/ பயண கட்டுரை / இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை

₹ 470

மனிதனுக்கு முக்கியமானது இந்த சந்தானம், வாழ்க்கை வசதிகளா? எல்லா வசதிகளும் படைத்தவர்கள் ஏதோ ஒன்று குறைவதாக கருதி கவலை அடைகின்றனர். எந்த கவலையும் இல்லாத சூழலே மன நிம்மதி. அந்த நிம்மதியை கார், பங்களா, பணம் போன்ற வசதிகள் பெற்றுத் தராது; ஆன்மிகம் மட்டுமே நிம்மதியை கொடுக்கும் என்பதை தெளிவுபடுத்தும் நுால் தான், இன்பமே எந்நாளும் துன்பமில்லை.புத்தக அமைப்பும் புதுமையாக இருக்கிறது. குருவுடன் ஒரு வார ஆன்மிக பயணம் என்ற முறையில் படிப்படியாக ஆன்மிக நெறிமுறைகளை, பல உதாரணங்கள் மூலம் சிஷ்யர்களுக்கு விளக்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. படிக்கும் போது அந்த ஆன்மிகப் பயணத்தில் உடன் சென்றது போன்ற அனுபவம் கிடைக்கும்.– இளங்கோவன்


சமீபத்திய செய்தி