/ கட்டுரைகள் / இலங்கையில் தமிழர்கள் மீதான ஆயுதப்படையினரின் பாலியல் வன்முறை
இலங்கையில் தமிழர்கள் மீதான ஆயுதப்படையினரின் பாலியல் வன்முறை
இலங்கை உள்நாட்டுப் போரில், தமிழ் பெண்கள் மீது நடந்தப்பட்ட வன்முறையை விரிவாக பதிவு செய்துள்ள நுால். பாலியல் அத்துமீறல்களை கூர்மையான பார்வையுடன் அலசுகிறது. புத்தகம், 34 இயல்களாக பகுத்து எழுதப்பட்டுள்ளது. தேவையான பிற்சேர்க்கை தரப்பட்டுள்ளது. இலங்கையை பொதுவாக அறிமுகம் செய்வதுடன் துவங்கி, உள் நாட்டில் நடந்த போர் வன்முறையை விவரிக்கிறது. போரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து எழுதப்பட்டுள்ளது. அந்த செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டியோரை சுட்டிக்காட்டுகிறது. இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல்களை பதிவு செய்யும் நுால்.– ராம்