இயற்கை வேளாண்மை குறித்து வரலாற்று பின்புலத்துடன் எழுதப்பட்டுள்ள நுால். நஞ்சற்ற உணவு உற்பத்தியை முன் வைக்கிறது. இந்த நுால், 31 அத்தியாயங்கள் கொண்டது. இயற்கை வேளாண் உற்பத்தி குறித்த கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மனித சமுதாயத்தின் அங்கம் இயற்கை வேளாண்மை என்ற தலைப்புடன் துவங்குகிறது. அடுத்து, நிலத்தை மேலாண்மை செய்யும் விதம் குறித்த விபரங்களை தருகிறது.இந்தியாவில் வேளாண்மை துறை சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும் அலசுகிறது. இயற்கை உரம் தயாரிப்பு பற்றிய விபரங்களை கொண்டுள்ளது. கால்நடை தீவனத்தின் முக்கியத்துவம் பற்றியும் அலசுகிறது.பசுமை புரட்சிக்கு பின் விவசாயம் என்ற அத்தியாயம், இந்திய வேளாண்மையின் பாதிப்பு குறித்து பேசுகிறது. இந்திய விவசாயத்தை புரிந்து கொள்ள உதவும் நுால்.– ஒளி
- விவசாயம்
- இயற்கை வேளாண்மையில் இணைந்திருப்போம்
இயற்கை வேளாண்மையில் இணைந்திருப்போம்
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் விவசாயம்
வீட்டில் காய்கறித் தோட்டம்
கண்ணதாசன் பதிப்பகம்
விவசாயம்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
வீட்டுக்குள் தோட்டம்
கண்ணதாசன் பதிப்பகம்
விவசாயம்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
275 மூலிகைகளின் முக்கிய குணங்களும், பயன்களும்
நர்மதா பதிப்பகம்
விவசாயம்
தொகுப்பாளர்: டி.வெங்கட்ராவ் பாலு, பதிப்பாசிரியர்: எம்.வி.விஸ்வநாதன், வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 288).மொத்தம் 275 மூலிகைகளின் தாவரவியல் பெயர்கள், அவற்றின் பயன்படும் உறுப்புகள், அதன் பயன்கள், அவற்றில் அடங்கியுள்ள வேதியியல் சத்துக்கள், அம்மூலிகைகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் என்று தெளிவாகப் பட்டியலிடப்பட்டு அவற்றின் படங்களோடு வெளியிடப்பட்டிருக்கும் மிகப் பயனுள்ள நூல்
மூலிகை வணிகவியல்- -1
கண்ணதாசன் பதிப்பகம்
விவசாயம்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
மூலிகை வணிகவியல்- -2
கண்ணதாசன் பதிப்பகம்
விவசாயம்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள்
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
விவசாயம்
இயற்கை விஞ்ஞானி ஆர்.எஸ்.நாராயணன். வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்:238). வளர்ச்சியா, வாழ்வா? இன்றைய தேவை வளமையை உயர்த்தும் மரங்கள் - கால்நடைகள் தொழுஉரம், இடைமாடுகள், பஞ்ச கவ்யம், மண்புழு வளர்ப்பும், புழுக்கழிவு உரமும், பசுமை உரங்கள், இயற்கை உரமாக நுண்ணுயிரிகள், மாடியில் காய்கறித் தோட்டம், வனவேளாண்மை, மூலிகைப்பண்ணை என 12 அத்தியாயங்கள் நூலில் வரிசையாக இடம் பெற்றுள்ளன. ரசாயன உரங்கள், வீரிய விதைகள் பூச்சி மருந்துகளினால், உணவு விஷமானது, நோய்கள் வளர்ந்தன. உதிரும் இலைகளில் 16 வகையான ஊட்டங்கள் உள்ளன, காடுகளில் செழித்து வளரும் மரங்களுக்கு செயற்கை உரங்கள் இடப்படுவதில்லை. இயற்கை வேளாண்மைக்கு கால்நடைகளின் பங்கு, போன்ற பல வளமான கருத்துகள் நூலில் இடம் பெற்றுள்ளன. இயற்கை வேளாண்மைக்கு இந்நூல் ஒரு கையேடு என்பதில் ஐயமில்லை.
நாடு காக்கும் நல்லதிட்டம்
அறிவுப் பதிப்பகம்
விவசாயம்
அறிவுப்பதிப்பகம், 142, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை-14. (பக்கம்: 292. டெம்மி) இயற்கை வேளாண்மை பற்றி அற்புதமான பயனுள்ள நூல். உரமாகும் ஊர்க்குப்பைகள், பார்புகழும் பஞ்சகவ்யம், வீட்டு மாடியிலும் தோட்டம் போடலாம், முருங்கை விவசாயம், பனை வளர்ப்பு, மழை வழங்கும் பாடம், தாகம் தீர்க்கும் தர்பூசணி என 44 தலைப்புக்களில் இன்றைய விவசாய நிலைக்குத் தேவையான பல பயனுள்ள ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. விவசாயிகள் மட்டுமல்ல, விவசாய விளைப்பொருட்களை உணவாக கொண்டும் அனைவரும், படித்துத் தெரிந்து கொள்ளலாம். இத்தகைய நூல்கள் நாட்டின் விவசாயத்தை உயர்த்த பெரிதும் பயன்படும்.
ஏலக்காய் - ஒரு விபரத் தொகுப்பு
மணிமேகலை பிரசுரம்
விவசாயம்
மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 208). ஆசிரியரே ஒரு ஏலக்காய் விவசாயியாய் இருப்பதால் அது பற்றிய அனைத்துச்சேதிகளையும் நயமாக விவாதித்திருக்கிறார். ஏலம் பயிரிடுவதிலும் பழைய முறை ஒன்று உண்டு. இன்றைய முறையும் உண்டு. இவற்றையும் உயர் விளைச்சல் பெறப் பின்பற்ற வேண்டிய தொழில் நுட்பங்களையும், ஏலத்தைப் பற்றிய சகல செய்திகளையும் மணக்க மணக்கத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
குறுந்தாவரம் (போன்சாய்)
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விவசாயம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 90. விலை: ரூ.40). குறுந்தாவர வளர்ப்பிற்கு பொருத்தமான தாவர வகைகள், அவற்றைக் குறுந்தாவரமாக வளர்ப்பதற்குப் பயன்படுத்தும் பொதுவான முறைகள், தேவையான உபகரணங்கள் போன்ற முக்கிய விஷயங்கள் விரிவாகவும் தெளிவாகவும் தரப்பட்டுள்ளன. இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் இக்கலைநுட்பத்தின் பெறுமதியையும், அதன் சிறந்த தன்மையையும் உணர்ந்து கொள்வர் என்பது நிச்சயம்.போன்காப் மரங்களின் வண்ணப் படங்களும் நூலுக்கு எழில் சேர்த்துள்ளன.
தமிழர் கண்ட தாவரவியல்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
விவசாயம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600 113. (பக்கம்: 144). வெற்றிலை, பாக்கு, மஞ்சள், வாழைமரம், தேங்காய், மாவிலை, பூ, பழங்கள், இன்றி தமிழர் இல்ல விழாக்கள், கோயில் திருவிழாக்கள் நடைபெறுவது இல்லை! காலங்கள் மாறலாம், ஆனால், தமிழன் என்றென்றும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்துள்ளான் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்!இந்நிலையில், 5000 ஆண்டுகளுக்கும் முந்தைய, தொன்மையான தொல்காப்பியம் மற்றும் அதன் பின்னர் மலர்ந்த சங்க இலக்கியங்கள் வாயிலாக, பண்டைத் தமிழர், செடி, கொடி, மரம், நீர்த்தாவரம் உள்ளிட்ட தாவரவியல் பற்றிய நுண்ணறிவைப் புலப்படுத்தும் செய்திகள் யாவும் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதோ சில சுவைமிகு செய்திகள்:தாவர இனம் மட்டுமே தமக்குரிய உணவைத் தயாரித்துக் கொள்வதுடன், பிற உயிரினங்களையும் வாழ வைக்கும் உணவுப் பொருட்களையும் வழங்குகிறது. மேலும் மனிதன் நோய்க்கு மருந்து, ஆடை, குடியிருப்புக்கான கூரை, தடுப்புகள், அழகூட்டவும், நறுமணம் கமழவும் உதவியது (பக்:11).வேம்பும், கடுவும் தமிழரின் ஆதி மருந்துகளாக, கற்ப மருந்துகளாகத் திகழ்ந்தன (பக்.50).தாவரங்களைச் சார்ந்து மயில், கிளி, புறா, யானை போன்ற உயிரினங்கள் வாழ்ந்து வந்தன (பக்.87).சேர, சோழ, பாண்டியரின் குடி அடையாளத்தைச் சுட்டும் பூக்களாக பனை, ஆத்தி, வேம்பு திகழ்ந்தன (பக்.25).தேர்ந்தெடுத்த பொருளின் அடிப்படையில் திறனாய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்ற பின், அதை முன்னிறுத்தி டாக்டர் செ.அரங்கநாயகம் அறக்கட்டளைச் சொற்பொழிவையும், ஆற்றிய பின்னர் தற்போது நூலாகவும் வெளியிட்டுள்ள ஆசிரியர், ஒரே கல்லில் மூன்று மாங்கனிகளை வீழ்த்திய சாதனை வியக்க வைக்கிறது!ஆயினும், "சங்க காலத்திற்குப் பின்' என்ற தலைப்பில் அமைந்துள்ள கட்டுரையில் (பக்:103, 104, 112) தாவரவியலுக்கு சிறிதளவும் தொடர் பற்ற வரலாறு சார்ந்த நிகழ்வுகளான வட மொழி ஆதிக்கம், வருணாசிரமம், வைதீகக் கடவுள் நெறி, தமிழ்மொழி புறக்கணிப்பு போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களைத் திரித்தும், திருத்தியும் எழுதுகிறார். சிவன், முருகன், திருமால் என்ற கடவுளர் குறித்து அவதூறு விமர்சனங்களை, எருக்கையும், அரளியையும் குழைத்து, ஒரு சிலரை மகிழ் விப்பதற்காகவே வழங்கியுள்ளார்.நூலாசிரியரின் கருத்துக்களுக்கு நிறுவனம் பொறுப்பன்று என்ற தமிழக ஆராய்ச்சி நிறுவனத்தின் குறிப்பு காலங்கடந்த, தட்டிக் கழிக்கும் முயற்சி, நகைப்புக்கும் உரியது!ஜாதி, மதம், இனம், மொழிபால் உள்ள வெறி நீறுபூத்த நெருப்பை ஒத்தது... எரிமலையாக வெடித்துச் சிதறிட ஒரு சிறு பொறி போதுமானது அல்லவா?
வீட்டிலேயே வளர்க்கலாம்! செல்வம் தரும் தென்னை வளர்ப்பு
நர்மதா பதிப்பகம்
விவசாயம்
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17. (பக்கம்: 144). "செல்வம் தரும் தென்னை' எனும் இந்நூல் தென்னை வளர்ப்போருக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் வீணாகப் போகிற குளியல் அறைத் தண்ணீரிலும் தென்னை வளர்க்கலாம் என்று சுட்டிக்காட்டி, பயனற்றவை என மக்கள் கருதும் பொருட்களில் இருந்தும் பயனுள்ள தென்னையை உற்பத்தி செய்வதற்கு வழிகாட்டியுள்ளார். திருவையாற்றில் அமைந்துள்ள தென்னை வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் தென்னை சாகுபடியாளர்களுக்கு மிகவும் பயனுள்ள முறையில் "கோகோஸ்' உர மருந்துக் கலவை மூலம் அதிக பலன் பெறவும் உதவி வருகின்றனராம். உங்கள் வீட்டில் தென்னை மரங்கள் உள்ளதா? அல்லது புதிதாக தென்னை வளர்க்க ஆசையா? முதலில் இந்நூலை கையில் வைத்துக் கொள்ளுங்கள். கற்பக விருட்சம் போன்றது இந்த நூலும்.வாழ்வியல் ரகசியங்கள் வழிகாட்டும் இயற்கை விவசாயப் பண்ணைகள் 300+ இயற்கை விஞ்ஞானி : நூலாசிரியர்: ஆர். எஸ். நாராயணன். காந்தி கிராம அறக்கட்டளை, காந்தி கிராமம். அஞ்சல்- 624 302, திண்டுக்கல் மாவட்டம். (பக்கம்: 212. விலை : ரூ. 75)தமிழகத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவோர் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இந்நூலில் 314 பேர்களின் விவசாய சாதனைகள், புகைப்படங்கள் இடம் பெற்று படிப்பவர்களை வியக்க வைக்கிறது. மரம் நடுவோம், வனம் வளர்ப்போம், மரமே உரமாதல், மண்புழு உரம், பஞ்சகவ்யம் தயாரிப்பு முறை, வாழ்வியல் ரகசியங்களாக விளக்கப்பட்டுள்ளன. மரங்களே தெய்வம், வெள்ளைச் சர்க்கரை வேண்டாம், மாடியிலும் தோட்டமிடலாம். மாதுளை பயிரிட்டு, அதை அணில், கிளிகளிடமிருந்து பாதுகாக்க. பக்கத்தில் பப்பாளியை பயிரிட்டு, மாதுளையை காப்பாற்றியது சுவையான தகவல். இப்படி ஒரு மிகவும் பயனுள்ள நூல் இதுவரை வெளிவந்துள்ள மாதிரி தெரியவில்லை.
களை எடு
கிழக்கு பதிப்பகம்
விவசாயம்
இன்றைய விவசாயம். விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவு எக்கச்சக்கம். இவ்வளவு கஷ்டப்பட்டு உற்பத்தி செய்தும் விளைபொருள்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. தவிர, செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் நிலம் பாழாகிறது. வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற கதையாகத்தான் ஆகிவிட்டது. இதற்கெல்லாம் என்ன தீர்வு? செலவில்லாமல் விவசாயம் செய்ய முடியுமா? லாபம் சம்பாதிக்க முடியுமா? பல்லாயிரம் வருடப் பழைமையான நம் விவசாயமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் தவறவிட்டதன் விளைவுதான், நாம் இன்று அனுபவிக்கும் கஷ்டங்கள் என்று ஆதாரபூர்வமாக அடித்துச் சொல்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். விவசாயத்தில் மீண்டும் லாபம் சம்பாதிக்கும் அத்தனை வழிகளையும் சொல்லித் தருகிறார்.
மூலிகைப் பயிர்களின் சாகுபடியும் மூலிகை உணவுகளும்
கார்த்திக் பதிப்பகம்
விவசாயம்
ஆசிரியர்-முனைவர் இரா.சரவணக்குமார்,முனைவர் அ.சோலைமலை.வெளியீடு:கார்த்திக் பதிப்பகம்,அமுதம் மனை, முதல் மாடி,புதிய எண்.28/5,பழைய எண்.36ஏ/5, கோவிந்தம் ரோடு,மேற்கு மாம்பலம்,சென்னை-33.பக்கங்கள்:216.
ஏற்றுமதி வாய்ப்புள்ள மூலிகைப் பயிர்களின் சாகுபடி
அருணவிஜய நிலையம்
விவசாயம்
ஆசிரியர் குழு-முனைவர் அ.சோலைமலை,முனைவர் இரா.சரவணக்குமார்,முனைவர் சி.முரளிதரன்,முனைவர் கு.பிரபாகரன்,முனைவர் பா.சந்திரசேகரன். வெளியீடு: அருணவிஜய நிலையம், அமுதம் மனை,முதல்தளம்,புதிய எண்.28/5,பழைய எண்.36ஏ/5,கோவிந்தன் ரோடு,மேற்கு மாம்பலம்,சென்னை-33.பக்கங்கள்:160.
தென்னை
நவீன வேளாண்மை
விவசாயம்
நவீன வேளாண்மை, 17, அஜீஸ் முல்க் முதல் தெரு, ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, சென்னை -600 006.
வெள்ளாட்டுப் பண்ணை
நவீன வேளாண்மை
விவசாயம்
நவீன வேளாண்மை, 17, அஜீஸ் முல்க் முதல் தெரு, ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, சென்னை -600 006. (பக்கங்கள்-176)
கறவை மாடு வளர்ப்பு
நவீன வேளாண்மை
விவசாயம்
நவீன வேளாண்மை, 17, அஜீஸ் முல்க் முதல் தெரு, ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, சென்னை -600 006. (பக்கங்கள் - 144)
பெருநெல்லி
நவீன வேளாண்மை
விவசாயம்
நவீன வேளாண்மை, 17, அஜீஸ் முல்க் முதல் தெரு, ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, சென்னை -600 006.
மக்காச்சோளம் சாகுபடி
நவீன வேளாண்மை
விவசாயம்
நவீன வேளாண்மை, 17, அஜீஸ் முல்க் முதல் தெரு, ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, சென்னை -600 006.
காய்கறிகள் சாகுபடி
நவீன வேளாண்மை
விவசாயம்
17, அஜீஸ் முல்க் முதல் தெரு, ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, சென்னை -600 006.