Advertisement

செயற்கைக்கோள்கள்


செயற்கைக்கோள்கள்

₹ 85

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை. (பக்கம்: 180). பல்வேறு அறிவியல் தலைப்புகளைப் பற்றி 32 கட்டுரைகள் இந்நூலில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. ஒரே தலைப்பின் கீழ்வரும் வெவ்வேறு கட்டுரைகளை ஒன்றன் பின் ஒன்றாகத் தொகுத்திருப்பின், படிப்பவர்களுக்கு எளிதாக இருந்திருக்கும். கட்டுரைகளில் பயன் படுத்தியுள்ள கலைச் சொற்களுக்கு விளக்கம் கொடுத்திருப்பது படிப்பவர்களுக்கு உதவிகரமாக உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் வெவ்வேறு அறிவியல் கலைச் சொற்களைப் பயன்படுத்துவது அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. அனைவரும் பயன்படுத்தும் முறையில் தமிழ் அறிவியல் கலைச் சொற்கள் அகராதி இருப்பது மிக அவசியம் ஆகிறது.புதுப்பிக்கவல்ல ஆற்றல் வாயில்கள், புதுப்பிக்க வியலாத ஆற்றல் வாயில்கள் என்று பிரித்து, அனைத்து ஆற்றல் வாயில்களையும் பற்றி விரிவாக இந்நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.செயற்கைக் கோள்கள் என்கிற 12வது கட்டுரையில், வரலாறு, வகைகள், ஏவுத்திறன் பெற்ற நாடுகள் என வகைப்படுத்தி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. எல்லா நூல் நிலையங்களிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்