/ கதைகள் / சிந்தனைச் சிறுகதைகள்
சிந்தனைச் சிறுகதைகள்
உழைப்பின் பெருமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பண்பாட்டை அறிவுறுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். போக்குவரத்தை சீர் செய்யும் ஆட்டோ ஓட்டுநர், பால்ய நினைவுகளை சுமந்து நிற்கும் கிராமம், நெகிழிக்கு நிரந்தர தடை, மாமியார் மெச்சும் மருமகள், கல்வியின் பெருமை என பலவித கலவையாக கதைகள் தரப்பட்டுள்ளன. குடும்ப நிலையறிந்து செயல்படுவது குறித்து கூறப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை என்ற ஊன்றுகோல், பெற்றோரின் கனவுகளை குழந்தைகளிடம் திணிக்காமை, நாட்டுப்பற்று, அறம் செய்ய பழகு, உழைப்பின் உன்னதம் போன்ற மையக் கருத்துகளும் உள்ளன. ஆடி தள்ளுபடியால் அல்லாடும் பரிதாபத்துக்குரியோரை கதாபாத்திரமாக்கி எளிய நடையில் படைக்கப்பட்டு உள்ளன. நற்சிந்தனைகளை விதைக்கும் நுால். – புலவர் சு.மதியழகன்




