/ கட்டுரைகள் / மேன்மக்கள்

₹ 120

பிரபலங்களின் கவுரவமிக்க செயல்பாடுகளின் தொகுப்பு நுால். எம்.ஜி.ஆரின் அழைப்பை மறுத்து, ‘உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டால் திரும்பியும் அந்த ருசியை நாக்கு தேடும்; அதனால்தான் வர மறுக்கிறேன்...’ என்று காமராஜர் கூறிய காரணம் சுவை குன்றாமல் விவரிக்கப்பட்டுள்ளது. துறையூர் பெண் சரஸ்வதிக்கு நடக்கவிருந்த பால்ய விவாகத்தை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பரிந்துரையால் தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரி கலியமூர்த்தியின் செயல் பாராட்டுக்குரியது. நாடு சுதந்திரம் பெற்ற அன்று திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோலை, கோளறு பதிகம்பாடி மகுடம் சூட்டிய வரலாற்று நிகழ்வு வியக்க வைக்கிறது. இது போன்ற செய்திகள் அமைந்த நுால். – பின்னலுார் விவேகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை