-
- பழமொழிகள்
- பழமொழி நானூறு
பழமொழி நானூறு
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் பழமொழிகள்
உலகப் பழமொழிகள்
கண்ணப்பன் பதிப்பகம்
பழமொழிகள்
கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை-600 016. போன்: 22310743
பயனுள்ள பழமொழிகள்
கலைஞன் பதிப்பகம்
பழமொழிகள்
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை -600 017. தொலைபேசி 2431 3221: 2434 5641
Proverbs
கலைஞன் பதிப்பகம்
பழமொழிகள்
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600017. போன் : 044 - 2434 5641, 2431 3221.
தமிழ்நாட்டுப் பழமொழி அகரவரிசைச் சுருக்கம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம்
பழமொழிகள்
திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 522, டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை -18.
ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம்
பழமொழிகள்
திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 522, டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை -18.
லெனின் பொன்மொழிகள்
கலைஞன் பதிப்பகம்
பழமொழிகள்
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 600 017
அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்
கலைஞன் பதிப்பகம்
பழமொழிகள்
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 600 017
காரல் மார்க்ஸ் - பொன்மொழிகள்
கலைஞன் பதிப்பகம்
பழமொழிகள்
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 600 017
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்
கலைஞன் பதிப்பகம்
பழமொழிகள்
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 600 017
காதல் பொன்மொழிகள்
கலைஞன் பதிப்பகம்
பழமொழிகள்
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 600 017
The book of common & Uncommon Proverbs
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ்
பழமொழிகள்
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704
கால்நடைப் பழமொழிகள்
முனைவர் ந.ஆனந்தி
பழமொழிகள்
முன்னோர் தம் அனுபவத்தால் எளிமையாகவும், சுருக்கமாகவும், அனைவருக்கும் பயன்படும் வகையில் கூறிய பழமையான சொற்றொடர்களே பழமொழிகள். மனதில் எளிதில் பதிய வைத்துக் கொள்ளும் அறிவுரைகளாகவும் அவை இருக்கும். அவற்றில் உவமைகள் அமைவதும் உண்டு. கால்நடைப் பழமொழிகளின் அமைப்பு முறையையும், பிற கருத்துகளையும் இரண்டு கட்டுரைகளில் ஆசிரியர் விளக்குகிறார்.பல்லாயிரக்கணக்கான பழமொழிகளில், கால்நடைகளைப் பற்றிய பழமொழிகளை பா.மதுகேசுவரன் தொகுத்தளித்துள்ள முறை நன்று. பசு, காளை, எருமை, ஆடு முதலிய விலங்குகள் பற்றியும், அவற்றோடு தொடர்புடைய பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், உழவு பற்றியும் வழங்கும் பழமொழிகளை வகுத்தும் தொகுத்தும், அகர வரிசைப்படி அளித்துள்ளார். சில பழமொழிகள் தலைப்புக்கேற்ப, மாடு, பசு, பால் மீண்டும் மீண்டும் வருவதையும் பார்க்கலாம்.கால்நடைகள் பற்றிய பழமொழிகள் மறைமுகமாக, மக்களுக்குக் கூறப்படும் அறிவுரைகளாகவே அமைகின்றன. ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது.பேரா., ம.நா.சந்தானகிருஷ்ணன்
எஸ்.எஸ்.போத்தையா – கரிசக்காடு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பழமொழிகள்
மொத்தம், 900 சொலவடைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார் எஸ்.எஸ்.போத்தையா. அதை அகர வரிசைப்படுத்தி அழகாகப் பதிப்பித்துள்ளார், பா.செயப்பிரகாசம். பழமொழிகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்தாமல், சொலவடைகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்துவதற்கான விளக்கத்தை, இந்த நூல் தெரிவிக்கிறது.மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் முதலானவையும், கம்பளத்தார் குறித்த வரலாறும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. டைரி எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்த போத்தையாவின் டைரிக் குறிப்புகளும், அவர் பயணித்த ஊர்களின் காட்சிகளும், படங்களுடன் தரப்பட்டுள்ளன.படைப்பாளி ஒருவர் பற்றி, வரலாற்றுடன் அவர் வாழ்ந்த மண்ணின் மணத்தையும் அள்ளித் தரும் நூல் இது.– முகிலை ராசபாண்டியன்
சொலவடைகளும் சொன்னவர்களும்
சூரியன் பதிப்பகம்
பழமொழிகள்
‘பழமொழி’ என்ற சொல், ‘சொலவடை’ என, புதுக்கப்பட்டது; நம் பண்பாட்டின் நிலைக்களனாய் உள்ள கிராமங்களில், உழைக்கும் மக்களிடமிருந்து உருவாகும், உன்னத அனுபவங்களில் இருந்து, பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளே, இந்த சொலவடைகள். வாழ்வியல் அனுபவம், கவித்துவம், நக்கல் மூன்றும் கலந்து இதில் மிளிர்கிறது.நாட்டுப்புற இலக்கியமாய் தெம்மாங்கு, பள்ளு, கும்மி, லாவணி ஏடுகளில் பதிவாகி உள்ளன. வீட்டுப்புற இலக்கியமாய் வழக்கிலும், வாய்ச் சொற்களிலும் மட்டுமே உலாவரும், ‘எழுதப்படாத இலக்கியம்’ சொலவடைகளை, ஒன்பது தலைப்புகளில் ஆசிரியர் மிக அற்புதமாகத் தொகுத்து ஆவணம் ஆக்கியுள்ளது, வரலாற்றுப் பதிவு.பெர்சிவல், ஜான்சன் போன்ற கிறிஸ்தவ அறிஞர்கள் வெளியிட்ட ஆங்கில நூல், இந்தப் பணிக்கு வழிகாட்டியதாகக் கூறியுள்ளார். சொலவடைப் பட்டியலாக பல தலைப்புகளில் பிரித்துப் போட்டு தராமல், அது உருவான சூழலையும் அழகாக விளக்குகிறார்.‘ரோஷம் உள்ளவனுக்கு கடன் கொடு! ரோஷம் கெட்டவனுக்கு பெண்ணைக் கொடு’ – இது நடைமுறை ஞானம்; ஆன்மிக ஞானம் அல்ல. மனதிற்குள் நடக்கும் கொடுக்கல் வாங்கல் பேச்சை, வெளிப்படையாகப் பேசச் சொலவடையால் மட்டுமே முடியும்’ (பக். 203). சொலவடையும், விளக்கமும் பாலும், தேனுமாய் கலந்து இனிக்கின்றன.எது சொலவடை? தருணங்கள், கசப்பு, கரிப்பு, குறும்பு சிரிப்பு, யதார்த்தம், விமர்சனம், விவேகம், மனோபாவம், மிச்சம் இந்த ஒன்பது தலைப்புகளில், சொலவடைகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. ஆனால், முதல் பக்கம் தலைப்புகளின் பொருளடக்கமே இல்லை. நூலுக்குள் நுழைபவருக்கும், ஊருக்குள் நுழைபவருக்கும், முதலில் பெயர்கள் தானே படிக்கத் தேவை?ஏழ்மையின் சொல்வாக்கில் விளைந்த, ‘இலக்கியச் செல்வாக்கு’ இந்த சொலவடைகள்! உயர்வும், தாழ்வும் ஊராருக்கு வெளிப்படுத்தும் நாட்டுப்புற ஆளுமையை, இந்நூல் நயமுடன் பேசுகிறது.முனைவர் மா.கி.இரமணன்
வாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள்
குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
பழமொழிகள்
-
அறிந்த பழமொழிகளும் அறியாத விளக்கங்களும்
வனிதா பதிப்பகம்
பழமொழிகள்
நம் முன்னோர் தம் பட்டறிவால் கண்டுணர்ந்த பழமொழிகள் எனலாம். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் கொண்ட பழமொழிகள் ஆழ்ந்த பொருள் கொண்டவை. ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாடு, பட்டறிவு ஆகியன மிகச் சுருக்கமாகப் பேச்சு நடையில் வெளிப்பட்ட ஒரு சொற்றொடரே பழமொழி.இவ்வாறு விளங்கும் பல்லாயிரக்கணக்கான பழமொழிகளும், 75 பழமொழிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு மக்கள் இதுவரை அறிந்து கொள்ளாத நிலையிலான விளக்கங்களை நுணுகி ஆராய்ந்து பல்பொருள் விளக்கத்தையும், அவை நவிலும் வாழ்விலும் விழுமியங்களையும் இனிய எளிய நடையில் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.பிழைபட அமைந்த பழமொழிகளையும், திரிபு பெற்ற பழமொழிகளையும், மருவி வழங்கும் பழமொழிகளையும் கண்டுணர்ந்து அவற்றிற்குச் செப்பமான வடிவங்களைக் கூறி, அவற்றுக்கான விளக்கங்களைக் கூறி, தம் சமூகவியல் ஆய்வுத் திறத்தைப் புலப்படுத்தியுள்ளார்.சான்றாக, ‘ஆயிரம் முறை பொய் சொல்லி ஒரு திருமணத்தைச் செய்’ என்னும் பழமொழியின் திருந்திய வடிவம், ‘ஆயிரம் முறை போய்ச் சொல்லி ஒரு திருமணத்தைச் செய்’ எனவும், ‘மாமியார் ஒடச்சா மண்பானை; மருமக ஒடச்சா பொன்பானை’ என்னும் பழமொழியின் திருந்திய வடிவம், ‘மாமியார் உழைச்சா மண் வளம்; மருமகளும் உழைச்சா பொன்வளம்’ எனவும் கூறியுள்ளார்.‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்’ என்னும் பழமொழிக்கு ராமாயணக் கதையையும், ‘ஆறிலும் சாவு; நூறிலும் சாவு’ என்னும் பழமொழிக்கு மகாபாரதக் கதையையும் கொண்டு விளக்குவது புதுமையான சிந்தனை. ‘வாக்கு அறிந்தவனுக்கு வாத்தியார் வேலை; போக்கு அறிந்தவனுக்கு போலீஸ் வேலை’ எனச் செப்பமான வடிவத்தைத் தந்து மருவி வழங்கும் பழமொழிக்கு விளக்கத்தைத் தந்துள்ளார்.‘ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்’ என்னும் பழமொழிக்கு இவர் அளிக்கும் விளக்கம், புதிய கோணத்தில் அமைந்துள்ளது. மக்களைப் பண்படுத்தும் வகையில் மருவி, பிழைபட வழங்கும் பழமொழிகளை ஆராய்ந்து, சிறப்பான கருத்துக்களை வழங்கும் நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்கு உரியது.– புலவர் சு.மதியழகன்
வள்ளுவத்தில் உவமை உலா
கங்கை புத்தக நிலையம்
பழமொழிகள்
அணியிலாக் கவிதை, முகையிலா வனிதை என்பது பழமொழி. உவமையணியின் தோற்றம் மிகவும் பழமையானது. 36 உவம உருபுகளை கூறுகிறது தொல்காப்பியம். அதில், ஒன்று தான், ‘போல’ என்ற உருபு.வள்ளுவர் கூறும் உவமைகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. முதல் குறளே எடுத்துக்காட்டு உவமையாக, வாழ்க்கையைப் பெருங்கடல் என விளக்க, பிறவிப் பெருங்கடல் என்று துவங்கும் குறளை காட்டுகிறார்.அமுதத்தைவிடச் சுவையானதாக, குழந்தைகளின் பிஞ்சுக் கைகளால் அளாவப்பட்ட கூழ் என்று விளக்குகிறார். கிணற்றின் ஊற்றுநீருக்கு கல்வி கற்றலைக் கூறுவதும், பெண்ணுருவத்தில் வந்து போர் செய்யக்கூடிய விழியம்புகளே, கூற்றுவன் என்று கூறுவதையும் விளக்கியுள்ளார். வள்ளுவத்தை மேலும் அறியத் துாண்டும் நூல்.– டாக்டர் கலியன் சம்பத்து
சிறந்த பழமொழிகளும் சுவையான விளக்கங்களும்
மணிமேகலை பிரசுரம்
பழமொழிகள்
வாழ்க்கையை சரியான பாதையில் நகர்த்தி செல்ல உதவும் தன்னம்பிக்கை நுால். மனித மனங்கள், சுபாவங்கள் குறித்து, 83 தலைப்புகளில் எளிய நடையில் உள்ளன. பயத்தை ஏன் வெளிக்காட்டக் கூடாது; பேராசையால் வரும் வினைகள்; கடுமையான வார்த்தைகளால் ஏற்படும் காயம்; நல்லவர்களோடு ஏன் நட்பு வைத்திருக்க வேண்டும்; காக்கை போல் ஏன் கூடி வாழ வேண்டும் போன்ற கேள்விகளுக்கு, பழமொழி வழியாக விளக்கம் பெற முடியும்.அறிவை விட எப்படி அனுபவம் சிறந்தது என்பதை விளக்குகிறது. பிரச்னைகளை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ள உதவும் நுால்.– டி.எஸ்.ராயன்
பழமொழிகள் 5000
செந்தமிழ் பதிப்பகம்
பழமொழிகள்
அன்றாட வாழ்க்கையில், அரிய கருத்துக்களையும் எளிதில் மற்றவர்களுக்கு விளங்க வைக்க பயன்படுத்தும் பழமொழிகளின் தொகுப்பு நுால். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், துயரங்களைத் துடைப்பதற்கும், பட்டறிவு பெறுவதற்கும் பயன்படுகின்றன. வாழ்வியல் நிகழ்வுகளைக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் கருத்துக்களை உணர்த்துகின்றன. அனுபவ உரைகளைத் தொன்றுதொட்டு பயன்படுத்தி வந்துள்ளனர் மக்கள். அவற்றை நாமும் பயன்படுத்துகிறோம். வருங்கால தலைமுறையினரும் பயன்படுத்துவர். அனுபவ உரைகளில் எதுகை, மோனை இடம் பெற்றுள்ளன. கவிதை நடையிலும், சில பேச்சு வழக்கிலும் அமைந்துள்ளன. அவற்றில் 5,000 பழமொழிகள் அகர வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. இவை அறிவுரைகளாகவும், இடிப்புரைகளாகவும், ஆத்திசூடி வடிவிலும் அமைந்துள்ளன. வாழ்க்கை நலம், கல்வி, நட்பு, உழவு, மருத்துவம், சோதிடம், பருவ காலம், அன்றாட வாழ்வியல் என அனைத்தும் மனதில் தைக்கும்படி பொருட்செறிவு பெற்றதாக விளங்குகின்றன. மாணவர்களுக்குப் பயன்படும். – புலவர் சு.மதியழகன்
தமிழ்நாட்டு பழமொழிகள்
முல்லை பதிப்பகம்
பழமொழிகள்
தமிழகம் முழுதும் வழங்கி வரும் பழமொழிகளை, முறையாக தொகுத்து தரும் நுால். சுவாரசியம் மிக்க, 4,000 பழமொழிகள் உள்ளன. அனைத்தும் அகர வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளது.‘அகம் குளிர்ந்தால் முகம் மலரும்’ என்பதில் துவங்கி, ‘வவ்வாலை கொன்றாலும் பிடியை விடாது’ என்பது வரை, தனித்தனியே தொகுக்கப்பட்டுள்ளது. சுவாரசியம் மிக்கதாகவும், ஆய்வுகளுக்கு ஏற்ற வகையிலும் உள்ளது. தமிழ் பழமொழிகளின் தொகுப்பு நுால்.– ஒளி