எமரால்டு பப்ளிஷர்ஸ், 15A, முதல் தளம், காசா மேஜர் ரோடு, எழும்பூர், சென்னை - 600 008. போன்: 044-28193206, 42146994. இமெயில்: info@emeraldpublishers.com. வெப்சைட்: www.emeraldpublishers.com
- சட்டம்
- Reservation and some other important issues under the constitution
Reservation and some other important issues under the constitution
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் சட்டம்
நீங்களும் நுகர்வோரே
விகடன் பிரசுரம்
சட்டம்
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. (பக்கம்: 212). நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தரும் பல விளக்கங்களையும் நுகர்வோர் பாதுகாப்புக்குழு, குறை தீர் மன்றம் போன்றவற்றின் செயல்பாடுகளையும் விரிவாகக் கூறி எந்தெந்த வகைகளில் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம் என்பதை வழக்கு மேற்கோள்களுடன் எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர்.மருத்துவ சேவையில், பயணங்களில், வங்கி சேவையில், தொலைபேசித் துறை, மின் துறை, அஞ்சல் துறை, உணவுப் பொருட்கள், கல்வி தொடர்பாக, பொதுத் துறை நிறுவனங்கள் போன்றவைகளில் நுகர்வோர் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் எளிய முறையில் வழக்குகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள நுகர்வோர் அமைப்புகளின் முகவரிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து ராஜ்யம்
ஆசிரியர்
சட்டம்
கிடைக்கும் இடம், கே.பிள்ளையார் ராஜா, புதிய எண் 4, பழைய எண் 10/9, நேரு தெரு 3 வது சந்து, அண்ணா நெடும்பாதை சூளைமேடு, சென்னை-600094. போன் -044/23613654. (பக்கம் 1384 விலை) தமிழ் நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆம் ஆண்டு தமிழ் வடிவில் வெளியாயிருக்கிறது. கடந்த 2007 மார்ச் முதல் தேதி வரை திருத்தப்பட்ட பதிப்பாகும். சட்ட விளக்கங்கள், அரசாணைகள் , தேர்தல் விதிகள் என்று அனைத்து அம்சங்களும் கொண்ட பிரமாண்ட படைப்பாகும். பல்வேறு தேர்வுகளுக்கு பயன்படும் நூலாகும். கட்டடங்கள் மற்றும் வீட்டு மனைப் பிரிவுகளுக்கு அனுமதி மட்டும் அல்ல, நாய் மற்றும் பன்றிகளுக்கு லைசென்ஸ்கள் உட்பட எல்லாத் தகவல்களையும் கொண்டிருக்கிறது. தமிழில் உருவான இப்படைப்பு, அனைத்து கிராம நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் பயன்படும்.
பொதுமக்கள் அறிய வேண்டிய சட்டங்கள்
வனிதா பதிப்பகம்
சட்டம்
வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டி பஜார், சென்னை-17. (பக்கம்:144 விலை: ரூ.45) மதிப்புக் கூட்டுவரி, குடிமகனுக்கு உரிய அடிப்படை உரிமை, மணமக்கள் கோரும் மருத்துவச் சான்றிதழ் என்று நூலின் பெயருக்கேற்ப விளக்கங்கள். மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு பற்றிய முழு விவரங்களும் பயனுள்ளவையே. சட்டப் புத்தகம் "144' பக்கம் அட! என்ன ஒரு ஒற்றுமை!
மனித உரிமைகள்
தமிழ் புத்தகாலயம்
சட்டம்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
மாண்புமிகு உளவுத்துறை
தமிழ் புத்தகாலயம்
சட்டம்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
தமிழ்நாடு மதிப்புக் கூட்டுவரிச் சட்டம்
புத்தகப் பூங்கா
சட்டம்
புத்தகப் பூங்கா, 9/1, சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ராயப்பேட்டை. சென்னை.600014. தொலைபேசி: 044- 65366816, 42637375. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் மற்றும் மதிப்புக்கூட்டு வரியைப் பற்றிய முழுவிளக்க நூல்கள்.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்
புத்தகப் பூங்கா
சட்டம்
புத்தகப் பூங்கா, 9/1, சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ராயப்பேட்டை. சென்னை.600014. தொலைபேசி: 044- 65366816, 42637375. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் மற்றும் மதிப்புக்கூட்டு வரியைப் பற்றிய முழுவிளக்க நூல்கள்
வேலையாட்கள் விபத்துகளும் இழப்பீடுகளும்
கலைவாணி பதிப்பகம்
சட்டம்
கலைவாணி பதிப்பகம், 103/2 (32) தாணாத்தெரு, சென்னை-600007. (பக்கம்: 32+192)நூலாசிரியர் ஒரு கவிஞர் என்பதால், "இலக்கியத்தில் வேலையாள்' என்னும் தலைப்பில் தொடங்கி, தொழிலாளர் நலச்சட்டங்களைப் பற்றிய அறிமுகம் தந்து விரிவாக வேலையாட்கள் இழப்பீட்டுச் சட்டம் 1923 பற்றி எளிய நடையில் படைத்துள்ளார்."பணியாள்' என்பவர் யார்? அவர் பணியில் இருக்கும் போது ஏற்படும் விபத்துகள் எவ்வகையானவை? அவரது விபத்துக்கு ஏற்ப நஷ்டஈடு எவ்வளவு தருவது? "பணியாள்' பணியின் போது இறந்துவிட்டால் நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? இழப்பீட்டுத் தொகையைப் பெறுவது எப்படி? நடைமுறைச் சிக்கல்கள் என்ன?இப்படிப்பலதரப்பட்ட வினாக்களுக்குச் சட்ட ரீதியாக விடை கூறும் இந்நூல் பல பிரபலமான வழக்குகளும் ஆங்காங்கே கையாளப்பட்டுள்ளன."பணியாளர்கள்', "நிர்வாகத்தினர்', "வழக்கறிஞர்கள்', "சட்டம் பயிலும் மாணவர்கள்' என பலதரப்பட்ட பிரிவினர்களுக்கும் பயன் தரும் வகையில் சட்டங்கள், விதிகள் அனைத்தையும் நல்ல தமிழ் நடையில் மொழிமாற்றம் செய்துள்ளார் நூலாசிரியர்.அட்டவணை, படிவங்கள், கால முறை அறிக்கைகள் போன்றவை உடனடி சரிபார்ப்புக்குத் தேவையான அம்சங்கள். இத்தகைய மொழியாக்க சட்ட நூல்கள் வரவேற்கப்பட வேண்டியவையாகும்.
கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கான பாதுகாப்பு சட்டங்கள்
ஆசிரியர்
சட்டம்
சமூக - பொருளாதார உரிமைக்கான மையம், 1-பி, பாண்டு கிளிக்ஸ் பிளாசா, 330/168, தம்புசெட்டி தெரு, சென்னை-600 கிரெடிட்கார்டு கலாசாரம் அதிவேகமாகப் பரவி வருகிறது. நேர்மையானவர்கள் கூட கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கித் தவிப்பது கண்கூடு. கிரெடிட் கார்டு கணக்கு வழக்குகள், "அவுட்சோர்சிங்' முறையில் கையாளப்படுவதால், ஒவ்வொரு பணப்பரிவர்த்தனையின் போதும் அதிக கவனம் தேவை என்று எச்சரிக்கிறார். அது மட்டும் அல்ல. தாமதமாகச் செலுத்தப்படும் பணத்திற்கு வங்கிகள் சில வசூலிக்கும் வட்டி ஈட்டிக்கார வட்டியை விட அதிகம். இவை பக்கம் 21, 22ல் காணலாம். இந்த கார்டு குறித்த தகவல்கள் ஆங்கிலத்திலும் தரப்பட்டிருப்பது சிறப்பு. மேலும் கார்டு தொலைந்தால் அடுத்து என்ன செய்வது என்ற தகவலும் சிறப்பாகத் தரப்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் காலத்தில் பிரச்னைகளை சுலபமாகச் சந்திக்க வழிவகை காட்டும் நூல். அதுவும் தமிழில் எழுதப்பட்ட முதல் முயற்சிக்கு பாராட்டுதல்கள்
சேவை வரி சொல்வது என்ன?:
ராசி புக் சென்டர்
சட்டம்
ராசி புக் சென்டர், 55, பிரவ் ரோடு, பி.சு.பார்க், ஈரோடு-638 001. (பக்கம்: 102. விலை: ரூ.70). பிரபல கணக்காளரான ஆசிரியர், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சேவை வரி தொடர்பான அனைத்து தகவல்களையும் (வரி, விதிமுறைகள்) இந்த நூலில் விளக்கமாக, அதேசமயம் அனைவரும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் எளிமையாக எழுதியிருக்கிறார். வணிகர்களுக்கு சேவை வரி செலுத்துவோர்களுக்கு சிறந்த கையேடு.
சட்டம் சந்தித்த பெண்கள்
குமரன் பதிப்பகம்
சட்டம்
குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார் அருகில், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 120. விலை: ரூ.30). வழக்கறிஞரான இந்நூலாசிரியர், உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் 15 சிறு கதைகளாக வடிவமைத்து, பெண் பாலோருக்கு சட்டம் எவ்விதமாகத் துணைபுரிய இயலும் என விளக்கம் அளித்துள்ளார்.
கொத்தடிமை ஒழிப்பில் உச்சநீதிமன்றம்
சோக்கோ அறக்கட்டளை
சட்டம்
சோக்கோ அறக்கட்டளை, நீதிநாயகம் பகவதி பவன், 143, ஏரிக்கரை சாலை, கே.கே.நகர், மதுரை-625 020. (பக்.231. கடன் என்று சொல்லப்படுவது துடைத்தெறியப்படும் வரை ஒரு நபர், தனது உழைப்பை மற்றொருவருக்கு வருடக் கணக்காகத் தர வேண்டும் என்பதற்காக இந்த முறையின் கீழ் கொத்தடிமையாக்கப்படுவது, நாம் கட்டுவதாக உறுதியளித்துள்ள புதிய சமத்துவ சமூகப் பொருளாதார அமைப்புக்கு முற்றிலும் ஏற்புடையதல்ல; இந்தக் கொத்தடிமை முறையானது அடிப்படையான மனித கண்ணியத்திற்கு இழுக்கு என்பது மட்டுமல்ல, அரசியல் சட்ட மாண்புகளை முற்றிலும் மீறுவதாகும் மற்றும் அருவருப்பூட்டுவதுமாகும்' பந்துவா முக்தி மோர்ச்சா வழக்கில் நீதிபதி பி.என்.பகவதி தெரிவித்த கருத்து இது.ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமை, கட்டாயப்படுத்தப்பட்ட உழைப்பு, குறைந்தபட்ச ஊதியம், கொத்தடிமை ஒழிப்பில் சமூக செயல்பாட்டுக் குழுக்கள், கொத்தடிமைகள் மறுவாழ்வு, கொத்தடிமைவிடுவிப்பும் மறுவாழ்வும் இப்படியாக ஒன்பது தலைப்புகளில் பிரபலமான ஒன்பது முன்னோடி வழக்குகளையும், தீர்ப்புரைகளையும் தமிழில் புரியும் வகையில் மொழியாக்கம் செய்யப்பட்டு, முறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் அணிந்துரையும், தொகுப்பாசிரியரின் அணிந்துரையும் இந்நூலின் நோக்கத்தை இயம்புவதாய் உள்ளது. இத்தகைய முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை. சோக்கோ அறக்கட்டளையின் சட்ட விழிப்புணர்வுப் பணியும், சமூகப் பொறுப்புணர்வும் பாராட்டுக்குரியன
வருமான வரியைத் தெரிந்து கொள்வோம்
வசந்தா பதிப்பகம்
சட்டம்
வசந்தா பதிப்பகம், மனை எண்.9, கதவு எண்.26, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை-88. (பக்கம்: 136. அரசு எச்சரிக்கை விளம்பரங்கள் அவ்வப்போது விடுக்கப்பட்டபோதிலும், வருமான வரிக் கணக்கு வழக்குகளை முறைப்படி சமர்ப்பித்து வரி செலுத்துபவர்கள் அல்லது ஏய்ப்பவர்கள், கறுப்புப் பணத்தை உருட்டி, புரட்டிப் பெருக்குபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதையும், இத்தகைய "திடீர் கோடீஸ்வரர்'களின் வீடுகள், உடைமைகள் யாவும் வருமான வரித் துறையினரால் அதிரடி சோதனைகள் (ரெய்டுகள்) மேற் கொள்ளப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு வரும் அவல நிலைகளை எல்லாம் நாளேடுகள், தொலைக்காட்சிகள் வாயிலாக நாம் கண்டு வருகிறோம்.முறையான கணக்குகள், ஆவணங்களின் அடிப்படையில் பட்டயக் கணக்காளரின் (ஆடிட்டர்) ஆலோசனையின் பேரில் கணக்குகளைத் தாக்கல் செய்து வருமானத்திற்கு ஏற்ப வரியை ஆண்டுதோறும் தவறாது செலுத்துபவர்களுக்கு "மடியில் கனமிருந்தாலும் வழியில் பயமில்லை,'கேள்வி - பதில் மற்றும் கட்டுரைகளின் வடிவில், சான்றுகள், எடுத்துக்காட்டுகள் வாயிலாக, வருமான வரி குறித்த தகவல்களைத் தாங்கியுள்ள இந்நூல், சிறு தொழில் மற்றும் வியாபாரம், வணிகர் சமுதாயம் பயனுறும் விதமாக அமைந்துள்ளது.ஆயினும் முன்னாள், இந்நாள் நிதி அமைச்சர்களின் வரவு - செலவுத் திட்டங்கள் பற்றிய சர்ச்சை (பக்:61-65), வருமான வரி கட்டினால் வணிகம் வளரும் (பக்.93) மற்றும் ஆந்திர விவசாயிகள் தற்கொலை (பக்:115) இந்தக் கட்டுரைகளில் இடம் பெற்றுள்ள நூலாசிரியரின் சொந்தக் கருத்துக்கள் யாவும் அறவே நீக்கியிருக்க வேண்டும். மாறாக எந்த வரிக்கான படிவத்தை எவரெவர் பயன்படுத்த வேண்டும், எந்தெந்தத் தேதிக்குள் அதைப் பூர்த்தி செய்து எந்தெந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.மேல் முறையீடுகளுக்கான சாத்தியக்கூறுகள், தீர்ப்பாயங்களின் செயல்பாடுகள் போன்ற அதிமுக்கியமான தகவல்கள் இந்த முதல் தொகுப்பிலேயே இடம் பெற்றிருக்க வேண்டும்.ஆனாலும் வணிகப் பெருமக்களுக்கு வருமான வரிச் சட்டம் பற்றிய விழிப்புணர்ச்சியூட்டும் விதமாக, எளிய தமிழ் நடையில் அறிமுக நூல் ஒன்று வழங்கப்பட்டதற்கு பாராட்டுக்கள்
THE INDUSTRIAL DISPUTES ACT 1947 A COMPANION
வாலண்டினா பப்ளி-கேஷன்ஸ்
சட்டம்
வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், 21, லோகநாதன் நகர், இரண்டாவது தெரு, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 94) 1947ம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தில் வகை செய்யப்பட்ட ஏறத்தாழ 40 பிரிவுகளை சுமார் 200 கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் சுருக்கமாக நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.தொழில் - விளக்கம், தொழிலாளி, தகராறுகள், அதிகார அமைப்புகள், பணி நிபந்தனைகள், வேலைநிறுத்தம், கதவடைப்பு, லே ஆஃப், ஆட்குறைப்பு, மூடுதல், தண்டனைகள் போன்று பத்து அத்தியாயங்களாகப் பகிர்ந்து வினா - விடை முறையில் நூல் அமைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் சட்டம் - 1956ஐப் போன்று முழுமையாக அமையப் பெற்ற சட்டமல்ல தொழிற் தகராறுகள் சட்டம் 1947. எனினும், அடிப்படைச் சட்டத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. எந்த ஒரு சட்டப் பிரிவிற்கும், அதற்குரிய முக்கிய வழக்குகளை குறிப்பிடாததது பெருங்குறையே. வழக்குகள் எதையுமே கோடிட்டுக் காட்டாமல் தொழிற் தகராறுகள் சட்டத்தைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. தொழிலாளர்களுக்கோ, மாணவர்களுக்கோ அல்லது நிர்வாகத்தினருக்கோ உதவும் வகையில் முக்கிய வழக்கின் விவரங்களும், படிவங்களும் இணைக்கப்பட்டால் ஓரளவு உறுதுணையாய் இருக்கும். அடுத்த பதிப்பிலாவது நூலாசிரியர்கள் இக்குறையைக் களைய வேண்டும்
மொழிபெயர்ப்பியல் அணுகுமுறைகள்
அமுத நிலையம் லிமிடெட்
சட்டம்
அமுத நிலையம், 17, ஸ்ரீ புரம் 2வது தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 208)மொழி பெயர்ப்பு, ஆட்சிமன்றங்கள், சட்டத்துறை, நீதிமன்றத் தீர்ப்புகள் போன்ற பல் துறைகளில் சிறப்பாக அமைய வேண்டும். அதற்கான வழிமுறைகள் விரிவாகவும், விளக்கமாகவும் தரப்பட்டுள்ளன.தமிழில் ஆர்வமுள்ளவர்கள் குறிப்பாக வழக்குரைஞர்கள் இந்நூலைப் படித்துப் பயன் பெறலாம். ஆசிரியரின் கடும் முயற்சி பாராட்டத்தக்கது
சாலை பாதுகாப்பு விதிகளும் வழிமுறைகளும்
தமிழ் புத்தகாலயம்
சட்டம்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை : 25.00)
மனித உரிமைகள் ஓர் அறிமுகம்
மனித உரிமைக் கல்வி நிறுவனம்
சட்டம்
ஆசிரியர்-முனைவர் இ.தேவசகாயம், முனைவர் ச. மாடசாமி. வெளியீடு: மனித உரிமைக் கல்வி நிறுவனம், மக்கள் கண்காணிப்பகம், மதுரை-625 002.
Human Rights Education-Child Rights(Module 2)
மனித உரிமைக் கல்வி நிறுவனம்
சட்டம்
Author in Tamil- Dr.I.Devasahayam, Translation: Dr.Biswarup Ghatak, Dr.Ashok Kumar Ray, Mr.Sagar Chandra Sarkar, Mr.Dipankar Pal Chandhuri. Published by: Institute of Human Rights Education.
மனித உரிமைகள்
மக்கள் கண்காணிப்பகம்
சட்டம்
ஆசிரியர்- எஸ்.சாந்தகுமார், தமிழாக்கம்- என்.ராமகிருஷ்ணன், வெளியீடு: மக்கள் கண்காணிப்பகம்- தமிழ்நாடு, 6, வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை- 625 002.
குற்ற முத்திரை
மக்கள் கண்காணிப்பகம்
சட்டம்
ஆசிரியர்-திலீப் டிசௌசா, தமிழில்-ரவி, வெளியீடு: மக்கள் கண்காணிப்பகம், 6, வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை- 625 002.