/ கதைகள் / நண்பனே! நண்பனே!

₹ 220

நண்பர்களாக வாழ விரும்பி, எதிரிகளாக வாழ்ந்த இருவரின் வாழ்க்கையை கூறும் நாவல். கிராம விவசாயியின் மகனும், நகர வசதி படைத்தவரின் மகனும், சந்தர்ப்பத்தால் பேருந்தில் சந்திக்கிறார்கள். இக்கட்டான நிலையில் உதவியும், உயிரையும் காப்பாற்றும் நட்பாக இருந்த இருவரை, காலம் பிரிக்கிறது.ஒரு கட்டத்தில், எதிரிகளாக மாறும் இருவரின் வாழ்க்கை எப்படி முடிந்தது என சுவாரசியத்துடன் நகர்கிறது கதை. அன்பழகன், கதை நாயகனாக அனைவர் மனதிலும் இடம் பிடிக்கிறார். பணம், பதவி ஒரு மனிதனை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் என விவரிக்கிறது. வேலைவாய்ப்பில், தகுதியான ஏழையை தகர்த்தெறிந்துவிட்டு, எந்த தகுதியும் பெறாத பணம் படைத்தவனை தேர்வு செய்யும் மோசடியை கூறும் நுால்.– -டி.எஸ்.ராயன்


சமீபத்திய செய்தி