/ கதைகள் / மனங்கள் + மனிதர்கள் = கதைகள்
மனங்கள் + மனிதர்கள் = கதைகள்
உளவியல் ஆலோசகரின் அனுபவ தொகுப்பு நுால். ஏராளமான சம்பவங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான பிரச்னை. சில மிகவும் வேடிக்கை, வினோதமானவை. கட்டுப்பாடற்ற சிக்கலான, எல்லை மீறி சென்ற சம்பவங்களைக்கூட, அறிவால், அனுபவத்தால் அமைதியாக கையாண்டு தீர்வு தந்த விதம் வியப்பு ஊட்டுவதாக உள்ளது. சைக்கோ காதலனால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எத்தகைய தீர்வு தரப்பட்டது என்பது பகுத்தறிவை பறைசாற்றும் விதமாக உள்ளது. வெட்டி பந்தாவுக்காக வீண் செலவு செய்த மனைவியை திருத்திய ஆலோசனை, வழிகாட்டுதல் சிலிர்க்க வைப்பதாக உள்ளது. வாழ்க்கையில் வசந்தத்தை அனுபவிக்க எண்ணுவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நுால். – டாக்டர் கார்முகிலோன்




