/ அரசியல் / மனதின் குரல் 100ஆவது உரை தொகுதி – 6

₹ 400

பிரதமர் நரேந்திர மோடி, வானொலியில் பேசும் ‘மனதின் குரல் நிகழ்வின் தொகுப்பாக அமைந்துள்ள நுால். நாட்டின் முன்னேற்றம் குறித்து மக்களிடம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் உள்ளது.உணர்வும், ஊக்கமும் அளிக்கும் கதைகள், மகளிர் சுய முன்னேற்றம், சுத்தம், சுகாதாரம், யோகா, விளையாட்டு சாதனைகள், ராணுவ வீரர்களின் சாகசம் என அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதனை தொகுப்பாக உள்ளது. பத்ம விருது பெற்ற பாபா சிவானந்தரின் உடலுறுதி, மஹாராஷ்டிரா கிஷோரின் துாய்மைப் பணி, மின் சக்தியைப் பயனுற கையாண்ட காஞ்சிபுரம் எழிலன், குஜராத் விபின்ஜி, வர்ஷாபேஸ் என பலருடன் பிரதமர் உரையாடிய நிகழ்வுகள் பதிவிடப்பட்டு உள்ளன.– புலவர் சு.மதியழகன்