/ வரலாறு / வீரர் உலகம்

₹ 120

எல்லையில் போர் என்று துவங்கி, வீர வழிபாடு வரை, 17 தலைப்புகளில் அமைந்துள்ள நுால். வீரம், மதில் காவல் போர், ஞானமும் தவமும், அரசன் புகழ், ஆற்றுப்படை, வீர வழிபாடு போன்ற தலைப்புகள், போர் முறைகளையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் விரிவாகப் பேசுகின்றன.மக்கள் வீரத்தையும், மானத்தையும் பெரிதெனப் போற்றினர். ஒரு நாட்டில் படை எடுப்பதற்கு முன், அங்குள்ள பசுக்களைக் கவர்ந்து வருவர். இதற்கு, வெட்சித் திணை என்று பெயர். இதற்கு அடையாளமாக, வெட்சிப் பூவைச் சூடுவர். கவர்ந்து சென்ற பசுக்களை மீட்பதற்கு அடையாளமாக, கரந்தைப் பூவைச் சூடி போர் புரிவர். இவை போன்று, ஏழு திணைகளுக்கும் பூவும், போர் நெறி முறைகளும் வகுத்துப் போர் புரிவர். இவற்றுள் வீரர் திறம், மன்னன் பாராட்டு, வீர மரணம் அடைந்தால் அவர்களுக்கு நடுகல் நடுதல் போன்ற வரலாற்று நிகழ்ச்சிகளை, இந்த நுால் பதிவு செய்துள்ளது.– புலவர் இரா.நாராயணன்


புதிய வீடியோ