/ கவிதைகள் / ஓ... அந்த இனிய நாட்கள்!

₹ 120

ஐந்து பொருண்மைகளில் இடம் பெற்றுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். ‘கந்தகக் கவிகளால் காட்டுமிராண்டி பெண்ணடிமைத் தனத்தை சுட்டுப் பொசுக்கியவன்’ எனப் பாரதியை குறிப்பிடுகிறது. சமுதாயப் பணிகளும் இலக்கியப் பணிகளும் கவிதை வரிகளால் நிரல்படுத்தப்பட்டுள்ளன. தீண்டாமை கொடுமைகளையும், ஆணவ கொலைகளையும் ஆவேச வரிகளால் கண்டிக்கிறது. ஜாதி கொடுமைக்கு சம்பட்டி அடி கொடுக்கிறது. உயர் தனிச் செம்மொழி தமிழை அழகு நடையால் ஆராதிக்கிறது. ‘இன்பத்தை வாரி இறைத்த நதிகளோ இன்று கணவனை இழந்த கைம்பெண் போல’ என ஆற்று மணலை கொள்ளை அடிக்கும் இயற்கை பேரழிவும் சுட்டப்பட்டுள்ளது. சமூக கறைகளைத் துடைக்கும் விழிப்புணர்வு கவிதைகள் நிரம்பிய நுால்.– புலவர் சு.மதியழகன்


சமீபத்திய செய்தி