/ சுய முன்னேற்றம் / நூல்களைப் படித்து உயர்ந்த 60 ஆளுமைகள்!
நூல்களைப் படித்து உயர்ந்த 60 ஆளுமைகள்!
புத்தக வாசிப்பால் வாழ்வில் உயரலாம் என எடுத்து சொல்லும் நுால். வாசிப்பால் உயர்ந்த உலக பிரபலங்களை அடையாளம் காட்டுகிறது. தென் அமெரிக்க நாடான பிரேசில் சிறையில் கைதிகள் ஒரு புத்தகம் படித்தால், தண்டனைக் காலத்தில் நான்கு நாள் குறையும் என்ற விதி, வாசிப்பின் உயர்வைக் காட்டுகிறது. முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாவீரன் நெப்போலியன், விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் என படிப்பால் உயர்ந்த ஆளுமைகளை கண்முன் நிறுத்துகிறது. இனிய வழிகாட்டி நுால்.– முனைவர் மா.கி.ரமணன்