/ சுய முன்னேற்றம் / வளமான எண்ணங்களில் மலரும் அற்புதங்கள்

₹ 110

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.நிறையப் பேருடைய வாழ்க்கை, முழு வெற்றிகளையோ அல்லது முழு தோல்விகளையோ கொண்டதாக இல்லை. முழுமையான இல்லாமைக்கும் நிறைவான செல்வத்திற்கும் நடுவே ஏதோ ஒரு சமநிலையில்தான் அவர்கள் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அரைகுறையானவர்கள். வாழ்க்கையில் பாதி நாட்களில் மிகுந்த படைப்பாற்றலுடன் செயலாற்றுகிறார்கள். மீதிப் பாதி நேரம் எதிர்மறை உணர்வுகளால் பீடிக்கப்படகிறார்கள். அதனால் முழு வெற்றியை உருவாக்க முடிவதில்லை. ஒரு தனி ஊசலைப் போன்ற அவர்கள் வாழ்க்கை, இங்கும் அங்கம் அலை பாய்ந்து கொண்டிருக்கும். படைப்பாற்றல் மிகும்பொழுது வெற்றியைப் படைக்கிறார்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும், உற்சாகமும் கரைபுரண்டு ஓடம் சமயங்கள் அவை. படைப்பாற்றல் மிக்க தருணங்கள் வரத்தான் போகின்றன. வாழ்க்கையில் நிறைவுகள் வரத்தான் போகின்றன. வாழ்க்கையில் நிறைவுகள் வரத்தான் போகின்றன. நீங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கத்தான் போகிறீர்கள், வளமான எண்ணங்களில்...


புதிய வீடியோ