/ கவிதைகள் / கங்குகள்
கங்குகள்
மரபுக் கவிதைகளை உள்ளடக்கிய நுால். தமிழுணர்வு, ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு, ஆங்கில மோக எதிர்ப்பு, தமிழ் மொழியில் பெயர் சூட்டல் போன்ற மொழிப்பற்று பாடல்களோடு சமூக இழிவுகளை எடுத்துக்காட்டும் பாடல்களும் மிகுதியாக உள்ளன. கைம்பெண் மறுமணம், ஜாதி எதிர்ப்பு, மதுவால் வரும் கேடு, மாறி வரும் நாகரிகம், பெற்றோரைப் பேணுவது, திருமணத்தின் சிறப்பு, குடும்ப உறவுகள், தானம் செய்தல், புத்தகங்களால் நன்மை, கூலிகளின் வருத்தங்கள், கண்ணகி, மாதவியின் பெருமை, தீண்டாமை, சமத்துவம், உழவர் நலத்தை வலியுறுத்துகின்றன. சாமியார்கள், சகிப்புத்தன்மை, செல்லாக்காசு, உணவே மருந்து, மண்வாசம் போன்ற பொது தலைப்பிலான கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு