/ பொது / மும்பை மாநகரத் தமிழர்களின் வரலாறு

₹ 500

அனித பதிப்பகம், லியோடேபிள் கட்டடம், இருவம்பாளையம், திருப்பூர் - 641 687. (பக்கம்: 1016).மும்பை சென்று பிழைப்பு நடத்தி, வணிகம் செய்து, பதவிகளில் அமர்ந்து வாழ்ந்து வரும் நூற்றுக்கு மேற்பட் டோர்களைப் பற்றிய விவரங்களடங்கிய புத்தகம்.இத்துடன் அங்கு உள்ள கலாசார, ஆன்மிக, தொண்டு மையங்களைப் பற்றிய அனேக விஷயங்கள். மேலும், மும்பை வந்து சில அமைப்புகளில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பற்றிய தகவல்கள். இடையிடையே நிறைய சினிமா கவிதை வகைகள், பாரதி, பாரதிதாசன் கவிதை வரிகள். எங்கு எங்கு பொருந்துமோ, அவ்வாறு இடைச்செருகலுடன் சேர்க்கப்பட்டுள்ள இந்த மிகப் பெரிய தடிமனான புத்தகத்தில் ஏராளமான வண்ணப்படங்கள். நூலைத் தொகுத்து தயாரித்துள்ள ஆசிரியரின் உழைப்பு நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. ஏற்றுக் கொண்ட பணியினை பொறுப்புடன் சிறப்பாகச் செய்திருக்கிறார். வரவேற்கத்தக்க பெரிய முயற்சி.


சமீபத்திய செய்தி