-
- வரலாறு
- கரிகாலன் கட்டிய கல்லணை
கரிகாலன் கட்டிய கல்லணை
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் வரலாறு
History and Culture of Tamil Nadu. (As gleaned from Sanskrit Inscriptions) Volume2 (c1310 A.D.c.1885 A.D.)
டி.கே. பிரிண்ட்வேர்ல்டு பி.லிட்
வரலாறு
D.K.Printworld (P) Ltd., Sri Kunj F52, Bali Nagar, New Delhi 110 015.தமிழகத்தில் கிடைத்துள்ள சமஸ்கிருத (வடமொழி) கல்வெட்டுகள் செப்பேடுகளில் காணப்படும் வரலாற்றுச் சான்றுகள் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. ஆசிரியரின் முந்தைய நூலின் பல்லவர், சோழர், பாண்டியர் ஆட்சி காலத்திய (கி.பி.1310 வரை) கல்வெட்டுகள் ஆராயப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து விஜயநகர், நாயகர், மராத்தியர் கால சாசனங்கள் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. நிர்வாகம், பொருளாதாரம், சமூக வாழ்க்கை, கல்வி, இலக்கியம், சமயம் போன்ற தலைப்புகளில் வழங்கப்பட்டுள்ளன. சமஸ்கிருதம் தமிழ் கலந்த மணி பிரவாளம் பாணியில் அமைந்த கல்வெட்டுகளும் உள்ளன. கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் போன்ற அரசர்கள் ஆண்டபோது இருந்த பலம் பொருந்திய ஆட்சி பிற்காலத்தில் வலிவு இழந்து சிற்றரசர்கள் ஆங்காங்கே தலை தூக்கினர் என்பதை சாசனங்கள் மூலம் அறிகிறோம். மேலும், இந்நூலில் அரசுக் கோப்பைகளை தயாரித்த கவிஞர்களை பற்றி குறிப்புகள் கிடைத்துள்ளன. சுவைமிக்க பல செய்திகளை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அணிந்துரை வழங்கிய கல்வெட்டு அறிஞர் டாக்டர் கே.பி.ரமேஷ் கூறியுள்ளபடி, சமஸ்கிருத மொழி எவ்வாறு இணைப்பு மொழியாக திகழ்ந்தது என்பதை அறிய இந்நூல் துணை செய்கிறது. நல்ல பல நிழற்படங்கள் சேர்ந்திருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.
மகாபாரதம்
யங் கிட்ஸ் பிரஸ்
வரலாறு
Young kids Press, 1620 JBlock, 16th main Road, Anna Nagar, Chennai600 040. (Pages: 408. Price: Rs.140). நமது பாரம்பரியப் பெருமைக்குக் கட்டியம் கூறி இன்றளவும் உயர்ந்து நிற்கும் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் மகோன்னதமான தார்மீக நெறிகளை உள்ளடக்கியவை. வியாசர் எழுதினார். பின் பல மொழிகளில் பெயர்க்கப்பட்ட மகாபாரதத்தை நீலா சுப்ரமணியம் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். இவருடைய ஆங்கிலம் எளிமையாக, சின்னச் சின்ன வாக்கியங்களுடன் அமைந்திருக்கிறது. அதனால் வாசிப்பதற்கு எளிமையாக இருக்கிறது. கதையில் நிகழும் சம்பவங்களை விளக்கி படங்கள் வெளியிட்டிருக்கின்றனர். நல்ல காகிதத்தில் நேர்த்தியாக அச்சிட்டு, பிரசுரம் செய்திருக்கின்றனர். மகாபாரதத்தில் சுவாரஸ்யங்கள் நிறைந்த கதைப் பகுதிகள் அதிகம் உண்டு. எனவே, படிப்பவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அம்சங்கள் நிறைந்தது மகாபாரதம் என்பதைச் சொல்லவே தேவையில்லை.
TOWARDS INDEPENDENCE... (A collection of selected articles on indian nationalism)
சுதந்திரா பப்ளிகேஷன்ஸ்
வரலாறு
Sudandhira Publications, Rajapalayam. (பக்கம்:227)இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை சான்றாதாரங்களுடன் தமிழிலும், ஆங்கிலத்திலும் துல்லியமாகப் படைக்கும் ஆற்றல்மிகு டாக்டர்.வி.வெங்கட்ராமனின் இந்நூல் ஆங்கிலத்தில் படைக்கப்பட்டு, இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ள 17 கட்டுரைகளும் அபூர்வமானவை, "இந்திய தேசியம், "பஞ்சாபின் ஆவேசம்', "கலியுக பிரகவாதன்', "சுதந்திரச் சங்கும், உப்புசத்தியாகிரகமும்', "ராபர்ட் வில்லியம் டி.ஆஷ் கொலை', "அஹிம்சை' போன்ற பல கட்டுரைகள் மிகவும் சுவாரஸ்யமாகவும் உணர்வு பூர்வமாகவும் படைக்கப்பட்டுள்ளன. நூலாசிரியரின் ஆங்கில நடைக்காகவே, மறுமுறையும் படிக்கலாம். பயனுள்ள வரலாற்றுத் தொகுப்பு
அதிசய ஆலயங்கள் 60 (தமிழகத் திருக்கோவில்கள் தல வரலாறு)
தமிழ் புத்தகாலயம்
வரலாறு
தமிழ்ப் புத்தகாலயம், 34, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை-17.திருத்தல உலா செல்பவர்களுக்காக 71 திருத்தலங்களைப் பற்றி விளக்கமாகவும், வரலாற்று குறிப்புகளுடனும் இந்நூலில் விரிவாக தந்துள்ளார் ஆசிரியர்.இவர் ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பணிபுரிந்த காலங்களில் பல விருதுகளையும், பதக்கங்களையும் பெற்றவர். சமயப் பணியிலும் ஈடுபாடு கொண்டு பலரும் அறிந்ததும் அறியாததுமான பல கோவில்களைப் பற்றிய விவரங்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் படைத்தளித்துள்ளது சிறப்பாக அமைந்திருக்கிறது
THE SOUTH INDIAN REBELLIONS BEFORE AND AFTER 1800
பழனியப்பா பிரதர்ஸ்
வரலாறு
Palaniappa Brothers, No.25, Peters Road, Chennai 600 014. (Pages: 128).இந்தியத் திருநாட்டின், அதிலும் குறிப்பாக தென்னாட்டின் விடுதலை வேள்விக் களத்தில் நிகழ்ந்த பல, பலரும் அறியப்படாத செய்திகளை ஒன்பது வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்து கொடுத்த ஆய்வுரைகளின் தொகுப்பே இந்நூல். பொதுவாக இந்தியத் திருநாட்டில் விடுதலைக்கு முதற்குரல் 1887ல் சிப்பாய்க் கலகத்தின் வழியாகத் தான் ஒலிக்கத் தொடங்கியது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அதற்கு முன்னரே அதாவது பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன்னரேயே விடுதலை வேள்விக்கு தீ மூட்டப்பட்டு விட்டது என்பதை வரலாற்றுச் சரித்திரச் சான்றுகளோடு கருத்தரங்கம் கூட்டி விவாதித்து, ஒன்பது பேராசிரியர் பெருமக்களால் ராஜபாளைய ராஜா கல்லூரியில் வாசித்தளிக்கப்பட்ட ஆய்வு அறிக்கைகளின் ஒட்டு மொத்தமான தொகுப்பே இந்நூல். தமிழ்நாடு, மலபார், திருவனந்தபுரம், கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்னக மாநிலங்களில் 1800க்கு முன்னரே எவ்வாறு விடுதலைக்கு வித்திட்ட சரித்திர நாயகர்களின் வீர நிகழ்வுகளை எளிமையான ஆங்கிலத்தில் தந்துள்ளனர் கட்டுரை ஆசிரியர்கள்.தமிழ் நூல்களை மட்டும் பதிப்பித்து வருகின்ற தமிழகப் பதிப்பாளர்கள் மத்தியில் பழனியப்பா ஆங்கில நூலையும் அழகுற பதிப்பித்துத் தர முடியும் எனக் கூறி, இந்நூலை வாசகர்களுக்கு முதல் வரவாக தந்திருக்கிறது. சரித்திர ஆய்வாளர்களுக்கு இந்நூல் ஒரு வரலாற்று ஆவணம்.
வரலாற்றுப் பாதையில்... (கட்டுரைகள் புத்தகம்-1):
குமரன் பதிப்பகம்
வரலாறு
குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 208)கட்டுரை ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல், இந்நூலில் உள்ள 100 கட்டுரைகளும், நாட்டுப் பற்று, சமூக உணர்வு, தியாக சிந்தனை, கடின உழைப்பு, தன்னம்பிக் கை, மனித நேயம், உலகப் பார்வை ஆகியவை படிப்போர் நெஞ்சங்களில் பதிய வைக்கும் வகையில் அமைந்துள்ளன.சுதந்திரப் போராட்டம், உலகப் போர், அறிவியல் அற்புதங்கள், நாட்டை உலுக்கிய புரட்சிகள் ஆகிய பல தரப்பட்ட விஷயங்கள், அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மனிதர்கள் பற்றி எல்லாம், சுருக்கமாக, அதே நேரத்தில் அவசியமான தகவல்கள் அனைத்தையும், சுவைபட, எளிய தமிழ் நடையில் தொகுத்து வழங்கியுள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் பாஷ்யம், கணித மேதை ராமானுஜன், சுவாமி விவேகானந்தர், ஜி.சுப்ரமணிய ஐயர், வ.உ.சி., டார்வின் ஆகியோர் பற்றிய கட்டுரைகளில் பல புதிய தகவல்கள் உள்ளன. பொது உடைமைக் கொள்கையாளரான ஆசிரியர் தனது சொந்தக் கருத்துக்களை புகுத்தாமல், உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்லியுள்ள நேர்மை பாராட்டுக்குரியது. கட்டுரைகள் மிகச் சிறியதாக இருப்பதால் வாசகர்கள் சிரமப்படாமல் நிறைய தகவல்களைப் படிக்கலாம். இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
தெலுங்கானா போராட்டம்
தமிழ் புத்தகாலயம்
வரலாறு
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
புரட்சி
தமிழ் புத்தகாலயம்
வரலாறு
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
பகத்சிங்கும் புரட்சித் தோழர்களும்
தமிழ் புத்தகாலயம்
வரலாறு
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17
ரஷ்யப் புரட்சியின் வரலாறு
தமிழ் புத்தகாலயம்
வரலாறு
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
சமூகம் ஒரு மறுபார்வை
தமிழ் புத்தகாலயம்
வரலாறு
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
இந்தியாவும் இந்து மதமும்
தமிழ் புத்தகாலயம்
வரலாறு
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
தூக்கு மேடைக் குறிப்பு
தமிழ் புத்தகாலயம்
வரலாறு
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
வால்காவிலிருந்து கங்கை வரை
தமிழ் புத்தகாலயம்
வரலாறு
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17
பொது உடைமைதான் என்ன ?
தமிழ் புத்தகாலயம்
வரலாறு
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17
Quiz On Indian National Movement
வித்யா பப்ளிகேஷன்
வரலாறு
Vidya Publi cations, 15, First Main Rd, Ponmeni Jayanagar, Madurai625010. Phone: (0452) 2380042.ஆங்கில நூல். அதுவும் நவீன வரலாற்றுப் பேராசிரியர் உருவாக்கிய நூல். சமகால வரலாறு, மற்றும் கடந்த 200 ஆண்டுகளில் நடந்த பல சம்பவங்களை தொடர்ச்சியாக அறிந்து கொள்வது சிரமம். வரலாறு என்றாலே ஆர்வம் குறைந்து கணினியில் தகவல் திரட்டும் காலத்தில் உண்மைத் தகவல்களை குவிஸ் பாணியில் தொகுத்த ஆசிரியர் முயற்சிக்கு பாராட்டுதல்கள்.சமூக, பொருளாதார முக்கியத்துவங்கள் வாய்ந்த தகவல்களை இதில் சொல்லியிருப்பதையும், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு மட்டும் அல்ல, வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் கேள்விகளும், பதிலும் அமைந்திருக்கின்றன. அதற்கு உதவியாக பத்து பக்கங்களில் வரலாற்றின் சுருக்கம் அழகுறத் தரப்பட்டிருக்கிறது.குவிஸ் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த நூலில் 1200 கேள்விகள், முதல் பாதியில் கேள்விகள், அக் கேள்விகளுடைய எண்களுக்கு ஏற்ப பிற்பகுதியில் பதில்கள், சுருக்கமாக, நயமாக, தெளிவாக தொகுத் தளிக்கப்பட்டிருக்கிறது.அதில் சில தகவல்கள்:அரசியல் தீர்க்க தரிசனத்தை இந்தியருக்கு வழிகாட்டிய பிரிட்டிஷ் நிர்வாகி யார் என்ற கேள்விக்கு பதில் ரிப்பன் (எண்:51), இந்திய தேசிய காங்கிரசில் உரையாற்றிய கோல்கட்டாவின் முதல் பட்டதாரிப் பெண் காதம்பினி கங்குலி (எண்75), "சாதி ஒழிய வேண்டும், அல்லது நாம் ஒழிய வேண்டும் என்று 1883ல் முழங்கிய தேசியவாதி ஜி.சுப்பிரமணிய அய்யர் (எண் 100), "பாலபாரதி' என்ற இலக்கிய இதழை நடத்தியது வ.வெ.சு அய்யர் (எண் 281) வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தைத் தலைமை ஏற்றது யார்? அவர் தலைமையில் சென்ற தொண்டர் எண்ணிக்கை - ராஜாஜி, தொண்டர்கள் நூறுபேர் (எண்.863). இப்படி பல முக்கியத் தகவல்கள் உண்டு. இந்தியா பிரிவு பட்ட நாளன்று, "அது துயர நாள், இந்தியாவின் அழிவுக்குக் காரணம்' என்று மாபெரும் தேசியவாதி ஆசார்ய கிருபளானி கூறிய தகவல், "சுதேசி' என்று எல்லாரும் அடிக்கடி கூறும் வார்த்தைக்கு சரியான அர்த்தம் 1198 ஆம் கேள்விக்கு பதிலாக அமைந்திருக்கிறது.மொத்தத்தில் எது சரியான தகவல் என்றறியாமல் குழம்பும் நிலையை மாற்றிடவும், வரலாற்றின் சில நயமான பகுதிகளை ஆசிரியர் இந்த நூலில் தொகுத் தளித்த விதமும் பாராட்டுதற்குரியது. பள்ளிகள், கல்லூரிகளில் இருக்க வேண்டிய நூல். பொது அறிவு என்ற பெயரில் பல தகவல்களைத் தவறாகத் தரும் காலத்தில் நயமாக முகிழ்த்த நறுமலர்.
தந்திரோபதி
சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
வரலாறு
சு.முத்து, வெளியீடு: சுரா புக்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. (பக்கம்: 216) பாரத நாடு பழங்காலத் தில் இருந்தே மனித குலத் தின் உடல் நலத்திற்கு, எத்தகைய பயிற்சிகள் தேவை என் பதை கலைகளின் மூலமும், யோகாசனங்கள் மூலமும் விளங்க எடுத்துரைத்துள் ளது. இந்த வரிசையில், சுராவின் "தந்திரோபதி' ஒரு முக்கியமான மைல்கல் எனலாம்.கையினால் செய்யப்படும் முத்திரைகளையும், ஆசனங்களையும் விளக்கி அவற்றின் பயன்பாட்டையும், பாதிப் பையும் எடுத்துரைக்கிறார். முத்திரைகள் வெளிப்படுத் தும் உணர்ச்சியையும், அவற் றுக்கான ஸ்லோகங்களையும் பக்கம்-11ல் தெளிவாக்கிறார். அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஒரே வகையான அணுக்களின் கூட்டிணைவிற்கும், முத்திரைகளுக் கும் உள்ள தொடர்பை கூறி முத்திரைகளின் மூலம் வரும் தெய்வீக சக்தியையும் விளக் குகிறார். படங்கள் மூலம், எளிதாக முத்திரைகளைக் காண்பித்து அவற்றின் செயல் முறை, கால அளவு, பயன் கள் மற்றும் அவற்றை செய் யும்போது பின்பற்ற வேண் டிய எச்சரிக்கைகளையும் விரிவாக எடுத்துரைப்பது நூலின் தனித்தன்மை ஆகும்.அத்தியாயம் -2ல் இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த தந்திரமார்க்கமானது, உன்னத மனித நிலைக்கு சிறந்த மார்க் கம் என்பதைக் கூறி யோகிகள் இதைத் தான் பின்பற்றி ஆன்மிக வளத்துடன் இருந்தனர் என்பதையும், ஆன்மிகம் என்பது மதமல்ல, அது கொள்கை மற்றும் கோட் பாடுகளின் அடிப்படையில் அமைந்த, அதே சமயம் அறிவியல் பூர்வமானது என்பதையும் எல்லாரும் புரிந்து கொள் ளும் வண்ணம் விளக்கப் பட்டிருக்கிறது.அறிவியல் அடிப்படையில் நமது கலாசாரத்தின் முக் கியத்துவத்தை விளக்கும் நூல்.
History and Culture of Tamil Nadu: (As gleaned from Sanskrit Inscriptions) Volume1 (upto c.1310 A.D)
டி.கே. பிரிண்ட்வேர்ல்டு பி.லிட்
வரலாறு
D.K.Printworld (P) Ltd., Sri Kunj, F52, Bali Nagar, New Delhi110 015.தமிழக வரலாற்றை தொடர்ச்சியாக எழுதுவதற்கு இலக்கியம் தவிர கல்வெட்டுகள் பெரும் துணை புரிகின்றன. அவற்றில் பெரும்பாலானவை தமிழ் கல்வெட்டுகளே ஆகும். ஆனால், பல கல்வெட்டுகள் சமஸ்கிருதத்திலும் உள்ளன. அக்காலத்தில் சமஸ்கிருத மொழி இந்திய துணைக் கண்டத்தின் இணைப்பு மொழியாக இருந்ததால் அம்மொழியிலும் சாசனங்கள் இங்கு காணப்படுகின்றன. இரு மொழியில் எழுதப்பட்ட பல சாசனங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக பாண்டியரது தளவாய்புர செப்பேட்டை குறிக்கலாம்.தமிழகத்தில் பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தை சேர்ந்த சமஸ்கிருத கல்வெட்டுகளையும் சேப்பேடுகளிலும் கிடைக்கின்ற வரலாற்று செய்திகளை நன்கு ஆராய்ந்து ஏழு தலைப்புகளில் இவ்வாசிரியர் கொடுத்துள்ளார். அரசியல் அமைப்பு, நிர்வாகம், ராணுவம், பொருளாதாரம், சமூக வாழ்க்கை, கல்வி, இலக்கியம், சமய வளர்ச்சி போன்ற தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிடைத்துள்ள அரிய பல சான்றுகள் எவ்வாறு பயனுள்ளவையாக அமைந்துள்ளன என்பதை ஆசிரியர் ஆங்காங்கே விளக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக இலக்கியம், கல்வி என்ற தலைப்பில் அரசருக்கு அளிக்கப்பட்ட கல்வி முறையைப் பற்றியும், அக்காலத்தில் வாழ்ந்த சிறந்த வடமொழிப் புலவர்களை பற்றியும் பல சான்றுகள் கிடைத்துள்ளன.அணிந்துரையில் பேராசிரியர் கே.வி.ராமன் குறிப்பிட்டுள்ளது போன்று பயனுள்ள பல செய்திகளை தரும் வடமொழிக் கல்வெட்டுகளை இந்நூல் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார்.
இரண்டாம் உலகப் போர்
சாந்தி பதிப்பகம்
வரலாறு
சாந்தி பதிப்பகம், சென்னை-2. (பக்கம்: 336. விலை: ரூ.150). உலகப் போர் வரலாற்று ஏடுகளில் நிலையாக இடம் பெறுவதாகும். கி.பி.1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போர், அகில உலகையும் கதி கலங்க வைத்தது. வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் உலக நிகழ்வுகள், தலைவர்களின் செயல்கள், ஜனநாயகம், சர்வாதிகாரத்தின் இடையே கிளர்ந்த போர் - மோதல், விளைந்த 99 உடன்படிக்கையால் எழுந்த சர்ச்சை என்ற எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி நூலாக ஆசிரியர் அரும்பாடுபட்டு சமைத்துள்ளார்.போலந்து படை எடுப்பில் தொடங்கி ரஷ்யா - பின்லாந்து போர், நார்வே, டென்மார்க், ஹாலந்து படையெடுப்புகள், பிரான்ஸ் அடி பணிதல், மத்திய தரைக்கடல், மாஸ்கோ முற்றுகை, கசபிளாங்கா மாநாடு, பல்ஜ் மோதல், ரைன் ஊடுருவல், ஜெர்மனியின் சரண் அடைவு, அணுகுண்டு வீச்சு, ஜப்பான் சரணடைதல் என்று 36 தலைப்புகளில் நடந்தவற்றை வாசகர் முன் கொண்டு நிறுத்துகிறார் ஆசிரியர்.போர் நாயகர்கள் என்ற பிற்சேர்க்கையில் ஹிட்லர், சர்ச்சில் ரூஸ்வெல்ட், ஸ்டாலின், முசோலினி, டோ÷ஷா, டிகால், டிட்டோ, சுபாஷ் சந்திரபோஸ் என்று 74 பிரதான புள்ளிகளின் சிறு குறிப்பையும் தந்துள்ளார். உள்நாட்டுத் தளபதி ஸ்டாபன்பெர்க் ஹிட்லரைக் கொல்ல சதி செய்ததும் அதிலிருந்து ஹிட்லர் தப்பியதும் (பக்.206-207) அழகாக விளக்கியுள்ளார். உலக வரலாற்றில் உலா காண விரும்புவோர் படிக்க வேண்டிய நூல்.
தமிழகக் கோட்டைகள்
அம்ருதா பதிப்பகம்
வரலாறு
அம்ருதா பதிப்பகம், சென்னை-116. ( பக்கம்:198)நல்ல தொரு விமர்சகரும், ஓவியம், சிற்பங்களில் தேர்ந்தவர் என்ற முறையில் சிறப்பாக இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாமக்கல் அனுமாரின் உச்சந்தலையில் கற்றைக் குடுமி, வேலூர்க் கோட்டையில் அமைந்த கோவிலில் உள்ள ஜ்வரகண்டேச்வரர் கல்யாண மண்டபம் பற்றிய தகவல்கள், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தான் வசித்த மண்டபத்தின் எளிமை என்று பல விஷயங்கள் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வாசித்துப் பாருங்கள்.