/ உளவியல் / ஒரு பித்தனின் குறிப்புகள்

₹ 100

ஓஷோவின் உரையாடல்கள் அடங்கிய தொகுப்பு நுால். மன நிலையில் நிலவும் மாறுபாடுகளை குறிப்பிட்டு உணர்த்துகிறது.தன்னை அறிந்து கொள்ள தத்துவ ரீதியாக விளக்கம் சொல்கிறது. அதையே விழிப்புணர்வு என குறிப்பிடுகிறது. ஞானமடைதல், அறிதல் என்பதற்கு விளக்கம் சொல்கிறது. மவுனமாக இருந்தால் பலவற்றை சாதிக்கலாம் என்கிறது. மரணத்துக்கு புது விளக்கம் தருகிறது. வாழ்தலின் உண்மை அர்த்தத்தை விளக்குகிறது. மனம் எப்போதும் ஏமாற்றும் என விவரிக்கிறது. வாழ்க்கை தத்துவத்தை அறிந்து கொள்ள உதவும் நுால்.– புலவர் ரா.நாராயணன்