/ மாணவருக்காக / மாணவ சமுதாயமே! தோல்விகளை எதிர்கொண்டு வெற்றியைப் பெறுவோம்!
மாணவ சமுதாயமே! தோல்விகளை எதிர்கொண்டு வெற்றியைப் பெறுவோம்!
வருங்கால இந்தியாவை உருவாக்கும் மாணவர் சமுதாயமும், இளைஞர் சமுதாயமும், தேர்விலும், வாழ்விலும் தோல்வியை சந்திக்கும்போது, துவண்டு விரக்தியடைவதை தடுக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். விடாமுயற்சியின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறது.தோல்விகளையும் சோதனைகளையும் சந்தித்து, சாதனை படைத்த தலைவர்கள், விஞ்ஞானிகள், தொழில் அதிபர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை முன்மாதிரியாக எடுத்துக்காட்டி, அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது. வாழ்வில் எந்த சூழ்நிலையிலும், வெற்றி இலக்கை அடைவது தான் மனிதனின் முக்கிய கொள்கை என உணர்த்துகிறது. நம்பிக்கையும், மன உறுதியும், எதிர்நீச்சல் போடும் எண்ணத்தையும் வளர்க்கும் நுால்.– வி.விஷ்வா