/ வாழ்க்கை வரலாறு / நவரசம் (ஆங்கிலம்)
நவரசம் (ஆங்கிலம்)
பட்டயக் கணக்கரின் வெற்றிகரமான வாழ்க்கை அனுபவத்தை விவரிக்கும் சுயசரிதை நுால். வாழ்வை ஒன்பது ரசானுபவங்களாக எழுத்தில் தருகிறது. நேரடியாக சொல்வது போல் வாழ்வின் அம்சங்கள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.குடும்ப பின்னணி, குழந்தைப் பருவத்து நிகழ்வுகள், பள்ளி, கல்லுாரியில் நடந்த முக்கிய சம்பவங்கள் எளிய நடையில் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு தகவலும் பொருத்தமான புகைப்படங்களுடன் தரப்பட்டுள்ளன. வெற்றிப்படிகளில் ஏறிய நிகழ்வுகள் நம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளன. வாசிப்பால் கற்றுக்கொண்டது, அனுபவங்கள் வழியாக பெற்றுக்கொண்டது என வழிகாட்டியாகதிகிழ்கிறது. வாழ்க்கையில் முன்று முத்தான முதன்மை அம்சங்களையும் குறிப்பிட்டுள்ள சுயசரிதை நுால்.– மதி