/ வாழ்க்கை வரலாறு / ஜெய் அம்பேத்கார்!

₹ 140

அரசியல் சட்டம் உருவாக்கிய அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நுால். மஹாராஷ்டிர மாநில பெருமையோடு துவங்குகிறது. தீண்டாமை கொடுமை தலை விரித்தாடிய அவலம் விளக்கி சொல்லப்பட்டுள்ளது. அம்பேத்கர் தடைகளை தகர்த்தது விவரிக்கப்பட்டு உள்ளது. பீமா ராவ் பெயர் அம்பேத்கர் ஆனது பற்றி சுவைபட சொல்லப்பட்டுள்ளது. ஜாதி வெறியை விரட்டியது நயம்பட உரைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களையும் எடுத்துரைக்கிறது. படிப்பும், வாசிப்பின் மீது கொண்டிருந்த பேரார்வமும் விரிவாக சொல்லப்பட்டு உள்ளது. வெளிநாட்டிலிருந்து திரும்பும் போதெல்லாம், பெட்டி பெட்டியாக புத்தகங்களோடு வந்ததை உறுதிப்படுத்துகிறது. மாமனிதர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு சுவையாக விளக்கப்பட்டுள்ள நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை