/ கவிதைகள் / மழையில் நனையும் வெயில்
மழையில் நனையும் வெயில்
சமூகத்தையும், இயற்கையையும் உற்று நோக்கி படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தொழிற்சாலைகளில் சிறுவர் உழைப்பதை அவதானித்து, ‘தீப்பெட்டியில் சிறுமியின் கைரேகை வறுமையின் தடயம்’ என படம் பிடித்துள்ளது. உள்ளாட்சியின் ஊழல் நிர்வாகத்தை, ‘மழையில் சிதறும் சாலையின் பள்ளங்களில் கொஞ்சம் நீலவானம்’ என நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறது. விவசாயிகளிடம் பொறுப்பற்ற முறையில் நடக்கும் அரசை, ‘பருவமழை காலம் கடந்து வருகிறது பயிர்க்கடன்’ என இடித்துரைத்துள்ளது. இயற்கை வளம் சுரண்டப்படுவதை, ‘ஆற்றங்கரை அரித்துக்கொண்டே இருக்கிறது மண்ணள்ளும் இயந்திரம்’ என, படம் பிடிக்கிறது. எளிய சொற்களில் வளர்ச்சியை துாண்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். – மதி




