/ பயண கட்டுரை / சேது காப்பியம் 11

₹ 700

கடல் கடந்து பல நாடுகளுக்கும் சென்று கன்னித் தமிழ்த் தொண்டும், கவிதைத் தொண்டும் செய்துள்ளார். நுாலில் ஆசிரியரின் சுயசரிதை உள்ளது. இந்த காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன், அருள்மொழி என்னும் பாத்திரத்தில் வலம் வருகிறார். அவரது பயணங்கள், பயணங்களில் நிகழ்ந்த இன்ப, துன்பங்கள் தெரிகின்றன. அயல் நாட்டின் அழகை எடுத்து இயம்புகிறார். ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்கள் போன்ற பல்வேறு கண்டங்களையும், நகர்களையும் கவித்திறனால் படம் பிடித்துக் காட்டுகிறார். தமிழின் சிறப்பை கவிதையில் போற்றுகிறார். முதல் கவிதையாகப் பதிப்பு பாயிரம் துவங்கி, 62 தலைப்புகளில் நிறைவான கவிதைகளைக் கொண்டு நிறைவு அடைகிறது. உலகம் என்று துவங்கி, உலக அமைதி என்று முடித்திருப்பது சிறப்பு. அயல்நாட்டில் நிலவும் வாழ்க்கைச் சூழலை அறிய முடிகிறது. மரபுக் கவிதை எழுத இந்த நுால் பெரிதும் உதவும்.– பேராசிரியர் இரா.நாராயணன்


முக்கிய வீடியோ