/ வாழ்க்கை வரலாறு / நாகையா என்றொரு நடிகர்

₹ 110

தமிழ் சினிமா வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ள நடிகர் நாகையாவின் வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்துள்ள நுால். படங்களுடன் தரப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மறக்க இயலாத முகம் மறைந்த நடிகர் நாகையாவுடையது. ஆந்திரா பகுதியில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமான நிகழ்வுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. உருக்கமான நடிப்பால் புகழ்பெற்ற இவர், திறன்களை வளர்த்து பிரபலமானது குறித்த விபரங்கள் உள்ளன. வறுமையான குடும்ப சூழலில் பிறந்திருந்த போதும், ஒழுக்கமான நடத்தையாலும், அயராத முயற்சியாலும் புகழின் உச்சிக்கு போனதை கதை போல் விவரிக்கிறது. சுதந்திர போராட்டத்தில் இருந்த ஈடுபாடும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உழைப்பால் உயர்ந்த நடிகரின் வாழ்க்கை வரலாற்று நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை