/ தமிழ்மொழி / திருக்குறள் திரைக்கதைகள்

₹ 100

திருக்குறள் கருத்துகளை, திரைக் கதை போல் எளிய நடையில் எடுத்துரைக்கும் நுால். நடிகரின் அறுவை சிகிச்சைக்காக ரசிகர்களின் வேண்டுதல்கள், மருத்துவரின் சிகிச்சை இதில் எது வென்றது என, ‘அந்த நாள்’ கதை சிந்திக்க வைக்கிறது. கடவுளை நினைப்பவரும் வாழ்கிறார், வெறுக்கிறவரும் வாழ்கிறார் ஏன் இப்படி என்ற கேள்விக்கு, ‘வண்டிச்சக்கரம்’ கதை விடை சொல்கிறது. வள்ளுவரின் ஒவ்வொரு வரியும், மனிதனை செம்மைப்படுத்தி, தவறை சுட்டிக் காட்டும் நெறி கலந்தது என கதைகள் எடுத்துரைக்கின்றன. நேர்மை வழியாகத் தான் இறைவனை போற்ற முடியும் என்கிறது. அறியாமையில் குற்றம் புரிபவர், அதை தவறு என உணர்ந்தால், இறை அருள் கிடைக்கும் என்கிறது. அன்பு, அறத்தை எடுத்துரைக்கும் நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை