/ கட்டுரைகள் / நானி பல்கிவாலா எ மிசெலனி – ஆங்கிலம்

₹ 480

சட்ட நிபுணர் நானி பல்கிவாலாவின் தொகுக்கப்படாத எழுத்துகளின் திரட்டு நுால். அறியப்படாத அரிய தகவல்களை தருகிறது. பல்கிவாலாவின் சொற்பொழிவு, முன்னுரை, தனிக்கட்டுரை, பழைய நினைவுகள், சமகாலத்தவர் மீது வைத்த விமர்சனங்கள் என எண்ணற்ற பதிவுகள் இடம் பெற்றுள்ளன.வருமான வரி, இந்தியப் பண்பாடு, அன்னிய செலாவணி, ஆன்மிகம் சம்பந்தமான கருத்துகளில் பன்முகம் வெளிப்படுவதைக் காண முடிகிறது. நாட்டு நடப்பில் பின்னடைவுகளைக் குறிப்பிடும் குறிப்புகளில், தேசம் மீதான அக்கறையை காட்டுகிறது. தனிநபர் உரிமையை அறம், ஒழுக்கம், பொதுநலம், சமூகப்பொறுப்புடன் பொருத்தி கூறியிருப்பது மனதைக் கவர்கிறது. அரசியல் அமைப்பில் போதிய சீர்திருத்தம் தேவை என வலியுறுத்துகிறது. சொத்துவரி, மக்கள் உரிமை, இறையாண்மை, அவசர சட்டம் மீதான அவரது அச்சமற்ற விமர்சனங்கள் கவனத்தை ஈர்க்கிறது. – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


புதிய வீடியோ