Advertisement

புறநானுாற்றில் வரும் இழிபிறப்பாளர் யார்


புறநானுாற்றில் வரும் இழிபிறப்பாளர் யார்

₹ 400

எழுத்துரு அளவு:

தொல்குடி மக்களான பறையர் சமூகத்தின் மீதான கண்ணோட்டத்தை விளக்கமாகவும், விரிவாகவும் ஆய்கிறது இந்நுால். இழிசினர், புலையர் போன்ற சொற்கள் வழங்கப்பட்டிருக்கும் சங்க கால இலக்கியத்தை முன் வைத்து, அவற்றிற்கான சொல்லாடலை முன்னிலைப்படுத்தி ஆய்கிறது இந்நுால்.ஆதிக்கச் ஜாதியினரால், திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்ட ஒரு சமூகத்தின் வரலாற்று சுவடுகளை விரிவாக ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.பரையர், பறையர் ஆகிய இரு சொற்களும் ஒரே பொருளை தான் தருகின்றன என்று கருத்துரைக்கும் ஆசிரியர், பரை என்பது அம்மனை குறித்து வந்த சொல் (தற்பரை) என்று எடுத்துரைத்து, அதன் அடிப்படையில் அம்மனுக்கு தாலி கட்டும் மாற்று மணவாளனாக ஒரு பறை(ரை)யே இருந்திடும் நிகழ்வை இன்றும் கிராமங்களில் காணலாம் என்றும் சுட்டிக்காட்டுவர்.இழிசினர் என்பதற்கு இழிவது, இறங்கி வருவது என்ற பொருளில், முருக வழிபாட்டில் முருகனே தங்கள் மீது இறங்கி வருவதாக கொண்டு, அப்படிப்பட்ட புலையரே குருக்களாக இருந்தவர்கள் என்கிறார் நுாலாசிரியர்.ஆரியர்கள் வருகைக்கு முன்னரே தமிழகத்தில் பறையரும், புலையரும், பாணரும் சமுதாயத்தில் மதிக்கத்தக்கவர்களாக இருந்திருந்ததை, சில அடிப்படை சான்றுகளோடு சுட்டுவர்.பறை என்பதை மைய பொருளாகக் கொண்டு இந்நுாலை படைத்திருப்பதால், நுால் நெடுக அது குறித்த செய்திகளும், தகவல்களும் மிகுதியாக காணக் கிடைக்கின்றன. இந்நிலையில், இவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை என்ற கருத்தியலை அடிப்படை தரவுகளுடன் மெய்ப்பித்திருப்பதும், அதற்கான சான்றாதாரங்களை எடுத்துக்காட்டி தம் கருத்திற்கு வலிமை சேர்த்திருப்பதும் படிப்போரை வியப்பில் ஆழ்த்துவன. விரிவான மேலாய்வுக்கு இந்நுால் உதவிடும்.– ராம.குருநாதன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • பாவை பப்ளிகேஷன் (பி) லிட்., 142, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 130. விலை: ரூ.50).மொழி பெயர்ப்பு என்பது ஒரு கலை. சிந்தனையைத் தூண்டும் கலை. எனவே, மொழி பெயர்ப்புக் கலை பற்றிய உணர்வும், ஞானமும் நமது இன்றைய தேவை. ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்கள் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ளுதலும் அவசியம். இப்புத்தகம் இந்த வகையில் பயனுள்ள பல தகவல்களை, வழிகாட்டுதல்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆசிரியர் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ள பல மேற்கோள்கள், சான்றுகள் பிரமாதமாக உள்ளன. இத்துறையில் இதுவரை வந்துள்ள நூல்களின் வரிசையில் இப்புத்தகத்திற்கு தனி மரியாதையும் கவுரவமும் நிச்சயம் உண்டு.

  • விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 255. விலை: ரூ.95). ஆனந்த விகடன் இதழில் வெளியான தமிழக பிரபலங்கள் பலரின் விஷய கனமிக்க பேட்டிகளின் தொகுப்பு நூல் இது. தமிழ் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையுள்ள, அதற்கான ஒவ்வொரு வகையில் உழைக்கிற அறிவு சார்ந்த பெருமக்கள் பலர் கூறுகிற அரிய கருத்துக்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது "தமிழ் மண்ணே வணக்கம்! இன்றைய தலைமுறை அந்நியக் கலாசாரத்தின் தலையாட்டிப் பொம்மையாக மாறிப் போனது எதனால்? யானைக் கட்டிப் போரடித்த தமிழனின் விளை நிலங்கள் "ரியல் எஸ்டேட்'களாக மாறியதன் பின்னணி என்ன? என்பது போன்ற கனமான விஷயங்களில் நம் அறிவைத் தூண்டி, சிந்திக்க வைக்கின்றனர் ஒவ்வொருவரும். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஜெயகாந்தன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், அசோகமித்திரன், தமிழருவி மணியன் போன்ற பல்துறை வித்தகர்கள் 44 பேரின் விரிவான பேட்டிகளும் அவர்களின் வண்ணப் படங்களுமாய் ஜொலிக்கிறது இந்த நூல். நல்ல முயற்சி.

  • தமிழ்மணி பதிப்பகம், 127, ஈஸ்வரன் கோவில், தெரு, புதுச்சேரி-605 001. (பக்கம்: 144. விலை: ரூ.60). ஏறக்குறைய 150 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சி நடைபெற்ற புதுச்சேரியில், தமிழின் நிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி 36 தலைப்புகளில் ஆசிரியர் படம் பிடித்து காட்டியிருக்கிறார். "சொல்லதெழுதல்' என்ற இலக்கணப் பயிற்சியை பத்தாம் வகுப்பு வரை பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருந்தது (பக்.135). இதனால் தமிழ் மொழியில் செம்மை தென்பட்டது' என்கிறார் ஆசிரியர்.தமிழ் வளர்ச்சிப் பணியில் தமிழர்களோடு பிரெஞ்சு அரசாங்கத்தார் ஈடுபட்டது தெரிய வருகிறது. பிரெஞ்சிந்திய தமிழ் நிலைப் பள்ளி அறிய விழைபவருக்கு இந்நூல் ஒரு விருந்து.

  • ஏழிசைச் சூழல், 62, மறைமலை அடிகள் சாலை, புதுச்சேரி-605001. (பக்கம்:181 விலை: ரூ.60.) தமிழிலக்கணம், இசைத் தமிழ் என இவ்விரண்டு புலங்களில் தேர்ச்சியும் புலமையும் பெற்ற முனைவர் இரா.திருமுருகன். 32 தலைப்புகளில் தாய் மொழி, தமிழிலக்கணம், இசைத் தமிழ், ஆட்சி மொழி என பல கட்டுரைகளை இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். பல செய்திகளை இவர் தன்னை முன்னிலைப் படுத்தி ஆய்வு நோக்கில் பதிவு செய்துள்ளதைப் பார்த்தால் இவர் ஆத்திகரா இல்லை நாத்திகரா என தடுமாற்றம் வருகிறது. "இருபத்தி ஏழாம் ஆண்டு, ஒன்றுபடுவோம் உருப்படுவோம், திருக்கோவிலில் தமிழிசைப் பாடுவதற்குத் தடை? ஆட்சி மொழியை இழிவுபடுத்தும் அரசு, என்று நம் தாய்மொழி அரியணை ஏறும்? அம்மையாரைப் பற்றிய அருவருப்பான ஆராய்ச்சி, இதுதான் கட்டாயத் தமிழா?' போன்ற பல கட்டுரைகளில் இவரது கோபமும் தமிழுக்கு கேடு நேர்ந்திடுமோ என்ற ஆதங்கமும் தெரிகிறது.

  • ஐந்திணைப் பதிப்பகம், 279 பாரதி சாலை, சென்னை-5. (பக் கம்:152 விலை: ரூ.70.) சேர நாட்டு கேரளத்து மண்ணிலிருந்து செந்தமிழை வளர்க்கும் படைப்புகளைத் தரும், எழுத்தாளர் வரிசையில், இவரது நூல் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.அறிவியலில் தேசிய விருது பெற்ற ஆர்.வி.பெருமாள், ந.வேதாசலம் ஆகியோரைப் பற்றிய செய்திகள் அருமையானவை. சுவை தரும் தமிழ்க்கனி ரசக் கட்டுரைகள்!

  • நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 122. விலை: ரூ.50). மேடைப் பேச்சுக் கலையை, மென்மையாய் விளக்கி, அதன் தன்மையை விவரித்து, அந்தக் கலையில் மேன்மை பெறச் செய்யும் மேடைப் பாடநூல்!பேசுவது முன்பாக தயாரிப்பது எப்படி? திட்டமிடுவது எப்படி? துணிவை வரவழைப்பது எப்படி? காலக்கட்டுக்குள் அருவி போல் கொட்டி, அனைவரையும் நிமிர வைப்பது எப்படி? என்று 15 தலைப்புகளில் விளக்கியுள்ளார்."ழ' "ல' "ள' ஆகிய ஒலி உச்சரிப்புகள் இன்றைய சில பேச்சாளருக்கு சரியாக இல்லாததை சரியாகக் குறிப்பிட்டு அதைத் திருத்த வழிகாட்டியுள்ளார்.இவரது சில மேடை அனுபவங்களும், மேற்கோள் சினிமா பாடல்களும், சில இடங்களில் மணி அடித்த பிறகும் பேசும் பட்டிமன்றப் பேச்சுப் போல "மிகை'யாக உள்ளது. சிறந்த பேச்சாளர்களின் பட்டியலில் இன்று கொடி கட்டிப் பறக்கும் பேச்சாளர் சு.கி.சிவம் போன்றவர்கள் விடுபட்டுள்ளனர். மேடைத் தமிழ்ப் பயணத்துக்கான கால அட்டவணை நூல்!

  • திலகம் பதிப்பகம், 17இ, பி-1 கே.கே.பொன்னுரங்கம் சாலை, ஓம்சக்தி நகர், வளசரவாக்கம், சென்னை-87. (பக்கம்:191. விலை:ரூ.85) பழந்தமிழ் சொற்கள் பண்டு தொட்டுத் திரிந்து, வளர்ச்சிப் பெற்று மருவி வழங்கும் நிலைகள் சிறப்பாக இதில் தெளிவாக்கப் பட்டுள்ளன. தமிழ்மொழி இலக்கண ஆய்வாளர்களுக்கு இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் பயன் உள்ளதாக அமையும்.

  • பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை- 600 108 போன்: 044 2527 0795; 3253 0516; 2523 4576; மின் அஞ்சல்: paarinilayam@yahoo.co.in

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

புதிய வெளியீடுகள்