/ ஆன்மிகம் / நம் வாழ்விற்கு தேவையான சாஸ்திரமும் சம்பிரதாயமும்
நம் வாழ்விற்கு தேவையான சாஸ்திரமும் சம்பிரதாயமும்
சாஸ்திரம், சம்பிரதாய சடங்குகள் பற்றிய நுால். இலக்கிய, சரித்திர நிகழ்வுகளை முன்வைத்து கருத்துகள் கூறப்பட்டுள்ளன. குறிஞ்சி நிலத்தில் ‘களவு’ என்ற திருமண முறையில் இருந்தோர், முல்லை நிலத்திற்கு இடம் பெயர்ந்ததும், ‘கற்பு’ நெறியில் திருமணம் கண்டதாக குறிப்பிடுகிறது. இதை ஸ்வேதகேது கதையால் விளக்குகிறது. கடிமணம், பிரசாபத்தியம், பரிசம், கந்தருவம், உடன்போக்கு, பைசாசம், பலதார திருமணம் பற்றி விளக்குகிறது. திருமணம் என்பது சந்ததி உருவாக்க முன்னோர் கண்ட வழியென்கிறது. இதில் ஜாதக பங்கு, திருமண தடைகளும் நிவாரணமும், மணப் பொருத்தம், நிச்சயதாம்பூலம், கூறைப்புடவை பற்றியும் கூறப்பட்டுள்ளது. சம்பிரதாயங்கள் குறித்த நுால். – முனைவர் கலியன் சம்பத்து




