This book is for Hindus who want to understand Hinduism, and also for non-Hindus who would like to know what Hinduism is all about and how this ancient religion has stood the test of time. Get a glimpse into Hinduism and understand its essence. Is Hinduism a religion or a way of life? Age-old beliefs and practices, the wonderful epics Ramayana and Mahabharata, myths and legends, the lives of saints who explained Hinduism to the world–all this and more can be found in these pages.
- ஆன்மிகம்
- Hinduism
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் ஆன்மிகம்
கனாக் கண்டேன் தோழி
விகடன் பிரசுரம்
ஆன்மிகம்
"மணி வெளுக்கச் சாணையுண்டு, எங்கள் முத்து மாரியம்மா... மனம் வெளுக்க வழியில்லை' எங்கள் முத்து மாரியம்மா... என்று மகாகவி பாரதியார் அன்று பாடினார். ஆனால், முக்கூர் ஸ்ரீலட்சுமி நரசிம்மாச் சாரியார் போன்ற மகான்களின் உபன்யாசங்கள் கேட்டால் கண்டிப் பாக மனமும் தூய்மையாகும்; நேரமும் பயனுள்ளதாகும். அவர் உபன்யாசங்களின் ஒரு பகுதியின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. திருமணமானது எட்டு விதமானது என்று விளக்குவதும் (பக்:16-17), ஸ்ரீ: என்று வைணவர்கள் போற்றும் மகாலட்சுமியின் பெருமையை விளக்குவதும் (பக்.22-28), ருக்மிணி பிராட்டியார் ஸ்ரீ கண்ணனைத் திருமணம் செய்து கொள்ள ஏழு ஸ்லோகங்கள் எழுதித் தூது விட்டு, அதை நிறைவேற்றிக் கொண்டதை விளக்குவதும் (பக்.84-96), ஒரு சாதாரணக் கல் தெய்வமாக மாறி உயர்ந்து நிற்பது எதனாலென்று கூறி, கல்லின் பெருமை கூறுவதும் (பக்.124), ஸ்ரீமுக்கூர் சுவாமிகளின் வாக்கு வன்மைக்கும் சான்றான பகுதிகள் ஆகும்.நூலின் கடைசி ஐந்து அத்தியாயங்களில் ஸ்ரீ ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் உள்ள "வாரணமாயிரம்' எனும் ஆறாம் திருமொழியை விளக்குமிடங்கள் (பக்.168-195) ஸ்ரீமுக்கூர் சுவாமிகளின் புலமையை நாம் நன்கு உணர உதவுகின்றன.அனைவரும் படித்து போற்ற வேண்டிய பயனுள்ள நூல்.
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
நர்மதா பதிப்பகம்
ஆன்மிகம்
திருமந்திரம், மூவாயிரம் பாடல்கள் கொண்ட ஆன்மிகச் சுரங்கம். வேத ஞானம், சிவாகம ரகசியங்கள், யோக நுட்பங்கள் போன்றவற்றை ஒன்பது தந்திரங்களில் விரித்துரைத்துள்ளார் திருமூலர். பல்லாண்டு காலம் தவமிருந்து ஞானியர் மட்டுமே உணர்ந்து உள்வாங்கக்கூடிய தத்துவ வித்தகங்களை - மெய்ப்பொருள் உண்மைகளை அருந்தமிழில் பாடி, சாமானிய மனிதனும் கடைத்தேறும்படி செய்யவே ஆயன் ஒருவனின் உடலில் குடிபுகுந்து அற்புதங்கள் நிகழ்த்தியவர் திருமூல சித்தர். அவருடைய பாடல்கள் அனைத்தையும் உரைநடை வடிவத்தில் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர். ஆன்மிக நூல்கள் ஏராளம் எழுதிய அனுபவங்கள் திருமந்திரத்தின் சாரம் அனைத்தையும் ஞானப்பிழிவாக வழங்கியுள்ளது சிறப்பாக உள்ளது. முக்கியமான பாடல்களின் முதல் வரியை அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது. ஒப்பிட்டு ஆய்வோருக்கு மிக உதவும் ஞான மேம்பாடு அடைய விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
இது தான் இந்து மதம்
மணிமேகலை பிரசுரம்
ஆன்மிகம்
உலகில் உள்ள பல சமயங்களில், இந்து மதம் மிகவும் தொன்மை வாய்ந்தது. அந்தந்த காலக் கட்டத்தில் உள்ள மக்களுக்கு, இந்து மதத்தின் பெருமையை அறியச் செய்ய இத்தகைய நூல்கள் வெளிவந்து, இந்து மதத்தின் பெருமையை உணர வைத்து வருகிறது. அந்த வகையில் இந்நூலில், 13 தலைப்புகளில் இந்து மத பெருமைகள் எடுத்துக் காட்டுப்பட்டுள்ளது. இதில் உள்ள கருத்துக்கள் ஒவ்வொரு மனிதரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய பொக்கிஷமாகும். அடுத்தவர்களுக்கு பரிசு வழங்கும்போது, அவை புத்தகங்களாக இருக்கட்டும்; அதிலும் இதுபோன்ற நூல்களாக இருந்தால் அனைவரும் பயன் பெறலாமே!
சிவரகசியம்
சங்கர் பதிப்பகம்
ஆன்மிகம்
சிவ ரகசியத்தை யார் சொல்ல முடியும்! சிவனாரே சொல்லும் பரம இதிகாசம் இதுவே. ஒப்பிலாமணி தேசிகரின் செய்யுட்பாக்கள் காலத்திற்கேற்ப எளிய வடிவமாக்கப்பட்டுள்ளது.சிவனுக்கு உரியன பூஜை, பொருட்கள், விரதங்கள், நாட்கள், திருவிளையாடல்கள் கொண்ட நூல்
ஸ்ரீமத் பகவத் கீதை
நர்மதா பதிப்பகம்
ஆன்மிகம்
ஞானம், கருமம்,பக்தி, வைராக்யம் சரணாகதி என்று பரம நிலை அடைய படிக்கட்டுகள் அமைத்துக் காட்டுவது பகவத் கீதை. வேத சாரம். இதன் விளக்கங்களை சங்கரர், இராமானுஜர், மத்வர் அத்வைத- விசிஷ்டாத்வைத- துவைத சித்தாத்தங்களின் வாயிலாக திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்.திரிவேணி சங்கமாக மூன்றையும் ஒன்றாக ஞான விருந்து படைத்திருக்கிறார் ஆசிரியர். தமிழ் மொழி வாயிலாக முப்பெரும் சித்தாந்திகளின் விளக்கத் தெளிவு வாசகர்கள் பெறும் பெரும் பேறு!முப்பெரும் இந்து மத சித்தாந்திகளின் முன்னுரையோடு நூல் துவங்குகிறது. பற்பல மொழிகளில் மொழியாக்கம் விளக்கம் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும், ஒவ்வொரு சுலோகத்தின் தமிழ் வடிவம் - பொருள், மூவரின் விளக்கம் என்ற அமைப்பில் 18 அத்தியாயங்களின் அனைத்து சுலோகங்களுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது.பாஷ்யம் செய்தவர்களின் வாதம், பிரதிவாதம் பதிலுரை என்று அந்தந்த இடங்களில் தரப்பட்டுள்ளது. `முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு' தெளிவு பெற இந்நூல் வழி வகுக்கிறது.சங்கர பாஷ்யத்தைத் தொடர்ந்து இராமனுஜர் விளக்கம் அளிக்கையில், கொள்ளத்தக்க தள்ளத்தக்க விஷயங்களை மணி மணியாகத் தொகுத்துள்ளார் ஆசிரியர்.மூன்று பாஷ்யத்தையும் படிக்கையில் சற்று மேகமூட்டமாக முதல் முறை படிக்கும்போது தோன்றலாம். ஒருவருடைய பாஷ்யத்தை ஒவ்வொரு சுலோகமாக படித்து பின்னர் சேர்ந்து படித்தால் மூவரின் பாஷ்ய அழுத்தத்தில் திளைக்கலாம். ஆத்ம ஞான, ஆத்ம தரிசன ஆரோக்கியமாக உணரலாம்.சுலோ 5-16ல் ஞானம் என்பதற்கு ஞானம், ஆத்ம ஞானம், பரோக்ஷ ஞானம் (பரஞானம்) என மூவரும் விளக்கி இருப்பதும், இதற்கு முன் பின் சுலோகங்களில் விளக்குவதும் மற்ற சுலோகங்களின் மேற்கோள் மற்ற புராணங்களின் முடிவுகளை பட்டியல் படுத்துவதும் தெவிட்டாத ஞான விருந்து.ஆசிரியரின் ஆன்ம லாப நல் முயற்சிக்கு ஆன்மிக பெருமக்கள் எத்தனை நன்றிகள் சொல்லினும் மிகையாகா! அருமையான தெய்வீக தொகுப்பு.
கடலங்குடியின் புதிய பார்வையில் ஸ்ரீமத் பகவத் கீதை
ஆன்மிகம்
உனக்கு, நீ தான் - நண்பன், உனக்கு, நீ தான் - பகைவன்! இதுவே ஸ்ரீ பகவத் கீதையின் அறைகூவல் ; அதன் வைரக் கருத்துக்களை, விளக்கும் கை விளக்கு இது! ஸ்ரீமத் பகவத் கீதையின் விளக்கமும் அதன் மகிமைகளும் இணைக்கப்பட்டுள்ளன
மகிமை வாய்ந்த திருக்கோயில்கள்
ஸ்ரீ அன்னை மீனாக்ஷீ பப்ளிகேஷன்
ஆன்மிகம்
திருநள்ளாறு, திருவக்கரை, சீர்காழி, திருமணஞ்சேரி, கடம்பூர், ஒப்பிலியப்பன், திருப்புன்னைநல்லூர், சங்கரன் கோயில், புனேஸ்வரம் ஆகிய திருத்தலங்கள் பற்றியவை.
கடலங்குடியின் மந்திரப்பிரச்னம் (சுபகாரிய மந்திரங்கள்)
ஆன்மிகம்
இந்நூலில் திருமண, உபநயன, ஸமாவர்த்தன, ஸனாதகபூஜா, ஸுமந்தோன்னயன பும்ஸுவன, ஜாதகர்ம, நாமகரண, கிருஹ நிர்மாண, கிருஹப்பிரவேச, ஸர்ப்பபலி, ஈசானபலி, மாஸிசிரார்த்த அஷ்டகாசிராத்த, மந்திர விஷயங்கள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. (தமிழுரையுடன் சுபகாரிய மந்திரங்கள் கூடியது.)
கடலங்குடியின் ஈசகேனோபநிஷத்
ஆன்மிகம்
(சங்கர பாஷ்யத்துடனும் தமிழுரையுடனும் கூடியது) ஈசாவாஸ்யதட என இந்த உபநிஷத்திற்கு பெயர் வரக்கூடிய காரணமும் அதன் பொருளும், உபநிஷத்தில் அடங்கியுள்ள 18 மந்திரங்களின் பொருள், ஸன்யாஸிகளுக்கு ஞான நிஷ்டையும் மற்றவர்களுக்கு கர்மம் உபாஸனம் இவற்றின் சேர்க்கையின் பலனும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. "கேனோபநிஷத்" என்ற பெயர் வரக் காரணமும், அதன் சிறப்பும்; குரு - சிஷ்ய பாவ விளக்கம், ப்ரம்ஹம் ப்ராணனுக்கு பிராணனாகுதலின் விளக்கம் போன்றவை 35 மந்திரங்கள், 4 கண்டங்களில் ஸ்ரீ சங்கரபாஷ்யகாரரின் பதபாஷ்யமும் தெளிவான தமிழ்மொழி பெயர்ப்பில் விளக்கப்பட்டுள்ளன.
கடலங்குடியின் காடகோபநிஷத் தமிழுரையுடன்
ஆன்மிகம்
(ஸ்ரீ சங்கரரின் வியாக்கியானத்தைத் தழுவியது) உபநிஷத், சப்தத்தின் விவரம், உபயோகம் வீட்டில் வரும் விருந்தாளியை உபசரிக்கும் முறை, விருந்தினரைப் பட்டினி போட்டு தான் மட்டும் உண்பதால் ஏற்படும் கெடுதல், நசிகேதஸுக்கு யமன் வரமளித்தல், பிதாவின் கவலையை நீக்குதல், சுவர்க்க லோகத்தில் சிறப்பு, அக்னிவித்தையைத் துதித்தல், சிரயேஸின் மகிமை, அவித்யை, வித்யை இவற்றின் விவரம், ஆத்ம ஞானம், குருவினால் மட்டுமே என்பதாம். ஆத்மாவை அறிந்தவன் சோகங்களை கடந்து பிரம்மத்தையடைகிறான். `ஓம்' பிரணவத்தின் விளக்கம் ஆத்மஸ்வரூபம் அறியவழி. ஹிரண்யகர்ப்பரைப் பற்றின முழு விளக்கங்கள்.
தைத்திரீயோபநீஷத் ஸ்ரீ சங்கர பாஷய்ம்
ஆன்மிகம்
இதில் சிக்ஷாவல்லி, ஆனந்தவல்லி, பிருகுவல்லி எனற மூன்று வல்லிகளுக்கு ஸ்ரீ சங்கர பாஷ்யத்தைத் தழுவிய அத்வைத ஸம்பிராதயத்தை அனுசரித்த அர்த்தமும், ஸ்ரீ சங்கர ராமானுஜ பாஷ்யத்தைத் தழுவிய விசிஷ்டாத்வைத ஸம்பிராதயத்தை அனுசரித்த அர்த்தமும், ஆங்காங்கு வித்யாரண்ய சுவாமிகளால் எழுதப்பட்ட விசேஷமான பொருளும் எளிய தமிழ் நடையில் எழுதப்பட்ட பதவுரை கருத்துக்களுடனும், தேவநாகரி மூலத்துடனும் வெளியிடப்பட்டுள்ளது
கடலங்குடியின் ஸ்ரீமத் பாகவதம்
ஆன்மிகம்
ஸ்ரீ தரீய வியாக்யானத்தையும், ஆங்காங்கு வம்சீதரீய வியாக்யானத்தையும் தழுவி மூல சுலோகத்திலுள்ள ஒரு பதத்தைக் கூட விடாமல் எளிய நடையில் தமிழில் உரை எழுதப்பட்டிருக்கிறது. " கல் நெஞ்சையும் கரைத்து ஷ்ரீ கிருஷ்ண பக்தியிலீடும்படிச் செய்யக் கூடியது ஸ்ரீமத் பாகவதம் " என்ற புகழிற்கேற்ப இம் மொழிபெயர்ப்பும் அமைந்துள்ளதாகச் சொல்வது மிகையாகாது. மேலும் மூலத்தில் பதிந்திருக்கும் ஆழ்ந்த கருத்துக்கள் ஆங்காங்கு குறிப்புரைகளாலும் பிறவற்றாலும் விளக்கப்பட்டிருக்கின்றன. இம் முறையில் அமைந்துள்ளது என்பதை நாம் அதிகம் சொல்லத் தேவையில்லை. மேலும் கேரளத்தில் குருவாயூரென்ற திவ்ய ஷேத்திரத்தில் வசித்து வந்த ஸ்ரீ நாராயண பட்டர் என்ற மஹா கவியால் ஹமத் பாகவதார்த்தத்தைச் சுருக்கி தொடர்ச்சியாக இயற்றப்பட்ட " நாராயணீயம் " என்ற பகவத்ஸ்துதியும் தமிழில் பதவுரையுடன் ஒவ்வொரு அத்யாயத்தின் முடிவிலும் சேர்க்கப்பட்டிருக்கிறது மற்றொரு சிறப்பு அம்சமாகும்
ப்ரம்ஹ ஸூத்ர சாங்கர பாஷ்யம்
ஆன்மிகம்
(தேவநாகரி எழுத்தில் மூலமும் தமிழுரையும்) இரும்புக் கடலையை வறுத்ததைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதோ கேளுங்கள். அதுதான் ப்ரம்ம சூத்திர சங்கர பாஷ்யத்தின் விரிவுரை.1931ஆம் ஆண்டு முதல் முதலில் முதற்பதிப்பாக வெளிவந்ததது. பலரின் பாராட்டுக்களையும் நன்மதிப்பையும் பெற்ற அருமையான இந்தக் கிரந்தம் மறு பதிப்பாக ஆன்மீக மக்களையும் ஆராய்ச்சியாளர்களையும் மகிழ்விக்கும் நிலையில் 64 ஆண்டுகளுக்குப்பின் 3 வால்யூம்களாக வெளிவந்துள்ளது.கடலங்கடி பெரியவரால் முதல் முதலில் எளிய நடையில் தேவநாகரி மூலத்துடனும், தமிழ் மொழி பெயர்ப்புடனும் வெளியிடப்பட்ட இந்த நூல் பலரின் வேண்டுகோளுக்கிணங்க மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு சூத்திரமும் தமிழ் மொழியில் அச்சிடப்பட்டிருக்கிறது. பாமதி, கல்பதரு, பரிமளம், ப்ரம்ஹவித்யாபரணம், ராமநந்தீயம், நியாயரக்ஷாமணி முதலிய வியாக்கியானங்களை யொட்டி ஆங்காங்கு குறிப்பெழுதி விளக்கப்பட்டுள்ளது. மேலும் அத்வைதஸித்தாந்தத்தை யொட்டி சூத்திரார்த்தங்களை தெளிவாய் விளக்கி ஒவ்வொரு அதிகரணத்திலும் வித்தியாரண்ணிய சுவாமிகளால் இயற்றப்பட்ட வையாஷக நியாயாமாலையை எழுதி அதற்கும் கருத்துரை எழுதியும் வெளியிட்டுள்ளார்.
திருமூலரின் திருமந்திரம் சொல்லும் விஞ்ஞான இரகசியங்கள்
அருண் பதிப்பகம்
ஆன்மிகம்
மூடப்பழக்கங்களை ஒழிக்க வேண்டும் என்று முழங்கிய சித்தர்களைப் பற்றிப் பல்வேறு மூடக்கதைகள் வழங்கி வருகின்றனவே என்று கவலைப்படுகிற நூலாசிரியர் கதைகளைத் தள்ளிவிட்டுச் சித்தர்கள் கண்ட விஞ்ஞானத்தை வெளிச்சமிட்டுக் காட்ட விரும்பியிருக்கிறார். ஏற்கனவே சித்தர்கள் கண்ட விஞ்ஞானமும், தத்துவமும் என்று சாமி சிதம்பரனார் பொது நிலையில் எழுதி இருப்பதால், தன்னுடைய தேட்டத்திற்கான களமாகச் சிறப்பாகத் திருமந்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் போலும்.பொறியாளரான ஆசிரியர் திருமூலரை உள்ளும் புறமுமாகப் புரட்டிப் பார்த்து பல்வேறு செய்திகளைப் பேசுகிறார். அவர் பேசுகிற செய்திகள் எல்லாம் ஏற்புடையவை என்பதில்லை. ஆனால், அவர் எழுப்புகிற கேள்விகள் ஏற்புடையவை. நம்பிக்கை சார்ந்து பேசாமல் அறிவு சார்ந்து பேசுகிற துணிவுக்காக ஆசிரியர் பாராட்டப்பட வேண்டியவர். பிழிவாக, திருமந்திரத்தை வைதிக நெறிக்கு மாற்றாகவும், தமிழ் நெறிக்கு நாற்றாகவும் முன்வைப்பது ஆசிரியரின் நோக்கம். அட்டைப் படம் தான் ஏதோ கொக்கோக சாத்திரத்துக்குப் போட்டது போல ஆகிவிட்டது.
யாக்ஞ வல்கியர்
அநுராகம்
ஆன்மிகம்
மகரிஷி யாக்ஞ வல்கியர் திருமாலின் அம்சமாக அவதரித்தவர். சூரிய பகவானிடம் இருந்து சுக்ல யஜுர் வேதத்தைப் பயின்று உலகுக்கு அளித்தவர். யோகீஸ்வரர் என்று அழைக்கப்படுபவர். இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பவர். இவரது வரலாறு முதல் பாகத்தில் சிறப்புடன் எழுதப்பட்டுள்ளது. தொகுதி இரண்டு மற்றும் மூன்றில் உரையாடல்கள், விவாதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. படித்துப் பயன் பெற வேண்டிய, பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் போன்றவை இந்நூல்கள்
யாக்ஞ வல்கியரின் விவாதங்கள்
அநுராகம்
ஆன்மிகம்
மகரிஷி யாக்ஞ வல்கியர் திருமாலின் அம்சமாக அவதரித்தவர். சூரிய பகவானிடம் இருந்து சுக்ல யஜுர் வேதத்தைப் பயின்று உலகுக்கு அளித்தவர். யோகீஸ்வரர் என்று அழைக்கப்படுபவர். இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பவர். இவரது வரலாறு முதல் பாகத்தில் சிறப்புடன் எழுதப்பட்டுள்ளது. தொகுதி இரண்டு மற்றும் மூன்றில் உரையாடல்கள், விவாதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. படித்துப் பயன் பெற வேண்டிய, பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் போன்றவை இந்நூல்கள்
யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்கள்
அநுராகம்
ஆன்மிகம்
மகரிஷி யாக்ஞ வல்கியர் திருமாலின் அம்சமாக அவதரித்தவர். சூரிய பகவானிடம் இருந்து சுக்ல யஜுர் வேதத்தைப் பயின்று உலகுக்கு அளித்தவர். யோகீஸ்வரர் என்று அழைக்கப்படுபவர். இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பவர். இவரது வரலாறு முதல் பாகத்தில் சிறப்புடன் எழுதப்பட்டுள்ளது.தொகுதி இரண்டு மற்றும் மூன்றில் உரையாடல்கள், விவாதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. படித்துப் பயன் பெற வேண்டிய, பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் போன்றவை இந்நூல்கள்.
யாக்ஞ வல்கிய ஸ்ருமிதி
அநுராகம்
ஆன்மிகம்
மகரிஷி யாக்ஞ வல்கியர் திருமாலின் அம்சமாக அவதரித்தவர். சூரிய பகவானிடம் இருந்து சுக்ல யஜுர் வேதத்தைப் பயின்று உலகுக்கு அளித்தவர். யோகீஸ்வரர் என்று அழைக்கப்படுபவர். இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பவர். இவரது வரலாறு முதல் பாகத்தில் சிறப்புடன் எழுதப்பட்டுள்ளது. தொகுதி இரண்டு மற்றும் மூன்றில் உரையாடல்கள், விவாதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. படித்துப் பயன் பெற வேண்டிய, பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் போன்றவை இந்நூல்கள்
சிவத்திருத்தலங்கள் -156
ராஜலட்சுமி பப்ளிகேஷன்ஸ்
ஆன்மிகம்
சிவத்திருத்தல வழிகாட்டி நூல்கள் வரிசையில் இந்நூல் பேரூராதீனம் மருதாசல அடிகள் வாழ்த்துரையுடன் மலர்ந்துள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள 156 திருத்தலங்களுக்கும் நேரில் சென்று வழிபட்டு தாம் பெற்ற இன்பம் இவ்வையக மக்கள் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இந்நூலை படைத்து அளித்துள்ளார் ஆசிரியர். அந்தந்த திருத்தலங்களின் கோபுர தரிசனத்தோடும் தேவாரப் பாடல்களுடனும் விளக்கமாகவும், விரிவாகவும் மலர்ந்துள்ளது. தரமான தாள்களில் மிக நேர்த்தியான அட்டையுடன் இருப்பது மேலும் சிறப்பு.மாணிக்கவாசக சுவாமிகள் அவதரித்த திருவாதவூரிலிருந்து திருக்காளத்தி வரை நம்மை 156 திருத்தலங்களுக்கு எந்த பயணக் களைப்பும் தெரியாமல் ஆசிரியர் அழைத்துச் செல்கிறார்.நாயன்மார்கள் அறுபத்துமூவர் குருபூஜை திருநட்சத்திரங்களும், தல யாத்திரை எந்த காலக்கட்டத்திலும் மேற்கொள்ளலாம் என்பதையும் கூறியிருப்பது தல யாத்திரை செல்பவர்களுக்கு பயன் தரும். அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல்
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணன்
ஆசிரியர்
ஆன்மிகம்
உரையாசிரியர்: பழவேரி சக்ரவர்த்தி ராகவஸிம்ஹாசார்யர். பக்கம்: 316+316+316+316+334=1598.(ஐந்து பாகங்கள்) பல சகஸ்ர நாம ஸ்தோத்திரங்கள் இருந்தாலும், அவற்றுள் விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெரியோர்கள் பெருமையாகக் கொண்டாடுவர். மகாபாரத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் உத்தராயணத்திற்காக காத்திருந்தபோது, ஸ்ரீ கிருஷ்ணர் முன்னிலையில், தருமருக்கு உபதேசித்த ஸ்தோத்திரமே, ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம்' ஆகும். திருமாலின் 1000 திருநாமங்களையும் இந்நூல் மிக விரிவாக எடுத்துரைக்கிறது.ஓம் பரமாத்மனேநம; என்ற 11வது நாமத்தை விளக்கும் ஆசிரியர்,கடவுள் என்ற சொல்லை `கட+வுள் என்று பிரித்து `எல்லாவற்றையும் கடந்தவர்' என்றும், எல்லாவற்றிற்கும் உள்ளே உள்ளவர் என்றும் பொருள் கூறுவது மிக அருமை (பக்.110).இந்நூல் முழுவதும் பல புதிய கருத்துக்களுடன் 1000 திருநாமங்களை நன்கு விளக்கியுள்ளார். சில நாமாவளிகளுக்கு ஆதி சங்கரரின் விளக்கமும், பராசர பட்டரின் விளக்கமும் கொடுத்துள்ளது நூலுக்குப் பெருமை சேர்க்கிறது.இந்நூல் எங்கு கிடைக்கும் என்ற விவரம் ஐந்து தொகுதிகளிலும் இல்லை. ஆத்திக அன்பர்கள் அனைவரும் படித்துப் பயன் அடைய வேண்டிய அருமையான நூல்.