Advertisement

அறிவியலை மிரட்டிய அதிசய மனிதர்கள்


அறிவியலை மிரட்டிய அதிசய மனிதர்கள்

₹ 195

எழுத்துரு அளவு:

வினோத ஆற்றலால் உலகை வியப்பில் ஆழ்த்திய அறிஞர்கள் பற்றிய நுால். நம்பவே முடியாத செயல்கள், கனவிலும் கணிக்க முடியாத உண்மைகள், பற்றி கூறப்பட்டுள்ளது. நம் நாட்டில் யோகிகள், ஞானிகள், சித்தர்களின் செயல்கள், வினோத ஆற்றல்கள் பற்றிய விபரங்களை அறிந்திருப்போம். அது போல், நம்ப முடியாத செயல்களால் பிரபலமான அறிஞர்கள் பற்றி பேசுகிறது.எந்த அடிப்படையும் இன்றி, வியத்தகு ஆற்றலை வெளிப்படுத்தியது பற்றிய விபரங்கள் உள்ளன. ஆரூடங்களை கணித்து வெளிப்படுத்தியது குறித்த தகவல் உள்ளது. தீர்க்க தரிசனங்கள் கூறியவர்கள் பற்றியும் தகவல்கள் உள்ளன. இது போன்ற வியத்தகு ஆற்றல், ஒரே இடத்தில் மட்டுமே வெளிப்படவில்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்துள்ளன. பார்வை சக்தியால், கடிகார முள்ளை வேகமாக ஓட வைத்த யூரி கெல்லர் பற்றிய தகவலும் உண்டு. வித்தியாசமான, வியப்பூட்டும் சக்தியால் உலகில் பிரபலமானவர்கள் பற்றிய விபரங்களை கொண்டுள்ள நுால்.– மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்