சென்னையைப் புரட்டி போட்ட கன மழை பற்றித் தான் இப்போது எல்லாரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இப்படி ஒன்று நடக்கப் போகிறது என்பதை அந்துமணி இந்த வருடத்தின் ஆரம்பம் முதலே, வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தில், பல வாரங்களாக சொல்லி வந்திருக்கிறார் என்பதை, இப்புத்தகத்தின் மூலம் அறியும் போது ஆச்சரியம் ஏற்படுகிறது. ‘பருவ மழையை சமாளிக்க, தி.மு.க., அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக உள்ளதா?’ என்று சென்னை வாசகர், மனோகரன் என்பவர் ஒரு கேள்வி கேட்டுள்ளார். ‘இந்த வருட பருவ மழையின் போது, மழை நீர் தேங்காது என்றே நம்புகிறேன்’ என்று ஸ்டாலின் அவநம்பிக்கையுடன் பேசியதை சுட்டிக்காட்டி, ‘அவருக்கே நம்பிக்கை இல்லை எனும் போது, எனக்கு எப்படி நம்பிக்கை வரும்...’ என்ற தொனியில் பதில் தந்துள்ளார்.அதேபோல், ஆனந்தன் என்பவர், ‘பருவ மழையை சமாளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளதா?’என்று கேட்டுள்ளார். இக்கேள்விக்கு, ‘ஏற்பாடுகள் எல்லாம் பேச்சாகத் தான் இருக்கிறது; மழை வரும் போது தான், செய்த ஏற்பாடுகளின் லட்சணம் தெரியும்...’ என்று பதில் தந்துள்ளார், அந்துமணி. அவரின் கூற்றுப் படியே இப்போது, தி.மு.க., அரசின் ஏற்பாடுகளின் லட்சணம் குறித்து தான் சென்னை மக்கள் விலாவாரியாக பேசிக் கொண்டிருக்கின்றனரே!அக்டோபர் மாதம் பெய்த ஒரு சாதாரண மழையின் போதே, சென்னை தத்தளித்தது. அதைக் குறிப்பிட்டு ஒரு வாசகர், ‘இப்போதே இப்படி இருக்கிறதே... நவம்பர், டிசம்பர் மாதம் சென்னையின் நிலை எப்படி இருக்கும்?’ என்று கேள்வி கேட்டுள்ளார்.‘முதல்வர், தன் துாக்கத்தை தொலைக்கும் அளவிற்கு இருக்கும்...!’ என்று பதில் தந்துள்ளார், அந்துமணி. உண்மை தானே... இப்போது மக்களை எப்படி சமாதானப்படுத்துவது என்ற சிந்தனையில் அனேகமாக அவரது துாக்கம் தொலைந்து தானே போயிருக்கும்!மேல் புவனகிரியில் இருந்து ஜெயம் என்ற வாசகர், ‘பருவ மழையை சமாளிக்க, சிங்கார சென்னை தயாராகிவிட்டதா...?’ என்று கேட்ட கேள்விக்கு, அந்துமணி தந்துள்ள தைரியமான பதில் அவருக்கே உரித்தானது.‘பருவ மழைக்கு சென்னை தயாராகவில்லை; தயார் செய்ய வேண்டிய காண்ட்ராக்டர்கள், ஆளும் கட்சியினருக்கு கொடுக்க வேண்டியதை கொடுப்பதால், ஆட்சியாளர்கள் வேலைகள் பற்றி கண்டு கொள்வது இல்லை; பள்ளம் தோண்டிக் கொண்டே இருக்கின்றனர். பருவ மழையை சென்னை சமாளிக்க முடியாத நிலையே உள்ளது...!’ என்று உண்மையை நெற்றயில் அடித்தாற் போல் சொல்லியுள்ளார்.தற்போது பருவ மழை, சென்னையில் ஏற்படுத்தியுள்ள அவலம் குறித்து, முன் கூட்டியே முன் எச்சரிக்கையாக, பல இடங்களில் அந்துமணி குறிப்பிட்டுள்ளார். இனியாவது, அந்துமணியின் வார்த்தைகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தினால் நல்லது!‘பிரச்னைகளை சமாளிக்க, வாழ்க்கையில் சாதிக்க தேவையான நல்ல விஷயங்களை, நுாறு புத்தகம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நுாற்றுக்கும் அதிகமான விஷயங்களை, அந்துமணி இந்த ஒரே புத்தகத்தில் நறுக் சுருக்காக தெரிவித்துள்ளார். அவற்றில் சில:‘முள்ளிற்கு பின்னால் தான், சுவையான பலாப்பழம் இருக்கிறது. அது போல நம் பிரச்னைகளுக்கு பின்னால் தான், நல்ல வாழ்க்கையும் அமைந்துள்ளது. அதனால், எதிலும் பொறுமை காக்க வேண்டும்!’‘மற்றவர்களுக்கு செய்யும் சேவை, அது நமக்கே செய்து கொள்ளும் சேவை; மற்றவர்களுக்கு செய்யும் தொண்டு, அது நமக்கே செய்து கொள்ளும் தொண்டு. இது தான் தர்மம்...’ என்று தர்மம் குறித்த கேள்விக்கு விளக்கம் தருகிறார்.இதன்மூலம், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் இயன்ற சேவையை செய்யுங்கள் என்று நமக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.இப்புத்தகத்தில், அவருக்கே உரித்தான, அவரது நையாண்டிகளுக்கும், துணச்சலுக்கும் பஞ்சமே இல்லை.‘மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி என்பது, அடுத்தவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது தான்...’ என்று ஒரு பதிலில் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகத்தை தந்ததன் மூலம், பலரை சந்தோஷப்படுத்தி அவரே அதற்கு சிறந்த உதாரணமாயிருக்கிறார். புதிய சிந்தனையில், புதிய பார்வையில் உதித்துள்ள இப்புத்தகத்தை படித்து, பகிர்வதன் மூலம் நீங்களும் சந்தோஷ மனிதராக மாறலாம்!– எல்.முருகராஜ் புல் அவுட் ஒன்று‘‘சென்னையைப் புரட்டி போட்ட கன மழை பற்றித்தான் இப்போது எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்றனர் ஆனால் இப்படி ஒன்று நடக்கப் போகிறது என்பதை அந்துமணி இந்த வருடத்தின் ஆரம்பம் முதலே வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் பல வாரங்களாக சொல்லி வந்திருக்கிறார் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் அறியும் போது ஆச்சரியம் ஏற்படுகிறது’’புல் அவுட் இரண்டுமற்றவர்களுக்கு செய்யும் சேவை செய்யும் அது நமக்கே செய்து கொள்ளும் சேவை,மற்றவர்களுக்கு செய்யும் தொண்டு அது நமக்கே செய்துகொள்ளும் தொண்டு இதுதான் தர்மம் என்று விளக்கம் தருகிறார் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் இயன்ற சேவையை செய்யுங்கள் என்று நேர்முகமாக இதன் மூலம் வேண்டுகோள் விடுக்கிறார்.
- கேள்வி - பதில்
- அந்துமணி பதில்கள் (பாகம் – 8)
அந்துமணி பதில்கள் (பாகம் – 8)
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் கேள்வி - பதில்
பிரபலமானவர்கள் 1000 கேள்வி - பதில்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
க்விஸ் வினா விடைகள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
வில்லியம் ஷேக்ஸ்பியர் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
கன்பூசியஸ் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
ரூஸோ கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
இராமயணம் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
கௌதம புத்தர் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
ஸ்ரீ அரவிந்தர் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
இங்கர்சால் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
க்விஸ் வினா விடைகள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
பிரபலமானவர்கள் 1000 கேள்வி- பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017
இந்தியா 1000 கேள்வி பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
வேளாண்மை அறிவியல் 1000 கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
ஸ்போர்ட்ஸ் வினாடி வினா - 1000
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
பொது அறிவு 2000 வினாடி வினா - விடைகள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
கன்பூசியஸ் கேள்வி-பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
ரூசோ கேள்வி-பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரியார் கேள்வி -பதில்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
கௌதம புத்தர் கேள்வி -பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
இராமாயணம் கேள்வி-பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .