/ கதைகள் / கங்கன் மகள்

₹ 280

பரந்து விரிந்த சோழ சாம்ராஜ்யம், பல்லவ மன்னன் நிரூபதுங்கன் காலத்தில் கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்ததாக துவங்கும் நாவல். நிரூபதுங்கன், வரகுண பாண்டியனை, சோழ நாட்டின் மீது படையெடுக்கத் துாண்டியதை பேசுகிறது. பல்லவ மன்னனின் பிரதான சேனாதிபதி பீமசளுக்கியின் வீரத்தைக் கண்டு அஞ்சியே பலர் அபராஜிதன் பக்கம் சேரத் தயங்கினர். இக்கட்டான சூழலில் சன்னியாசம் பூண்டிருந்த ஆதித்த சோழனின் இளவல் கரிகாலன் மீது, எதிர்பாராத நிகழ்வாக கங்கன் மகள் பானுமாலினி மையல் கொண்டாள். வீரத்தின் விளைநிலமாக பீமசளுக்கியை வீழ்த்தி, பானுமாலினியை மணம் முடித்தது பற்றி புனையப்பட்டுள்ள நாவல் நுால்.– புலவர் சு.மதியழகன்