/ ஆன்மிகம் / வாழ்வியல் ஆன்மீகம்

₹ 280

வாழ்வியல் ஆன்மிகம் பற்றி விளக்கம் தரும் நுால். மனதில் தீய எண்ணம் இன்றி, அடுத்தவருக்கு நல்லது செய்ய சொல்கிறது. மனசாட்சிக்கு பயந்து வாழ்வதை வலியுறுத்துகிறது. இறைவனிடம் சரண் அடைவதே ஒரு வகை ஆன்மிகம் என்கிறது. அது காலத்திற்கு ஏற்றவாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிடுகிறது. அகத்துாய்மை, வாய்மை, தியானம், நல்லதை நினைத்தல், நன்றே செய் இன்றே செய், மாயை, மனச்சோர்வு பற்றி விளக்கும் கட்டுரைகள் உள்ளன. சில பொருண்மைகள் கதை வழியாக விளக்கப் பட்டுள்ளன. முடிவில் வாழ்வின் சாரத்தை கூறுகிறது. கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால், அனைத்துமே கடவுளாக இருக்கிறது என்பதை அறிவதே ஆன்மிகம் என்கிறது. அது, மனத்துாய்மை முயற்சியிலும் உள்ளதாக குறிப்பிடும் நுால். – புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை