மனித குரங்கின் முன்னிரண்டு கால்களை நடப்பதிலிருந்து விடுவித்து கைகளாக்கிய நாளில் இருந்து தான், இந்த பூமிக்கு எண்ணற்ற நன்மை, தீமைகள் நடக்கத் துவங்கிவிட்டன. லட்சக்கணக்கான ஆண்டுகளாக எத்தனையோ உயிரினங்களை வளர்த்து, பொதுவுடைமையைப் பார்த்துப் பழகிய பூமிக்கு, தான் உருவாக்கும் மனித இனம் தன்னையே கூறுபோட்டு ஆட்டிப்படைக்கும் என்று நினைக்கவே இல்லை போலும். மனித இனம் உருவாவதற்கு முன்னால், ஐந்து மகா பேரழிவுகளைச் சந்தித்த பூமி முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. இப்போது, ஆறாவதாக ஆறாம் அறிவால் வரவிருக்கும் பேரழிவை எதிர்கொண்டு அதிர்ந்து நிற்கிறது. அதனால், பூமி அழிந்துவிடாது என்றாலும் அந்த மகா பேரழிவுக்குப்பின் பூமி தன்னை எவ்வளவு காலத்தில் மீட்டுருவாக்கம் செய்துகொள்ளும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. தன் சுயநலத்திற்காக பிற உயிர்களையும், சக மனிதர்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அழித்து பூமியின் மீதே போர் தொடுக்கும் மனிதன், இவற்றின் ஒட்டுமொத்த விளைவையும் கதிரருக்கும் காலம் மவுனமாக நெருங்கி வருகிறது. சுற்றுச்சூழல் இன்று பல துளைகள் விழுந்த கப்பல் போல் ஆகிவிட்டது. எந்தத் துளையை அடைப்பது? பூமி தன் விருப்பத்திற்கு மாறாக மனிதனால் எவ்வாறு அழிவை நோக்கிச் செல்கிறது என்பதை பல்வேறு ஆய்வுகளிலிருந்து தொகுத்து எளிய நடையில் முன்வைக்கிறார் நூலாசிரியர் நவீனா அலெக்சாண்டர். முதன்முதலாக இரண்டு காலில் நடந்த பாலுாட்டிகளில் ஒன்றான குரங்கின் இரண்டு கால்களை கைகளாக்கியதால் உடலமைப்பு மற்றும் மூளை வளர்ச்சியில் அளப்பரிய மாற்றங்கள் உருவாகி, பூமியின் தட்பவெப்பத்துக்கு ஏற்ப அவை தம்மைத் தகவமைத்துக்கொண்டன. (ஹோமோ) நியாண்டர்தால் என்ற இனமே இன்றைய முழுமையான மனிதர்களாக உருவெடுத்த செப்பியன்கள். செப்பியன்களின் பெருக்கத்தால் பூமிக்கு ஏற்பட்டுள்ள சமீபகால நெருக்கடிகள் வரை விளம்புகிறது இந்நூல்.நெருப்பு அவர்கள் வாழ்க்கையை சுலபமாக்கியது. உண்ணுதலும் செரிமானமும் விரைவானதில் முழுச் சக்தி மூளைக்குச் சென்றது. உலோகத் தேடல்களும் உபயோகங்களும் தொடர்ந்தன. மொழி உருவானது. பின், பருவ காலத்திற்கேற்ற இடப்பெயர்வுகள், தூரதேசப் பயணங்கள், கண்டெடுப்புகள், கண்டுபிடிப்புகள், கொடுக்கல், வாங்கல் என்று மனிதனின் பயணம் தொடர்ந்தது.மனிதன் உணவுத் தேடல் என்பதைக் கைவிட்டு உணவு உற்பத்தி என்பதை ஆரம்பித்த விவசாயம்தான் பெரும் பேரரசுகளையும், நாகரிகங்களையும் முதலில் உருவாக்கியது. மூன்றாம் புரட்சியான தொழிற்புரட்சி, 17ம் நூற்றாண்டு வாக்கில் எழுச்சி கண்டது. சந்தை வளர்ந்தது. அடிமைத்தனம் வளர்ந்து சுரண்டல் மேடையேறியது. காலத்துக்கு கதிர்வீச்சுகளும் புவி வெப்பமாதலும் பூமிக்குள் புதைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், இ - கழிவுகள் மற்றும் கதிர்வீச்சுக் கழிவுகளும் சாமானியனின் அறிவுக்கெட்டாத அபாயங்களாயின. வளர்ச்சிப்பாதை என்று கூறிக்கொண்டு கடந்த, 200 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பிலிருந்து பூமி விடுபடவே பல லட்சம் ஆண்டுகள் தேவைப்படலாம் என்று கணிக்கப்படுகிறது. நூல் குறிப்பு விபரங்களை அந்தந்த அத்தியாயத்தின் அடியில் கொடுத்திருந்தால், வாசகர்கள் முன்னோக்கிச் சென்று விரிந்த அளவில் படிப்பதற்கு உதவி இருக்கும். நூலாசிரியரைப் பற்றிய சூழலியல் பின்புலம் மற்றும் சுய குறிப்பு, பதிப்புரை எதுவும் இல்லாத நிலையில் பிற நூல்களின் தகவல் திரட்டாகவே தெரிகிறது இந்நூல். – மெய்ஞானி பிரபாகரபாபு
- அறிவியல்
- உருகும் பூமி உறையும் உயிர்கள்
உருகும் பூமி உறையும் உயிர்கள்
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் அறிவியல்
விண்வெளியின் கதை
கே.என். சரஸ்வதி, பப்ளிகேஷன்ஸ்
அறிவியல்
ஆசிரியர் : மெ.மெய்யப்பன், வெளியீடு : தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை : 10.50)
அறிவியல் என்றால் என்ன?
சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
அறிவியல்
வானவியல், பூமியைப் பற்றிய அறிவியல்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சமூக அறிவியல்கள், இன்றைய அறிவியல், 10 பிரிவுகளில் பயனுள்ள முறையில் எழுதப்பட்டுள்ளன. மாணவர்கள் படித்து பயன் பெறலாம்.
கணினி ஓர் அறிமுகம்
தமிழ் புத்தகாலயம்
அறிவியல்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17
ஐ.டி தகவல் தொழில் நுட்பம்
தமிழ் புத்தகாலயம்
அறிவியல்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
உலகத்தை வளமாக்கும் உலோகங்கள்
தமிழ் புத்தகாலயம்
அறிவியல்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17 .
மைக்ரோசாப்ட் விண்டோஸ்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
டிரீம் வீவர்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
வேர்டு2002 ஆபிஸ்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
வேர்டு 2000 டிப்ஸ் 2002
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
மைக்ரோசாப்ட் பிரண்ட்பேஜ் 2000
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
கணிப்பொறியின் அடிப்படை
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
கோரல்டிரா 9
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
விஷூவல் பாக்ஸ்புரோ
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை தியாகராய நகர் சென்னை -600 017 .
இண்டர்நெட்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
10 நாட்களில் ஹெச்டிஎம்எல் மற்றும் டிஹெச்டிஎம்எல்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
எளிய தமிழில் எம்எஸ்டாஸ்6.0 ,6.2
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
பாக்ஸ்புரோ
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 5
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
அவுட் லுக் எக்ஸ்பிரஸ்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
எம் எஸ் வேர்ட் 2000
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .