மதி நிலையம், 4 (39), தணிகாசலம் ரோடு, தி.நகர், சென்னை17. (பக்கம்: 96. விலை: ரூ.40).இளைஞர்கள் தமிழுக்குச் சேவை செய்ய, கவிதை நயத்தை வாழையடி வாழையாக வளர்த்திட, வந்து கொண்டிருக்கின்றனர் என்பதற்கு அத்தாட்சி இந்த நூல். வயதில் வளர்ந்து விட்டவர்களிடமிருந்து, கவிதை இளைஞர்கள் கைகளுக்கு இன்னும் மெருகேறி வந்திருப்பதற்கும் ஒரு உதாரணம்!"ஏலேய்' என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பில் பல சிறந்த கவிதைகள் உள்ளன. எரிமலை போல பிழம்பை பீய்ச்சிக் கொண்டு வந்தாலும், தன் கவித்துவத்தால் கட்டுப்படுத்திய எண்ணங்களை, அவற்றின் வேகம் குறையாது, இகழ்ச்சியும் வெறுப்பும் இன்றி கொடுத்திருப்பது இந்தத் தொகுப்பின் ஒரு தனிச் சிறப்பு. கோவை ஞானி, தமது முன்மொழியில் சொல்வது போல, கவிதைகளில் பாலைத்திணை தெரிகிறது. பாலைத்திணையிலும் அன்பு உண்டு உணர்வு உண்டு என்பதை நிலை நிறுத்துகிறார்."பம்பரம்' என்ற சிறிய கவிதை, ஒரு நூறு பக்க விஷயத்தை அடக்கமாகக் கூறுகிறது. பஸ்சில் ஏற முடியாதவனின் மன நிலையை மற்ற எல்லா நிலைகளிலும் செய்ய முடியாதவனின் மன நிலைக்கு ஒப்பிடலாம். இந்தக் கவிதையை ஆனந்த விகடன் முத்திரைக் கவிதைப் போட்டியில் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை!"சொல்லுங்கள் தேநீரகத்தில் ஊரில் மழை பெய்த செய்தி படித்து அழாமல் இருக்க முடியுமா?' நான் கடற்படையில் சேர்ந்திருந்த நேரத்தில் இதே மாதிரி வேறு ஒரு காரணத்திற்காக கண்ணீர் விட்டிருந்ததால் என்னால் இவ்வரியைப் பூரணமாக அனுபவிக்க முடிந்தது.இன்றைய நிலைக்குப் பொருத்தமாக இருக்கிறது. "இந்தியக் கிரிக்கெட்டையுங்கூட பெய்ந்தும் கெடுக்கிறது. பெய்யாமலும் கெடுக்கிறது மழை'! இவ்வரிகளுக்குச் சமமாக உள்ளன "எண்ணெய் பிறப்பே காணாத தலையுடன் அபிநயம் பிடிக்கிறார்கள் சர்வதேச ஆட்டக்காரன் போஸ்' என்ற வரிகளும், ஏக்கம் தெரிந்தாலும் ஏமாற்றம் இல்லை!தலைப்புக் கவிதையான "ஏலேய்' கவனிக்க வேண்டியது, சொல்லைப் பற்றி இவர் சொல்வது, பெரிய கவிஞர்கள், சொல்லைப் பற்றி எழுதிய கவிதைகள் எல்லாம் தாண்டி அண்டத்தை எல்லாம் தன்னுள் அடக்கியிருப்பது போலத் தோன்றுகிறது! "ஒலிக்கும் ஓரோர் கணத்திலும் ஒரு சொல் அன்பின் கர்ப்பம் தரிக்கிறது' இவ்வரிகள் சிறந்த சொல் நயமும் ஆழ்ந்த அர்த்தமும் கொண்டு, நம்மை ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கின்றன."ஒப்பாச்சி ஒப்பு சென்னால் விலா எலும்பு வேகாமலே எந்திரிச்சு நிற்கும் சவம்' ஒரு சவால் போலுள்ளது இந்தக் கவிதை!வறுமையிலும், ஏழ்மையிலும், நம்பிக்கையிலும் நல்ல எண்ணங்களும் மடிந்து விடுவதில்லை என்பதற்கு இந்நூல் ஒரு உதாரணம். சாதாரண தமிழில், புரியும் படியான நல்ல கவிதைகளை இயற்ற முடியும் என்பதையும், விளம்பரமின்றி பல நல்ல தமிழ் கவிஞர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பதையும் வயதில் சிறியவராயினும் நினைப்பதில் பெரியவர்களாக இருக்கலாம் என்பதையும் ராமசாமி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். தமிழ் கூறும் நல்லுலகம் வரவேற்க வேண்டிய நூல். நேர்த்தியான முறையில் சிறந்த ஓவியங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள நூல். பதிப்பித்தவரும் பாராட்டப்பட வேண்டியவர்.
- கவிதைகள்
- ஏலேய்!
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் கவிதைகள்
பிறவிக் கவிஞர் சி.ராமசாமி கவிதைகள்
தணிகேசன் பதிப்பகம்
கவிதைகள்
தணிகேசன் பதிப்பகம்,கடலூர் சி.புதூர், சிறுபாக்கம் அஞ்சல், திட்டக்குடி - வட்டம், கடலூர்-606 123. (பக்கம்: 544.) பறவைகளுக்குத் தொழில் பறத்தல்; கவிஞர்களுக்குக் கவிதை. பிறவிக் கவியாக திகழ்பவருக்கு சொல்ல வேண்டுமோ?இறைவன் - தமிழ் - இயற்கை - காதல் - தத்துவம்-நாட்டு நடப்பு - தலைவர்கள் - தேசியம் - சமூகம் - சிறுவர்கள் - சமூகக் கேடுகள் - கொந்தளிப்பு - களிப்பு - அறிவுரை - கனிவுரை என 400 பாடல்களுக்கும் மேல் இந்நூலில் இடம் பெறுகிறது. புதிய கருத்துக்கள் - புதிய நோக்கு - நூதன உரசல் - அலசல் சற்று தேடித் தேடி கண்டுபிடிக்க வேண்டும். நல்ல மரபுக்கவிதை நூல்.
பெண்கள் பண்டிகை
குமரன் பதிப்பகம்
கவிதைகள்
குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. ( பக்கம்:88)பெருங்கவிகளின் கருப்பொருள் பெண். "பெண்' பிரக்ஞையில் வெளிவந்துள்ளன மூன்று நூல்களுமே. "பா' கவிஞரின் பெயருக்கு முன் இயற்கையாகவே அமைந்துள்ளது. மூன்றையும் படித்து முடித்தால் பா (வையரைப் போற்றும்) விஜய் என்றாலும் மிகையாகா.எழுத்துக்கள் மட்டும் கவிதையாகாமல் இடம் பெறும் சித்திரப் படங்களும் எழில் சேர்க்கின்றன. மொத்தமாக 48 கவிதைகள். ஓரிரண்டைத் தவிர அனைத்தும் புதுக்கவிதைகள். இளைய காதல் வட்டங்களுக்கு இந்த நூல்கள் நல்ல சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்.மற்றவர்கள் "மலரும் நினைவுகளாக' மூழ்கி விடுவர்.சிங்கார நளினங்களை, நெளிவுகளை, பிரமிப்புகளை புதுக்கவிதைகளில் பிரகடனப்படுத்தியதற்கும், பரவசப்படுத்துவதற்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் இளவட்டங்கள் கவிஞருக்குக் காணிக்கையாக்க வேண்டும்.
ஐஸ் கட்டி அழகி
குமரன் பதிப்பகம்
கவிதைகள்
குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்:80)பெருங்கவிகளின் கருப்பொருள் பெண். "பெண்' பிரக்ஞையில் வெளிவந்துள்ளன மூன்று நூல்களுமே. "பா' கவிஞரின் பெயருக்கு முன் இயற்கையாகவே அமைந்துள்ளது. மூன்றையும் படித்து முடித்தால் பா (வையரைப் போற்றும்) விஜய் என்றாலும் மிகையாகா.எழுத்துக்கள் மட்டும் கவிதையாகாமல் இடம் பெறும் சித்திரப் படங்களும் எழில் சேர்க்கின்றன. மொத்தமாக 48 கவிதைகள். ஓரிரண்டைத் தவிர அனைத்தும் புதுக்கவிதைகள்.இளைய காதல் வட்டங்களுக்கு இந்த நூல்கள் நல்ல சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். மற்றவர்கள் "மலரும் நினைவுகளாக' மூழ்கி விடுவர்.சிங்கார நளினங்களை, நெளிவுகளை, பிரமிப்புகளை புதுக்கவிதைகளில் பிரகடனப்படுத்தியதற்கும், பரவசப்படுத்துவதற்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் இளவட்டங்கள் கவிஞருக்குக் காணிக்கையாக்க வேண்டும்.
முக்கனிகள் - கவிதை
அகிலா பதிப்பகம்
கவிதைகள்
அகிலா பதிப்பகம், "அங்கப்பா இல்லம்,' 36, காந்தி நகர், கணபதி, கோவை-641 006. (பக்கம்: 144.)நல்ல மரபுக் கவிதைகள் இடம் பெற்றுள்ள சிறந்த கவிதைத் தொகுப்பு. தமிழ் மொழியின் சிறப்பு, தமிழர் தம் பெருமை காதல்- என்றெல்லாம் பல பொருட்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ள கவிதைகள் பலரின் கவனத்தைக் கவர வேண்டியவை. ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர் என்பதை சில கவிதைகளில் காண்கிறோம். பேரவையின் சீற்றத்தைக் கண்டு சினந்தெழுந்து எழுதுகையில் (ஆண்டவனா?) கவிஞர் கடவுளையே சபித்து தீர்த்து விட்டார். குழந்தைகளுக்கும் இதில் சில மரபுக் கவிதைகள். உள்ளபடியே இவர் தன்னை கவிஞர் எனக் கூறிக் கொள்ள எல்லாத் தகுதியும் இவருக்கு இருக்கிறது என்பதற்கு இந்தக் கவிதை நூல் கட்டியம் கூறுகிறது.
பீங்கானிழையருவி புதுக்கவிதைகள்
இளந்திரை பதிப்பகம்
கவிதைகள்
இளந்திரை பதிப்பகம், 2/78, ஜி.ஆர்., நகர், மதுரை-625 007. (பக்கம்: 104). ஆசிரியரின் 48 புதுக்கவிதைகள். பொறுமையும் நேரமும் இருந்தால் வாசித்து மகிழலாம்.
பொய்கை
பழனியப்பா பிரதர்ஸ்
கவிதைகள்
பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14. (பக்கம்:96)அருட்செல்வரின் கழனியில் விளைந்த ஆல விழுதின் ஆணிவேர் இக்கவிஞர். கவிஞர் பெ.சிதம்பரநாதனின் கவிதைப் படைப்பான "பொய்கை' பழனியப்பா பிரதர்ஸ் வழி முகிழ்ந்து வந்திருக்கிறது. பல்வேறு மலர்கள் பிறந்து, வளர்ந்து, மணம் பரப்பி, உளம் மகிழ வைக்கும் நீர்ப்பரப்பு தான் பொய்கை. அங்கே அல்லியும், ஆம்பலும்; கமலமும் குவளையும், குமுதமும் மலர்ந்து விரிந்து கிடக்கும் மலர்ப்படுகை. அது போலவே இந்நூலில் கம்பனின் ராமாயணத்தில் துவங்கி, வள்ளலார், காந்தி, பாரதி, புத்தர் என இம்மண்ணில் வாழ்ந்து, வள்ளுவன் வாய்மொழிந்த வாழ்வியல் நெறிகளை, தங்களது வாழ்வின் வேள்வியாய்க் கொண்டு, வாழ்ந்து காட்டிய சரித்திரமாய் நிற்கின்ற பெருமக்களது போதனைகளைச் சுட்டிக் காட்டும் ஒரு ஞானக்களஞ்சியம் இக்கவிதை நூல்.இதில் ஆசிரியரது பரிவு, வேட்கை, கோபம், துணிவு, சொல்லாட்சி, கவிதை இன்பம் போன்ற பண்பாட்டுக் கூறுகள் பல கவிதைகளில் விரவி இருப்பதையும் பார்க்க முடிகிறது.
கவிதை அல்ல விதை
ஜெயச்சித்ரா
கவிதைகள்
ஜெயச்சித்ரா, 6.தாளமுத்துப் பிள்ளை சந்து,வடக்குமாசி வீதி, மதுரை-1 (பக்கம்-84). கவி அரங்குகளில் தான் வாசித்தவற்றையும், தனது மனம் கவர்ந்த தலைவர்கள் மற்றும் கவிஞர்கள் பற்றி எழுதியவற்றையும் நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளார் ஆசிரியர். திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர், காமராஜர், கலாம் ஆகியோரை பற்றி எழுதப்பட்டுள்ள கவிதைகள் இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை. நாடு, மொழி, சமத்துவம் ஆகியவற்றை பெரிதும் விரும்புவோருக்கு இந்நூல் மிகப் பெரிய பரிசு.
ஜிப்ரானின் காதல் கடிதங்கள்
கவிதா பப்ளிகேஷன்
கவிதைகள்
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
காலத்தை வென்ற வள்ளுவத்தின் காமத்துப்பால்
ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
கவிதைகள்
ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14.பக். 96. மனிதன், மனிதனுக்கு கூறியது குறள் என்று குறிப்பிடுவர். திருக்குறள் மனித வாழ்க்கையின் வழிகாட்டி நூல். அறம், பொருள், இன்பம் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிகளை விளக்கியுள்ளார் திருவள்ளுவர். இன்றைய காலகட்டத்தில், பாலியல், சமூகத்தில் பல கோரமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். அதற்கெல்லாம் காரணம், பாலியல் பற்றிய அறியாமையும், தவறான புரிந்து கொள்ளலுமே! காமத்துப்பாலில், கணவன்-மனைவி உறவு எப்படி இருப்பது சிறப்பு என்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதை அறிந்துகொண்டால், பாலியல் சம்பந்தமான பல பிரச்னைகள் தீர்ந்துவிடும்.காமத்துப்பாலில் உள்ள 250 குறள்களுக் கான விளக்கத்தை புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார் கவிஞர் தெய்வச்சிலை. இதைப் படித்தால், பாலியல் பற்றிய தவறான பார்வை மாறுவது உறுதி!
குரல்களைப் பொறுக்கிச் செல்கிறவன்
பொன்னி
கவிதைகள்
பொன்னி, 2/1758, சாரதி நகர், என்பீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை-91. (பக்கம்: 80)"வாழ்வின் கட்டமைப்பிலிருந்து அது தரும் அனுபவத்திலிருந்தும் நேரடியாகவும், பூடகமாகவும் சமூகத்தின் அறியாமையில் இருந்து விழிப்புக்காக என் கவிதைகள் உருவாகின்றன என்றால் மிகையில்லை' என்று கூறும் ஆசு என்கிற ஆ.சுப்ரமணியனின் இக்கவிதைத் தொகுப்பில், 62 புதுக்கவிதைகள் உள்ளன.""காவிய நடை முகிழ்ந்தஅவளோர் தீயின் பிறை''என சோதிமிகு பெண்ணையும்,""ஞாபகங்களின் சிக்குடைத்து வெளிறிய முகத்தில்ஒரு கண்ணீர்ப் பெருக்கு''என மவுனம் உடைத்த கவியாகி, இருந்தும் - இல்லாதது போல் எல்லாம் தெரிந்த அனுபவ அறிவைப் பல கவிதைகளில் இழையோடச் செய்துள்ளார். எனினும், கவிதைக் கட்டமைப்பு வாசகனைக் கவருவதாய் அமையவில்லை. பல இடங்களில் இடறச் செய்கின்றன
காஷ்மீர் பெண்ணின் கவலைகள்
தாழையான் பதிப்பகம்
கவிதைகள்
தாழையான் பதிப்பகம், 15 (4), அண்ணாமலை நகர், மூன்றாம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 64). உரைநடை ஒப்பனை செய்து கொள்ளும்போது பாடலாகிறது. அது காலில் சதங்கை கட்டிக் கொள்ளும்போது இசைப் பாடலாகிறது. ஆசிரியர் இசைப் பாடலின் மூலம் இதயத்தில் உள்ளதை நடைபயிலச் செய்துள்ளார். 54 அருமையான கவிதைகள். கவிதைப் பிரியர்களுக்கு கவிதை விருந்து.
மௌன இமாலயமும் அமைதி ஆல்ப்ஸூம்
தமிழ் புத்தகாலயம்
கவிதைகள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
சூரியனைப் பார்க்காத சூரியகாந்திகள்
தமிழ் புத்தகாலயம்
கவிதைகள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
விழி தொட்ட தூரமெல்லாம்
தமிழ் புத்தகாலயம்
கவிதைகள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
சூரிய காந்தி
தமிழ் புத்தகாலயம்
கவிதைகள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
காதல் மணத் தம்பதிகள்
தமிழ் புத்தகாலயம்
கவிதைகள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (
காவல் துப்பாக்கி
தமிழ் புத்தகாலயம்
கவிதைகள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
வானப்பந்தல் (கவிதை நூல்)
தேவி
கவிதைகள்
தேவி, 4/5, முதல் குறுக்குத் தெரு, ஜானகிராமன் குடியிருப்பு, வில்லிவாக்கம், சென்னை-49, (பக்கம்: 128) நல்ல கவிதைகள் நம் மனத்தைத் தொடும்; மன மாசு போக்கும்; துன்ப நிலையை மாற்றும்; சுகம் பல தரும். அத்தகு வாய்ப்பும், வலிமையும் கவிதைகளுக்கு இருப்பதால் தான் கவிதை நூல்கள் பல தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இக்கவிதை நூலும் அவ்வகையில் ஒன்று"சுட்டும் விரல் நீ சுழற்றிவிடு சுழலும் பூமி கைப்பந்து, நெட்டை விரல் நீ நீட்டிவிடு நிமிர்ந்த வானம் கைவசந்தான்' என்று தன்னம்பிக்கையே, இதற்கு ஓர் உதாரணம். அனைவரும் படிக்க வேண்டிய கவிதை நூல்
கண்ணதாசன் 100 காவியத் துளிகள்
கவிதைகள்
106/4, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 120).கண்ணதாசன் ஒரு ஜீவநதியாக இருந்து மற்ற கிளை நதிகளுக்கும் கால்வாய்களுக்கும் கற்பனையைத் தந்திருக்கிறார். இந்நூலில் வாழ்வில் கடந்த சுவையான 100 சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
எண்ணங்களின் ஊர்வலம்
திருமகள் நிலையம்
கவிதைகள்
திருமகள் நிலையம், 55, வெங்கட்நாராயணா சாலை, சென்னை-600017. (பக்கம்:103)ஆசிரியரின் புதுக்கவிதைகளின் ஊர்வலமாய் ஒரு தொகுப்பு. ஒவ்வொரு கவிதைக்கும் பொருத்தமான ஒரு புகைப்படம் என புத்தகத்தை அமர்க்களமாகத் தயாரித்திருக்கின்றனர். அரசியல் சாக்கடையா? என்று ஒரு கேள்வி எழுப்பிவிட்டு அதற்கு ஆசிரியர் கூறும் பதிலில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது. இது போல் ஆழ்ந்த கருத்துக்கள் ஆங்காங்கு தென்படுகின்றன