/ வாழ்க்கை வரலாறு / செம்மாப்புத் தமிழர் சிதம்பரச் செம்மல்

₹ 300

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்று தொகுப்பு நுால். தமிழ், ஆங்கிலத்தில் புலமையுடைய வ.உ.சி., குறளுக்கு உரை எழுதியவர், நுாற்பாலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்கு போராடியவர் என்பது கூடுதல் தகவல்கள்.ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்ததால், அனுபவித்த கொடுமைகள் மனதில் கனம் ஏற்படுத்துகின்றன. இரட்டை ஆயுள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், நன்னடத்தையால் விடுதலை பெற்றது குறித்து கூறப்பட்டுள்ளது. அவர் நடத்திய தொழிலாளர்கிளர்ச்சி, சுதேசி செயல்பாடு, தமிழ் தொண்டை அறிய தருகிறது. வ.உ.சி., பெருமைகளை உள்ளடக்கிய தகவல் பெட்டகம்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


சமீபத்திய செய்தி