Advertisement

பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ


பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ

₹ 175

எழுத்துரு அளவு:

பேரிடர் காலத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவும், ஹாம் ரோடியோ தொழில்நுட்பம், அதை பயன்படுத்தும் விதம் பற்றிய தகவலை உள்ளடக்கிய நுால். எளிமையான, 13 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது.இயற்கை சீற்றங்களின் போது, தொலைபேசி சேவைகள் செயலிழக்க வாய்ப்பு உண்டு. அது போன்ற நேரங்களில், அமெச்சூர் வானொலி என்ற, ‘ஹாம்’ சேவை முக்கிய பங்காற்றும். மீட்பு நடவடிக்கைகளில் உதவும். அந்த சேவையை பற்றி விளக்குகிறது இந்த நுால்.ஹாம் ரோடியோவை நிறுவுவது, பயன்படுத்தும் வழிமுறை, உரிமம் பெறும் நடைமுறை, அது சார்ந்த தேர்வு என, விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. உலகம் முழுதும், பேரிடர் காலங்களில், ஹாம் ரோடியோவின் சேவை பெரும் உதவி புரிந்த வரலாறுகள் பல உள்ளது. பேரிடர் கால சேவை செய்வோருக்கு உதவும்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்