/ தமிழ்மொழி / உனக்குள் ஓர் உந்துசக்தி

₹ 160

மனித மனங்கள் திருக்குறள் சார்ந்து இயங்குவதன் வாயிலாக, வாழ்க்கையில் உயர்வு நிலையை அடைய முடியும் என்பதை ஆய்ந்துள்ள நுால். ஒவ்வொரு பிரிவும் ஓர் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.உந்துசக்தி பெற்ற மனம் ஒன்றே இவ்வுலகில் மாபெரும் ஆற்றலாகும். தற்காலிகத் தோல்விகளால் அல்லது சரிவுகளால் மனம் தளராது, தெளிவான இலக்கை அடைய விடாமுயற்சியுடன் செயல்பட, குறள் வழி நின்று விளக்குகிறது.கால உணர்வை உயிர்மூச்சாகக் கொண்டு தம்மை ஓர் ஒழுங்குக்கு முறைப்படுத்திக் கொண்டு செயல்படுபவருக்கு, ஆற்ற முடியாத அரிய செயல் எதுவுமே இல்லை என்று பொருள்பட கால மேலாண்மையின் அவசியத்தை உணர்த்துகிறது.திருக்குறள் எச்சரிக்கும் உணர்வுகளை உள்ளத்தால், உணர்வால், உடலால், எண்ணங்களால் மேம்பட்டு இருப்பவர்கள் வல்லாண்மையை இயல்பாய் பெறுவர் என்பன போன்ற அறக்கருத்துக்களை கொண்டுள்ள நுால்.– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்