/ வாழ்க்கை வரலாறு / கொங்கே முழங்கு படைப்பாளிகள்
கொங்கே முழங்கு படைப்பாளிகள்
கொங்கு பகுதியில் வாழும் படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் நுால். படைப்பு நடைமுறை வாழ்க்கை அனுபவங்களாக பதிவாகியுள்ளன.தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் எழுத்தாளர்களை நேர்முகம் செய்து, தகவல்களை சேகரித்து கட்டுரைகளாக தயாரிக்கப்பட்டுள்ளன. கவிஞர்கள் சக்திக்கனல், சிற்பி, எழுத்தாளர்கள் பெருமாள்முருகன், விமலாரமணி என பிரபலங்களின் வாழ்க்கை சுருக்கமாக இடம் பெற்றுள்ளது. இலக்கியத்தில் ஆர்வம் முதல், எழுதும் சூழலை அமைத்தது வரை பயனுள்ள தகவல்கள் உள்ளன.கோவை பகுதியில் குடியேறியுள்ள படைப்பாளிகள் பற்றிய விபரங்களும் இடம் பெற்றுள்ளன. பிரபல எழுத்தாளர் நாஞ்சில்நாடன் உட்பட பலர் இதில் இடம் பெற்றுள்ளனர். படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் அரிய நுால்.– மதி