சர்க்கரை நோயை தக்க நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கும். குறிப்பாக, கண், மூளை, இதயம், சிறுநீரகம் செயலிழந்து மரணம் ஏற்படும். இது குறித்து விளக்கமாக எழுதப்பட்டுள்ள புத்தகம்.பேராசிரியர் அர்த்தநாரியின், 50 ஆண்டு கால மருத்துவப் பணி அனுபவத்தில் ஆய்வு செய்து இரண்டு பாகங்களாக எழுதப்பட்டு உள்ளது. முதலில் சர்க்கரை வியாதியின் அடிப்படை, சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாக உள்ளது. சர்க்கரை வியாதியின் ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் விளைவை தடுக்கும் மருந்து, மாத்திரை மற்றும் ஊசிகள் பற்றி விளக்கமாக தரப்பட்டுள்ளது. இன்சுலின் பிரிவுகள், வகைகள் மற்றும் நோயாளிக்கு தர வேண்டிய அளவு விளக்கப்பட்டுள்ளது. இன்சுலின் என்றாலே பயப்படுவோருக்கு இது வரப்பிரசாதமாக அமையும்.இரண்டாம் பாகத்தில் சர்க்கரை நோயால் வரும் இதய பாதிப்பு, சிறுநீரக நோய், நரம்பு மண்டல நோய், கண் பாதிப்பு, கால்களில் புண், காலில் ரத்தக்குழாய் அடைப்பு பற்றி விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ‘ஏஞ்சைனா’ என்ற மார்பு வலி, மாரடைப்பு, ரத்தம் உறையும் தன்மையால் அது கொழுப்பு கட்டியாக மாறுதல், திரம்போசிஸ் உருவாதல், அதை தடுக்கும் வழிமுறைகளை தெளிவாக கூறியுள்ளார் ஆசிரியர்.மாரடைப்பு ஏற்பட்டால், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டிக் மற்றும் ஸ்டென்ட் பொருத்துதல் மற்றும் பைபாஸ் சிகிச்சை தேவைக்கு ஏற்ப செய்ய வேண்டியது குறித்தும் விளக்கி உள்ளார். சிறுநீரக செயலிழப்புக்காண காரணங்களையும், அவற்றை அறிகுறியால் அறிந்து, பரிசோதித்து தடுப்பது பற்றியும் கூறியுள்ளார். உடல் பருமன், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, யோகா மற்றும் உணவு கலோரி விபரங்களையும் தெளிவாக்கியுள்ளார். சர்க்கரை நோயாளி, மருத்துவ மாணவர், செவிலியர், மருத்துவ களப்பணியாளர் மற்றும் சாதாரண மக்களும் புரியும்படி எழுதப்பட்டு உள்ளது. அரசு செயல்படுத்தி வரும், ‘தாய் மொழியில் மருத்துவம்’ என்ற கொள்கைக்கு உகந்த பொக்கிஷமாக இந்த நுால் திகழும் என்பதில் ஐயமில்லை.– டாக்டர் எம்.எஸ்.ரவி, இதய நோய் நிபுணர், சென்னை மருத்துவக் கல்லுாரி
சர்க்கரை நோயினால் வரும் இருதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு
-
எய்ட்ஸ் நோயின் வரலாறு, எய்ட்ஸ் என்றால் என்ன? நோயின் அறிகுறிகள், கண்டறிவதற்கான பரிசோதனைகள், நோய்க்கு மருந்துகள், வராமல் தடுப்பது எப்படி? என 22 அத்தியாயங்களில் எய்ட்ஸ் நோயைப் பற்றிய சகல தகவல்களும் எளிமையாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.வருமுன் காக்க, இந்த நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
-
பிராணிக் ஹீலிங் பவுண்டேஷன் ஆப் தமிழ்நாடு, 15, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-34. (பக்கம்: 344)மருந்தின் உதவி இல்லாமல் நமது உயிர் சக்தியைக் கொண்டு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள் இந்த நூலில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. காற்று, சூரியன், நிலம், நீர், மரம் போன்றவற்றிலிருந்து சக்தியை கிரகித்து, நோயாளிகளிடம் தேக்கமடைந்துள்ள சக்தியை விடுவித்து, பிராண சக்தியை பாய்ச்சி குணப்படுத்தும் அற்புத முறைகள் அனைவராலும் பின்பற்றும் வகையில் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.மது, புகை, மாமிசம் உட்கொள்பவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்க தகுதியற்றவர்கள் என நூலாசிரியர் எச்சரித்துள்ளார். அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய அரிய நூல்.
-
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 472) தமிழ் மருத்துவத்தின் வரலாற்றினை ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர், தனது அரிய ஆய்வேட்டை நூலாக்கியுள்ளார். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழஞ் சிறப்புமிக்க தமிழ் மருத்துவச் சிறப்பியல்புகள், இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிந்து கிடக்கிறது. தமிழ் மருத்துவத்தின் வரலாறு, தமிழில் மருத்துவ நூல்கள், சித்தர் நெறி, சித்தர்களின் மருத்துவப் பாடல்களின் அருஞ் சிறப்பு என்று நுண்ணிய ஆய்வின் வெளிப்பாடாக ஏராள நுட்பத் தகவல்களை விரித்துரைத்துள்ளார். வாதம், வைத்தியம், யோகம், ஞானம், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் ஆழமான செய்திகளை உலகுக்கு உரைத்த சித்தர்கள் பெரும் புலவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். அவர்கள் பாடல்களின் சாரங்களைத் தெள்ளத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது இந்நூல். இத்துறையில் மேலும் ஆய்வு செய்வோருக்குப் பெரிதும் உதவும் வழிகாட்டி நூலாகவும், அறிஞர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் படித்துப் பயன் பெறும் விதமாகவும் அமைந்துள்ள நூல் இது. பின்னிணைப்பாக 20 தலைப்புகளில் ஆசிரியர் தொகுத்தளிக்கும் செய்திகள் அனைவரும் தவறாது படிக்க வேண்டிய விஷயச் சுரங்கம் எனலாம்.
-
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34B, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128.)இரு நோய்களைப் பற்றிய முழுமையான, ஆழமான, தெளிவான அலசல்.
-
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 188)ஆசனங்களால் ஏற்படும் பயன்கள், நீங்கும் நோய்கள், எவ்வாறு ஆசனப் பயிற்சிகள் செய்வது, நலமுடன் வாழ நல்ல வழிகள் எவை எவை என்பதை ஆசிரியர் இந்நூலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். சித்த மருத்துவத்தின் மகத்துவம், போதைப் பொருட்களால் உடல்நலக் கேடுகள், அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் விளக்கியுள்ளார்."சிரிப்பு நோய் தீர்க்கும் மருந்து' என்பதை எடுத்துக்காட்டுவதுடன் மூலிகைகளின் குணநலன்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆசனங்கள் எவ்வாறு செய்வது என்பது பற்றிய விளக்கப் படங்கள் இடம் பெற்றுள்ளன.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்