/ கட்டுரைகள் / மறக்கமுடியுமா! (பாகம் – 2)
மறக்கமுடியுமா! (பாகம் – 2)
வெற்றி வாகை சூடிய 100 திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ள நுால். பழைய நினைவுகளை அசை போட, ‘தினமலர்’ நாளிதழில் வெளியான திரைப்பட குறிப்புகளை தொகுத்து வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமா பற்றிய சுவாரசியம் மிக்க தகவல்கள் இடம் பெற்றுள்ளன.குறிப்பிட்ட திரைப்படம் வெளியான ஆண்டு, நடித்த முக்கிய நடிகர்கள், இயக்கியவர், இசையமைப்பாளர், மனம் கவர்ந்த பாடல்கள் என எல்லா விஷயங்களையும் கண்டறிந்து தொகுத்து தரப்பட்டுள்ளது. திரைப்படத் துறையினர், திரை விரும்பிகள் கையில் வைத்திருக்க வேண்டியது. சினிமா பற்றிய சந்தேக கேள்விகளுக்கு சிரமமின்றி பதில் சொல்லலாம். இந்த படங்களை பார்த்த நினைவுகளையும் அசை போட முடியும்.– தி.செல்லப்பா