அம்சங்கள், பொருள் - மக்கள் - விலை - விளம்பரம் - இடம் - பொதிவு - நுழைவு மற்றும் வெளியேறு நிலை மற்றும் சந்தைச் செய்திகள், ஆளுமை என்று 12 தனித்தனி தலைப்புகளில் மிகக் கோர்வையாக ஆசிரியர் தொகுத்துள்ளார்.முதன்நிலை அறிமுகம் (பக்.33), வாடிக்கையாளரின் முழு மன நிறைவு (பக்.43), மக்களைப் பற்றிய சிந்தனை (பக்.53), விலையை நிர்ணயிக்கும் முறை (பக்.69), விளம்பரத்திற்கு ஏற்க வேண்டிய முடிவுகள் (பக்.87) போன்ற கருத்து வெளிப்பாடுகள் ஆசிரியரின் அனுபவம் தோய்ந்த அணுகுமுறையை வெளிக்காட்டுகின்றன.சாதனை குவிக்க நினைக்கும் சந்தைக்காரர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டி.
Know thy Contract
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
வர்த்தகம்
நூலாசிரியர்கள்: ஏ.வி.ரங்கராஜு, எஸ்.அருணாசலம்.தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை-98. போன்: 2625 1968. (பக்கம்: 228).இன்றைய வணிக உலகம் ஒப்பந்த அச்சில் தான் ஓடுகிறது என்றால் மிகையாகாது. விற்பவர் - வாங்குபவர், தொழிலாளர், தொழிலாளி, வீடு கட்டுபவர் - பொறியியல் ஒப்பந்தக்காரர் என்று பலவகைக் கோணங்களில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை கேள்வி - பதில் முறையிலும் குறிப்புகளாகவும் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் சிக்கலுற்றால் நடுவர் நியமனம், குறித்த நேரத்தில் பொருட்களைத் தருவித்தல், ஒப்பந்த முறிவு, முறிவு நட்ட ஈடு என்று தனித்தனி தலைப்புகளில் ஆசிரியர்கள் அறிய வேண்டிய விஷயங்களை ஆங்கிலத்தில் அளித்துள்ளனர்.டெண்டர் தொடர்பான விஷயங்கள் (பக்-8 -22) வங்கி அளிக்கும் கியாரண்டிகளில் சுப்ரீம் கோர்ட் தீர்மானித்தவை (பக்.67) போன்றவை முக்கியமான தகவல்கள். வீடு கட்டுபவரோ அல்லது அதற்கு ஒப்பந்தப்படுபவரோ, பொறியியல் ஒப்பந்தக்காரரோ அல்லது துணை ஒப்பந்தக்காரரோ, சட்ட ரீதியாக ஒப்பந்தம் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ரத்தினச் சுருக்கமாக எளிமையாக தெளிவாக இந்நூலில் தரப்பட்டுள்ளது. கல்லூரியில் சட்டம் படிக்கும் மாணவச் செல்வங்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்படும்
தொழில் தொடங்கலாம் வாங்க!:
விகடன் பிரசுரம்
வர்த்தகம்
தொழில் தொடங்கலாம் வாங்க!:வெளியீடு: விகடன் பிரசுரம், சென்னை-600 002. (பக்கம்: 111) தொழிலின்றி வீணே இருப்பது சுமை. உழைத்து முன்னேற பல வழிகள். சிறு முதலீட்டில் தொழில் தொடங்க நினைப்போர் என்னென்ன செய்யலாம் என்பதற்கு இந்நூல் ஓர் வழிகாட்டி."குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் ஈட்டும் சிறுதொழில்களின் அணிவகுப்பு' என்ற விளம்பர வாக்கியத்திலேயே நூலின் நோக்கத்தை வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.25 தலைப்புகளில் குறுந்தொழில்களின் குவியல் நிச்சயமாக லாட்டரி சீட்டு நம் இரு கைகள் என்பதை உணரும் வண்ணம், 25 குறுந்தொழில்களில் ஈடுபட்டோரின் அனுபவங்கள் நூல் நெடுக மிளிர்கின்றன."நம் உழைப்பை நம்பி முன்னேறுவோம்' என்பவருக்கு இந்நூல் ஒரு நல்ல ஆலோசகர்!
உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள்
விஜயா பதிப்பகம்
வர்த்தகம்
விஜயா பதிப்பகம், 20,ராஜவீதி, கோயமுத்தூர் -641 001. (பக்கம் 100) நிர்வாகக் கலையில் புதுமைகள் குறித்து இந்த நூலில் அலசப்பட்டிருக்கிறது.
எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம்
கண்ணதாசன் பதிப்பகம்
வர்த்தகம்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.நாமும் ஒரு சொந்த வியாபாரம் ஆரம்பிக்க வேண்டும்... அப்படி ஆரம்பித்தாலும் அதில் சிக்கலோ நஷ்டமோ இருக்கக்கூடாது என்று எண்ணுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சொந்தமாகத் தொழில் செய்யும் எல்லோருமே தாங்கள் நினைத்ததைப் பெறுகிறார்களா என்பது சந்தேகமே. சொந்தத் தொழில் செய்தவர்கள் பலர் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறார்கள். இப்படியொரு சூழ்நிலையில்தான் நஷ்டமோ சிக்கலோ ஏற்படாத சொந்த வியாபாரம் ஒன்று இன்றைக்கு உலகம் முழுவதும் வேகமாய்ப் பரவி வருகிறது. இதில் ஈடுபட நம்மால் முடியக்கூடிய முதலீடு இருந்தால் போதும். சொந்தத் தொழில் செய்ய விருப்பப்படும் எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம்தான் பல நிலை வர்த்தகம்.- MLM- Multi Level Marketing. இது ஏட்டுச் சுரைக்காய் அல்ல.அனுபவங்களின் தொகுப்பு. நீங்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று உல்லாசமாக சிறகடித்துப் பறக்க இந்தப் புத்தகம் வழிகாட்டும் என நூலின் முகப்பிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. `கனவே கலையாதே' முதல் `முடிவல்ல ஆரம்பம்' என்ற 16 அத்தியாயங்களும் வியாபாரத்தில் முன்னேற வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது. வெற்றி பெற 25 வழிகள் கேள்வி - பதில் வடிவத்தில் அளிக்கப்பட்டுள்ளது பயனுள்ளது. நல்ல ஒரு வியாபார முன்னேற்றம் வழிகாட்டி நூல்.
அள்ள அள்ளப் பணம்-2
கிழக்கு பதிப்பகம்
வர்த்தகம்
ஆசிரியர்- சோம.வள்ளியப்பன். பக்கங்கள்: 192.வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், நியூ ஹொரிஜோன் மீடியா பி.லிட்., சென்னை-18. பங்குச்சந்தை வர்த்தகம் குறித்த உயர்நிலைக் கையேடு. இந்த நூல், பங்குச்சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தேர்ந்தவர்களுக்கு மட்டும்! Fundamental Analysis, Technical Analysis நுட்பங்களை எளிமையாகச் சொல்லித் தருவது. பங்கு வர்த்தகத்துக்குள் இனிதான் நீங்கள் நுழையப் போகிறீர்கள் என்றால் முதலில் அள்ள அள்ளப் பணம்-1 அடிப்படை நூலைப் படித்துவிட்டு இதனைத் தொடுவது நல்லது.
அள்ள அள்ளப் பணம் 1
கிழக்கு பதிப்பகம்
வர்த்தகம்
கிழக்கு பதிப்பகம், நியூ ஹொரிஜோன் மீடியா பி.லிட்., 33/15, 2வது மாடி, எல்மாண்ட்ல் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை -18. ( பக்கங்கள் -272)பங்குச்சந்தை என்றால் என்ன? அது ஒரு சூதாட்டம் என்கிறார்களே, உண்மையா? பங்குச்சந்தையில் யார் வேண்டுமானாலும் பணத்தைப் போட்டு லாபம் சம்பாதிக்கலாமா? பங்குகளை எங்கே வாங்குவது, எப்படி விற்பது?இப்படி உங்கள் மனத்தில் உள்ள ஆயிரம் கேள்விகளுக்கும் மிக எளிமையாகப் பதில் சொல்கிறது இந்த புத்தகம்.
கண்ணியமான பொருளாதார வளர்ச்சி
நேஷனல் புக் டிரஸ்ட்
வர்த்தகம்
அமித் பாதுரி, தமிழாக்கம் : கண்ணையன் தட்சிணாமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா ஏ-5 கிரீன் பார்க், புதுடில்லி -110 016. இந்தியா சுதந்திரமடைந்து சுமார் அறுபதாண்டுகள் ஆன பின்னும், இந்திய மக்களில் பெரும்பான்னையினர் மிகவும் கேடான வறுமையில் உழல்கின்றனர். பொருளாதாரத் தாராளமயமும். தொடர்ந்து அரசு தனது பணிகளைச் சுருக்கிக் கொள்வதும் தான் இப்பிரச்சினைக்குத் தீர்வா? இந்தியாவின் முன்னணி கோட்பாடுப் பொருளியல் நிபுணர்களில் ஒருவரான இந்நூலாசிரியர், அது தவறான வழி என்று உறுதியாக, எளிய நடையில் எடுத்துரைக்கிறார். சர்வதேச நிறுவனங்கள், ஊடகங்கள், கொள்கை வரைவாளர்கள், பொருளாதாரக் கோட்பாடுகளை நூலின் போக்கிலே ஆசிரியர் தகர்த்தெறிகிறார். குடிமக்கள் அனைவருக்கும் கண்ணியத்துடன் கூடிய முழுவேலை வாய்ப்பை குறுகிய காலத்திற்குள் உருவாக்குவது சாத்தியமே என்று இந்நூல் விளக்குகிறது.
நுகர்வோருக்கு 100 தகவல்கள்
மணிவாசகர் பதிப்பகம்
வர்த்தகம்
நுகர்வோருக்கு 100 தகவல்கள்; ஆசிரியர்: சீர்காழி வி. இராம்தாஸ்; வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்,6 சிவஞானம் தெரு, தி.நகர், சென்னை. மாணிவாசகர் வெளியீட்டு எண்: 1408; ; விலை: ரூ. 60.00;
ஷேர் மார்கெட் என்றும் தங்கச் சுரங்கமே
மணிமேகலை பிரசுரம்
வர்த்தகம்
ஆசிரியர்-தஞ்சை ரவி.வெளியீடு:மணிமேகலை பிரசுரம். பக்கங்கள்:104.
சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்
கிழக்கு பதிப்பகம்
வர்த்தகம்
யுவகிருஷ்ணா.வெளியீடு:கிழக்கு பதிப்பகம்,நியூ ஹோரிசோன் மீடியா பி.லிட்.,எண்.33/15,எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018.பக்கங்கள்:152. விளம்பரங்கள் எப்படி உருவாகின்றன?ஏஜென்சிகள் எப்படி இயங்குகின்றன?நமது விளம்பரங்களை எப்படி வெளியிடுவது? நல்ல பலன் கிடைக்க என்னென்ன செய்ய வேண்டும்?எப்படி இந்தக் கனவு உலகில் நுழைவது?அட்வர்டைசிங் துறை பற்றிய சகல விவரங்களும் இந்நூலில் உண்டு!விளம்பர உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால் மட்டுமே வர்த்தக உலகில் நம்பர் 1 ஆக மலர முடியும்.விளம்பர உலகின் அத்தனைக் கதவுகளையும் திறந்து வைக்கும் இந்தப் புத்தகம்,எப்படி விளம்பரம் செய்தால் தங்க மழை கொட்டும் என்பதையும் சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொடுக்கிறது.
தங்கச் சுரங்கம் (மியூச்சுவல் பண்டுகள்)
ஸ்ரீஆனந்த நிலையம்
வர்த்தகம்
ஸ்ரீ ஆனந்த நிலையம், 29/5 ரங்கநாதன் தெரு( மாம்பலம் ரயில் நிலையம் எதிரில்), தி.நகர், சென்னை-17. போன்: 2434 6242; விலை: ரூ. 50; பக்கங்கள்: 136;
ஒரு டிரில்லியனுக்கு எத்தனை ஜீரோ?;
பாரதி புத்தகாலயம்
வர்த்தகம்
பாரதி புத்தகாலயம், புதிய எண் 421, 2வது தளம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.; விலை: ரூ. 130.00
மார்ச்சிய உள்ளொளியில் உலக நிதி மூலதனம்
பாரதி புத்தகாலயம்
வர்த்தகம்
பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018. விலை:ரூ.20.
வியாபாரம் வெற்றிக்கு ஆதாரம்
குமரன் பதிப்பகம்
வர்த்தகம்
வெளியீடு: குமரன் பதிப்பகம், சென்னை.பக்கங்கள்: 128. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் போட்டி போட்டுக் கொண்டு செயல்படும்போது, அவர்கள் வேலையில் சேர்ந்து பணி புரிவதைவிட வியாபாரத்தில் ஈடுபட்டு செய்யும் தொழிலே தெய்வம் என்று மதித்து தன்னுடைய விடாமுயற்சியாலும், தளராத நம்பிக்கையுடனும் உழைப்பதாலும் வெற்றி பெறுவார்கள். அவ்வாறு வெற்றி பெறுவதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நூலாசிரியர் மெர்வின் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவரிடமும் இருக்க வேண்டிய அற்புதமான நூல்.
இதயமே வெல்லும்
விகடன் பிரசுரம்
வர்த்தகம்
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002.) (பக்கம்: 288.)"சேஜ்' பப்ளிகேஷன்ஸ் என்ற அகில உலக நிறுவனம்' ஆங்கிலத்தில் வெளியிட்ட அருமையான நூலின் தமிழ் வடிவமே இந்த நூல். நூலாசிரியர் தலிப்சிங், நிர்வாகத் திறமை, வணிக பரிமாற்ற ஆய்வு, தலைமைப் பண்பு மற்றும் ஆளுமைத் திறன் ஆகியவை குறித்துச் சிறப்பான ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். பணியிடத்தில் உணர்ச்சிகரமான போக்கை சமயோசிதமாகக் கையாளுவது எப்படி மற்றும் நிர்வாகம் பற்றிய பயிற்சிகளுக்குத் தேவையான சாதுர்யங்கள், நுணுக்கங்கள், அனுபவங்கள் என்று மிக விரிவாக விளக்கி இருக்கிறார். அனைவருக்குமே மிகவும் பயனுள்ள நூல்.
ஏற்றுமதியில் சந்தேகங்களா?
விஜயா பதிப்பகம்
வர்த்தகம்
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயமுத்தூர். பின். 641001. தொலைபேசி: 0422-2394614 (பக்கம் 152)முற்றிலும் ஏற்றுமதி சம்பந்தப் பட்ட விஷயங்களை கேள்வி, பதிலாகத் தொகுத்திருக்கிறார் ஆசிரியர். உலகளவில் ஏற்றுமதி ஆவணங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்திய வங்கியாளர், ஏற்றுமதி குறித்த கருத்தரங்குகளில் சிறப்பு பயிற்சியாளர் என்ற அனுபவத்தை இதில் இழையோட விட்டிருக்கிறார். தமிழகத்தில் ஏற்றுமதி முக்கியத் தொழில். அது குறித்த விளக்கம் தரும் வகையில் அமைத்திருப்பது சிறப்பாகும். நமது துணி 120 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது; தலைமுடி ரூ.500 கோடிக்கு மேல் ஏற்றுமதியாகிறது; நமது ரப்பர் தரம் மிகவும் உயர்ந்தது என்று பல தகவல்கள். ஏற்றுமதித் தொழிலில் உள்ள அனைவரும் விரும்பும் நூல்.
வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி?
விஜயா பதிப்பகம்
வர்த்தகம்
விஜயா பதிப்பகம், 20,ராஜவீதி, கோயமுத்தூர் - 641001. (பக்கம் 144). தொலைபேசி: 0422-2394614இந்த நூலாசிரியர் ஏற்றுமதி இறக்குமதி துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் உடையவர். உலக அளவில் நடைபெற்ற ஏற்றுமதி ஆவணங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்திய வங்கியாளர் ஆவார். தினமலர் நாளிதழில் பங்குச் சந்தை வர்த்தகம் பற்றி எழுதி வருபவர்.இம்மாதிரி நெருடல்கள் நிறைந்த விஷயத்தை தமிழில் வடிப்பதில் வெற்றி கண்டிருக்கிறார். ஏற்றுமதித் தொழிலில் உலகம் பூராவும் உள்ள பல விஷயங்களை தெரிந்து கொண்டால் தான் குழப்பம் இன்றி வர்த்தகம் நடக்கும். அதற்கு இவர்காட்டும் வழி சிறப்பானது. கொஞ்சம் ஆங்கில அறிவும்,விற்பனைத் திறமையும், பயண ஆர்வமும் இருந்து இப்புத்தகத்தைப் பின்பற்றினால் எளிதாக எல்லாரும் ஏற்றுமதியாளர் ஆகிவிடலாம்.தமிழில் விளக்கத்துடன் ஆங்கில வார்த்தைக் குறிப்புகளும் உள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட தனித்தனி தலைப்புகளில் பிரித்தளித்த பாங்கு சிறப்பானது. தமிழகத்தில் இருந்து எந்தெந்த பொருட்கள் எங்கே ஏற்றுமதியாகிறது என்ற அட்டவணையும் உண்டு. ஏற்றுமதி தொடர்பான தொழிலில் இருக்கும் அனைவரது கைகளிலும் தவழ வேண்டிய நூல்