/ இலக்கியம் / தவறின்றித் தமிழ் எழுத...:

₹ 80

ஐந்திணைப் பதிப்பகம், 279, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்: 192.)தமிழ் மொழியை எப்படியும் எழுதலாம். பிறமொழிச் சொற்களைக் கலப்படம் செய்து தனித்தன்மையைச் சீர்குலைக்கலாம் என்னும் விதி மீறல் போக்கு வெகுவாக வேரூன்றி வரும் இந்நாளில், `தவறின்றித் தமிழ் எழுத' வேண்டும் என்ற அக்கறையோடு, `செவிக்குள் நுழையாத செக்குலக்கை' இலக்கணத்தின் விதிகளை எளிமைப்படுத்தி அளவுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.ழகர தகரம் டகரம் ஆகுமா? (27) என்பதை கச்சியப்பர் கந்த புராணம் இயற்றியபோது `வீரசோழியம்' இலக்கண நூல் உதவிய கதையையும் எடுத்தாண்டு இலக்கண நூலை அறிமுகப்படுத்தும் உத்தியும் சிறப்பாக உள்ளது. திரைத் துறையும் பிற ஊடகங்களும் தொடர்ந்து செய்து வரும் தமிழ் மொழிச் சீர்கேட்டை ஏராளமான எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கியுள்ள ஆசிரியரின் இந்நூலில் எளிய முறையில் இலக்கணப் பாடங்கள் படிப்படியாக, படிக்கும் படியாக விவரிக்கப்பட்டுள்ளன.அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும், தமிழார்வலர்களுக்கும் பயன்படக்கூடிய அடிப்படை இலக்கண நூல். ஆசிரியரின் முயற்சி போற்றத்தக்கது.