விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84கண், காது, மூக்கு, தோல், கால்கள், கைகள் போன்ற புற உடல் உறுப்புகளை எவ்வளவு முக்கியமாக பாதுகாக்கிறோமோ, அதைவிட அதிக முக்கியத்துவம் கொடுத்து, இதயம், மூளை, எலும்பு, சிறுநீரகம், நுரையீரல், கணையம், கருப்பை... போன்ற உள் உறுப்புகளையும் பாதுகாக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஒவ்வொரு உறுப்பும் ரத்தத்தோடு தொடர்புடையது என்றாலும், அந்த ரத்தத்தின் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் முக்கியமான உடற்கூறு எலும்புகள்தான். உடலுக்கு உருவம் கொடுப்பது மட்டுமல்லாமல், நம்மை அசைய வைப்பதற்கும், மூளை இடும் கட்டளைகளை தசைகளின் உதவியோடு இயங்க வைப்பதற்கும் உறுதுணையாக இருப்பது எலும்புகள்தான்.எலும்பு மற்றும் மூட்டு ஆகியவற்றின் பணி, வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நோய் பற்றி, வாசகர்கள் அறிந்து விழிப்பு உணர்ச்சி பெறும் வகையில், ஆனந்த விகடனில் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ என்ற பகுதியில் கட்டுரைகள் வெளிவந்தன. ‘மிஸ்டர் போன்ஸ்’ என்ற தலைப்பில், டாக்டர் எம்.பார்த்தசாரதி எழுதிய அந்த மருத்துவக் கட்டுரைகள், நகைச்சுவை கலந்து எளிமையான நடையில் எழுதப்பட்டதால், வாசகர்கள் பயமில்லாமல் ரசித்துப் படித்தார்கள்.கடந்த பதினெட்டு வருடங்களில், எலும்பு_மூட்டு வேதனைகளால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வலியைப் போக்கி, ஊனம் ஏற்படாமல் தடுத்திருக்கும் டாக்டர் பார்த்தசாரதி, இடுப்பு எலும்பு முறிவு மற்றும் கால்மூட்டு சிகிச்சையில் புதிய முறைகளை உருவாக்கி இருப்பதையும் விளக்கியிருக்கிறார். விகடனில் வெளியான ‘துப்புரவுத் தொழிற்சாலை’ மற்றும் ‘மிஸ்டர் போன்ஸ்’ ஆகிய இரண்டு பகுதிகளும் சேர்ந்து ஒரே நூலாக ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ _ மூன்றாவது பாகம், ஏற்கெனவே விகடன் பிரசுரமாக பல பதிப்புகள் வெளிவந்து வெற்றி பெற்றது. வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அந்த நூலிலிருந்து ‘மிஸ்டர் போன்ஸ்’ பகுதி மட்டும் பிரிக்கப்பட்டு, கூடுதலாக நவீன மருத்துவமுறைகள் சேர்க்கப்பட்டு இப்போது ஒரு தனி நூலாக மலர்ந்திருக்கிறது.இந்தப் புத்தகம் விவரிக்கும் தகவல்கள் உங்களை நிச்சயம் பிரமிக்கச் செய்யும்!
-
எய்ட்ஸ் நோயின் வரலாறு, எய்ட்ஸ் என்றால் என்ன? நோயின் அறிகுறிகள், கண்டறிவதற்கான பரிசோதனைகள், நோய்க்கு மருந்துகள், வராமல் தடுப்பது எப்படி? என 22 அத்தியாயங்களில் எய்ட்ஸ் நோயைப் பற்றிய சகல தகவல்களும் எளிமையாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.வருமுன் காக்க, இந்த நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
-
பிராணிக் ஹீலிங் பவுண்டேஷன் ஆப் தமிழ்நாடு, 15, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-34. (பக்கம்: 344)மருந்தின் உதவி இல்லாமல் நமது உயிர் சக்தியைக் கொண்டு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள் இந்த நூலில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. காற்று, சூரியன், நிலம், நீர், மரம் போன்றவற்றிலிருந்து சக்தியை கிரகித்து, நோயாளிகளிடம் தேக்கமடைந்துள்ள சக்தியை விடுவித்து, பிராண சக்தியை பாய்ச்சி குணப்படுத்தும் அற்புத முறைகள் அனைவராலும் பின்பற்றும் வகையில் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.மது, புகை, மாமிசம் உட்கொள்பவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்க தகுதியற்றவர்கள் என நூலாசிரியர் எச்சரித்துள்ளார். அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய அரிய நூல்.
-
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 472) தமிழ் மருத்துவத்தின் வரலாற்றினை ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர், தனது அரிய ஆய்வேட்டை நூலாக்கியுள்ளார். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழஞ் சிறப்புமிக்க தமிழ் மருத்துவச் சிறப்பியல்புகள், இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிந்து கிடக்கிறது. தமிழ் மருத்துவத்தின் வரலாறு, தமிழில் மருத்துவ நூல்கள், சித்தர் நெறி, சித்தர்களின் மருத்துவப் பாடல்களின் அருஞ் சிறப்பு என்று நுண்ணிய ஆய்வின் வெளிப்பாடாக ஏராள நுட்பத் தகவல்களை விரித்துரைத்துள்ளார். வாதம், வைத்தியம், யோகம், ஞானம், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் ஆழமான செய்திகளை உலகுக்கு உரைத்த சித்தர்கள் பெரும் புலவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். அவர்கள் பாடல்களின் சாரங்களைத் தெள்ளத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது இந்நூல். இத்துறையில் மேலும் ஆய்வு செய்வோருக்குப் பெரிதும் உதவும் வழிகாட்டி நூலாகவும், அறிஞர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் படித்துப் பயன் பெறும் விதமாகவும் அமைந்துள்ள நூல் இது. பின்னிணைப்பாக 20 தலைப்புகளில் ஆசிரியர் தொகுத்தளிக்கும் செய்திகள் அனைவரும் தவறாது படிக்க வேண்டிய விஷயச் சுரங்கம் எனலாம்.
-
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34B, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128.)இரு நோய்களைப் பற்றிய முழுமையான, ஆழமான, தெளிவான அலசல்.
-
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 188)ஆசனங்களால் ஏற்படும் பயன்கள், நீங்கும் நோய்கள், எவ்வாறு ஆசனப் பயிற்சிகள் செய்வது, நலமுடன் வாழ நல்ல வழிகள் எவை எவை என்பதை ஆசிரியர் இந்நூலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். சித்த மருத்துவத்தின் மகத்துவம், போதைப் பொருட்களால் உடல்நலக் கேடுகள், அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் விளக்கியுள்ளார்."சிரிப்பு நோய் தீர்க்கும் மருந்து' என்பதை எடுத்துக்காட்டுவதுடன் மூலிகைகளின் குணநலன்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆசனங்கள் எவ்வாறு செய்வது என்பது பற்றிய விளக்கப் படங்கள் இடம் பெற்றுள்ளன.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்