/ ஆன்மிகம் / வாழ்வை வளமாக்கும் திருக்கோவில் வழிபாடு
வாழ்வை வளமாக்கும் திருக்கோவில் வழிபாடு
முக்கியத்துவம் வாய்ந்த கோவில் பற்றி தெரிய வேண்டிய விஷயங்கள் என்னென்ன? கோபுரம், கோபுர வகைகள், விமானம், கருவறை, ஆகமம், மூர்த்தி, தலம், தீர்த்தம், கொடி மரம், பலி பீடம், நந்தி போன்ற தகவல்களை விளக்கமாக தெரிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பை தரும் நுால்.பிரதோஷ பலன்கள், நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள், கடவுள் அருளை பெற வழிபாட்டு முறைகள், கடவுளை வழிபடும் போது செய்யப்படும் அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், வாகனம், நைவேத்தியம் பற்றி அறிய உதவும். ஆன்மிக அன்பர்களுக்கு பொக்கிஷமாக விளங்கும் நுால்.– இளங்கோவன்