/ ஆன்மிகம் / சர்வம் சக்திமயம்
சர்வம் சக்திமயம்
பசித்த வயிற்றுக்குச் சோறு தான் தெய்வம், வலிக்கின்ற மனசுக்குத் தீர்வு தான் தெய்வம். சக மனிதர்களிடம் பகிரவும் பகரவும் இயலாததைச் சொல்வதற்கே இறைத் தலங்களை நோக்கிப் பயணிக்கிறோம். அத்தகைய 40 சக்தி இறைத்தலங்கள் குறித்து அனுபவ பூர்வமாக உணர்ந்து எழுதப்பட்டுள்ள நுால். அந்த புனித தலங்களுக்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்வது போல் எழுதப்பட்டுள்ளது என்றே கூறலாம். அந்த அளவுக்கு உணர்வு பூர்வமான எழுத்துக்கள் இதில் உள்ளன. ‘என் கூட இரு நீ எப்போதும், அது போதும், எனக்கு நீ வழி தடத்து, தாய்மடியின் சுகானுபவம்’ என்று அம்மையை எண்ணி உருக வைக்கிறது. இந்த நுால் ஆன்மிகவாதிகளுக்கு ஓர் அற்புதமான பொக்கிஷம் என்றால் மிகையாகாது.– இளங்கோவன்